சிவகங்கை: தமிழகத்தின் அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்ததினத்தையொட்டி, அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாலை அணிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்தந்தப் பகுதி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சரித்திரத்தை 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது தமிழக மக்கள் ஊழல், போதை பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். 2026 தேர்தலில் ஊழல், நிர்வாக குறைபாடுள்ள அரசை எதிர்த்து மட்டுமல்ல, போதையையும் தடுக்கத்தான் வாக்களிக்க வேண்டும். அதிகமாக போதை புழக்கமுள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முன்பாக போதைப் பொட்டலங்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ்,…
Author: admin
உங்கள் இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகள் ஓரளவு அல்லது முழுமையாக தடுக்கப்படும்போது (கொலஸ்ட்ரால் கட்டப்படுவதால்) மாரடைப்புக்கு வழிவகுக்கும் போது இதய அடைப்பு ஏற்படுகிறது. உலகளவில், இதய நோய் உலகில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும், இது ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும். துரதிர்ஷ்டவசமாக, வழக்கமான சோதனைகள் இல்லாமல், இதய நோய் கண்டறிய தந்திரமானதாக இருக்கும், மேலும் திடீர் மாரடைப்பு ஆபத்தானது. இரத்த பரிசோதனைகள், ஈ.சி.ஜிக்கள் மற்றும் ஆஞ்சியோகிராம்கள் இதய நிலையை கண்டறிய சிறந்த வழிகள் என்றாலும், நீங்கள் வீட்டிலும் கவனிக்கக்கூடிய இரண்டு எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்த 3 ஐ நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் விரைந்து செல்லுங்கள் … (ஆதாரம்: drjeremylondon)மார்பு வலி மற்றும் இறுக்கம்இதய அடைப்பின் மிகவும் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி அல்லது இறுக்கம். இந்த வலி பெரும்பாலும் அழுத்தம், அழுத்துதல், கனமானது அல்லது மார்பைச் சுற்றி ஒரு இறுக்கமான இசைக்குழு போல…
ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை, அவரது மனைவி சோனம் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கு குறித்து…
இந்திப் பட இயக்குநரான விவேக் அக்னிகோத்ரி, ‘த தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ என்ற படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து அவர் இயக்கி, 2022-ம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் ‘த வேக்ஸின் வார்’ என்ற படத்தைக் கடந்த ஆண்டு இயக்கினார். இது அதிகம் பேசப்படவில்லை. இப்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்: த பெங்கால் சாப்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பை, ‘த பெங்கால் ஃபைல்ஸ்: ரைட் டூ லைஃப்’ என்று மாற்றியுள்ளார். இதைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ள விவேக் அக்னிகோத்ரி, இதன் டீஸர், நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: புனேயில் இருந்து 178 பயணிகளுடன் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புனேயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 178 பயணிகளுடன் நேற்று அதிகாலை சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. விமானம் அதிகாலை 1.10 மணியளவில், சென்னையில் தரையிறங்குவதற்காக படிப்படியாக பறக்கும் உயரத்தை குறைத்து தாழ்வாக பறந்தது. கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி அடிக்கப்பட்டது. விமானத்தை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டதால் விமானி, விமானத்தை மீண்டும் உயர பறக்க செய்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், சென்னை விமான நிலைய காவல் நிலையம் மற்றும் விமான பாதுகாப்புத் துறையான பிசிஏஎஸ் எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகம் ஆகியவற்றுக்கும் அவசரமாக, தகவல் தெரிவித்தனர். அந்த லேசர் லைட் ஒளி…
ஆரோக்கியமான கல்லீரலுக்கு உங்கள் வழியைப் பருகுவதாக கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கக்கூடிய சில திரவங்களை எடுத்துக்கொள்வது கொழுப்பு கல்லீரலைக் குறைக்க உதவும் என்பதை அறிந்து ஒருவர் அதிர்ச்சியடைவார். விஞ்ஞானத்தால் ஆதரிக்கப்படுவது, சில இயற்கை பானங்கள் – கிரீன் டீ, பீட்ரூட் சாறு மற்றும் கருப்பு காபி போன்றவை கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதிலும் ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதையும் உறுதிப்படுத்துகின்றன. உங்கள் கல்லீரலைக் குணப்படுத்தக்கூடிய இதுபோன்ற ஐந்து பானங்களை உற்று நோக்கலாம், சிப் மூலம் சிப்.பச்சை தேநீர்கிரீன் டீ பணக்கார ஆக்ஸிஜனேற்றங்களால் ஏற்றப்படுகிறது, குறிப்பாக கேடசின்கள், இது கல்லீரல் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கலவைகள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலமும், கல்லீரல் உயிரணுக்களில் சேமிக்கப்பட்ட கொழுப்பைக் குறைப்பதன் மூலமும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.ஒருவர் தினமும் 2-3 கப் பயன்படுத்தினால், இது கல்லீரல் நொதி அளவைக் குறைக்கவும் எடை நிர்வாகத்தை…
கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்… ஒரு புதிய பாரதம் உருவாகிறது – இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார். ஹரியானாவில் உள்ள ஜக்தேவ் சிங், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியைப் பயன்படுத்தி தனது விளைபயிர்கள் தொடர்பான முடிவுகளை மேற்கொண்டார். புகையில்லா சமையலறையையும், தனது குழந்தைகளுடன் பயனுள்ள வகையில் கூடுதல் நேரத்தை செலவிடுவதையும் உறுதிசெய்யும் வகையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றார். இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள், சிறு நகரங்கள், பெரு நகரங்களில் இவை அன்றாட எதார்த்தங்களாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் கட்டமைப்பு சீர்திருத்தங்களிலும், கடைசி குடிமகனுக்கும்…
அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரவீன் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைக்கிறார். ஜெர்ரிஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் ஜெர்ரி கூறும்போது, “கிரிக்கெட் விளையாடச் செல்லும் நண்பர்கள் எதிர்பாராத சூழல் ஒன்றில் சிக்குகிறார்கள். அவர்கள் அதிலிருந்து தப்பினார்களா, இல்லையா? என்பது கதை. தமிழில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டதாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தில் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் அடுக்குமாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கட்டிடத்துக்கு உள்ளே மெட்ரோ ரயில் சென்று வெளியே வரும் வகையில், 9 அடுக்குமாடி கட்டிடத்தின் மாதிரி புகைப்படங்களை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் 5-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் திருமங்கலம் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம், வணிக வளாகத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளனது. 9 மாடிகளை கொண்ட ஏ, பி, சி என 3 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.…
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதன் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதேபோல், மனநல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கடைகளில் சட்டவிரோத விற்பனை நடந்திருப்பதை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகள் மூலம் தெரியவந்தது. மேலும், அடிமைப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து விற்பனை செய்து வருபவர்கள் மீது சட்ட…
