அதர்வா நடித்திருக்கும் ‘டிஎன்ஏ’, வரும் 20-ம் தேதி வெளியாகிறது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பற்றி அதர்வாவிடம் பேசினோம். ‘டிஎன்ஏ’ என்ன மாதிரியான கதையை பேசுது? இது ஃபேமிலி ஆடியன்ஸை குறி வச்சு எடுத்திருக்கிற படம். சமூகத்துல புறக்கணிக்கப்படற இரண்டு பேர், ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க. அவங்க என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்றாங்க அப்படின்னு கதை போகும். அதாவது, நெகட்டிவ் பிளஸ் நெகட்டிவ், பாசிட்டிவ்-னு சொல்றதுதான் இந்தப் படத்தோட லைன். இன்னும் விளக்கமா சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். கதை சொல்றதுலயும் அதை படமாக்கறதுலயும் சில இயக்குநர்கள் தனித்துவமா தெரிவாங்க. அதுல இயக்குநர் நெல்சன் வெங்கடேசனையும் சேர்த்துக்கலாம். ஷூட்டிங் நேரத்துல அது தெரியல. படமா பார்க்கும்போது அதை வேற மாதிரி கொண்டு வந்திருக்கிறார். முதன்முறையா இதுல ஒரு குழந்தைக்கு…
Author: admin
சென்னை: ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சேர்த்துள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: ஐ.சி.சி.யின் பெருமைமிகு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துக்கள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐ.பி.எல். கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள். உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக…
சென்னை: ‘இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக தமிழகம் திகழ்கிறது’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவு பணிகளை உருவாக்க ‘தமிழ் ஏஐ’ எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா மற்றும் டெபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. அதன்படி தமிழ் செயற்கை நுண்ணறிவு (தமிழ் ஏஐ) திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: இந்திய மொழிகள், குறிப்பாக தமிழ் மொழி ஏஐ துறையில் ஒருங்கிணைக்கப்படுவதில் இத்திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த திட்டத்தில் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கணினி வசதிகள் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம்…
ஒருவர் அதைப் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் எங்கள் குளியலறைகள் மிகவும் ஆபத்தான பொருட்களை மறைத்து, சுகாதாரப் பொருட்களாக மாறுவேடமிட்டு, நாங்கள் தினமும் பயன்படுத்துகிறோம். ஒரு பல் துலக்குதல் போன்ற எளிமையான ஒன்று கற்பனை செய்ய முடியாத வழிகளில் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆம், அது உண்மைதான்.தனது மருத்துவ நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டே இருக்கும் ஒரு அறியப்பட்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, நமது சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் உடலை ஒன்றாக இணைக்கும் பரபரப்பான ஒன்றைக் கொண்டு வந்தார். சில குளியலறை பொருட்கள் நம் தோல், உடல் மற்றும் வாய்க்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், உடனே எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றி அவர் பேசுகிறார்.”நீங்கள் ASAP ஐ தூக்கி எறிய வேண்டிய 3 நச்சு குளியலறை பொருட்கள்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டார், இந்த வீடியோவில், அவர் மூன்று…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் 11 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அவர், தனது 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதைப் பாராட்டும் வகையில் நாட்டின் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வகையில், பாஜகவின் முக்கிய மாநிலமான உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. உ.பி தலைநகரான லக்னோவின் பாஜக அலுவலகத்தில் இக்கண்காட்சியை முதல்வர் யோகி திறந்து வைத்தார். அப்போது அவர் பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிட்டு பாராட்டினார். இது குறித்து முதல்வர் யோகி ஆற்றிய உரை பின்வருமாறு: தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடி இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட நிலையற்ற…
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 -ல் வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தாமதமானால் பேசிய தொகையை குறைத்து விடுவதாக பிரைம் வீடியோ நிறுவனம் மிரட்டியதாகத் தயாரிப்பாளர் சுனில் நரங் தெரிவித்துள்ளார். “போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக, ஓடிடி நிறுவனத்திடம் ஜூலையில் ரிலீஸ் செய்யலாம் என்றேன். அவர்கள், ‘ஒப்பந்தப்படி ஜூன் 20-ம் தேதி படம் வெளியாக வேண்டும். இல்லை என்றால் ஒப்பந்தம் செய்த தொகையில் ரூ.10 கோடி குறைத்து விடுவோம்’ என்று கூறினர். ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அதிகாரத்துக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் விருப்பப்படியே…
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று (ஜூன் 11) சேலம் மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: கரோனா பேரிடரின்போது, அசாதாரண சூழ்நிலையில் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவர்களுமே என்பது அனைவருக்கும் தெரியும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு…
சென்னை: விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் உயிரி உரங்களை கோத்தாரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள், உயிரி-உரங்கள் மற்றும் திரவ உரங்களை தயாரித்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜே.ரபீக் அகமது, நிர்வாக துணை தலைவர் கார்த்திகேயன், ஆலோசகர் ஜெயந்த் முரளி ஆகியோர் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர். மேலும், ட்ரோன் சாதனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்க விவசாயிகள் பதிவு செய்வதற்கான பிரத்யேக செயலியையும் (Tech Kothari), ஹெல்ப்லைன் வசதியையும் (9095290953) அறிமுகம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்…
அதிக மரியாதை சம்பாதிப்பது எப்படிபெரும்பாலான மக்கள் மதிக்கப்பட விரும்பினாலும், பலர் அதை சம்பாதிப்பதற்குப் பதிலாக கோருகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், மரியாதை பெரும்பாலும் சுய மரியாதையுடன் தொடங்குகிறது. உங்களை நீங்களே மதிக்கும்போது, மற்றவர்களும் செய்கிறார்கள். எனவே, உண்மையான மரியாதை சம்பாதிக்க சில எளிய ஆனால் சக்திவாய்ந்த வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.
புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A)-லிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஃபால்கன் 9-இன் ஆக்சியம் ஸ்பேஸின் ஆக்சியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) ஏவுதலில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ் விலகுகிறது. ஃபால்கன் 9 ஏவுகணையின் நிலையான தி பூஸ்டர் ஆய்வுகளின் போது அடையாளம் காணப்பட்ட LOx கசிவை சரிசெய்ய ஸ்பேஸ்-எக்ஸ் குழுக்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்த பணி முடிந்ததும், நாங்கள் ஒரு புதிய ஏவுதல் தேதியைப் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ…
