அமெரிக்க தென்மேற்குக்கு மேலே ஒரு பெரிய, 1,000 அடி அகல யுஎஃப்ஒவை வட்டமிடுவதைக் காண்பிக்கும் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது யுஎஃப்ஒ வெளிப்படுத்தல் “கைவினை” பறக்கும் தட்டுகளை விட விவசாய நிலத்தைப் போலவே இருப்பதாகக் கூறும் விமர்சகர்களால் உடனடியாக கேலி செய்யப்படுவதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய முன்னாள் பென்டகன் இன்சைடர் லூயிஸ் “லூ” எலிசோண்டோ வியாழக்கிழமை வாஷிங்டன் டி.சி. அறிவியல், தேசிய பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு. “FL210 இல் நான்கு மூலைகளுக்கு அருகில் கைப்பற்றப்பட்டு, 600–1,000 அடி விட்டம், வெள்ளி-ஹூட், வட்டு வடிவத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது,” X இல் UAP வெளிப்படுத்தல் நிதியம் வெளியிட்டுள்ள அதனுடன் கூடிய தலைப்பைப் படியுங்கள்.2021 ஆம் ஆண்டில் வணிக விமான விமானி எடுத்ததாகக் கூறப்படும் இந்த புகைப்படம், ஒரு வெள்ளி வட்டு கீழே பூமியில் ஒரு பெரிய நிழலைக் காட்டுவதைக் காட்டுகிறது.எலிசோண்டோ படம் ஒரு “சிவில்-தர” கேமராவுடன் எடுக்கப்பட்டதாகவும், “இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அவர் உறுதிப்படுத்த முடியாது…
Author: admin
புதுடெல்லி: தற்போதைய நிலையில் 1700 பண மோசடி வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளதாக அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது: அமலாக்கத் துறை (இடி) விசாரணை நடத்தி வரும் 1700 பண மோசடி வழக்குகள் தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளன. இடி தொடர்ந்த 47 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. மூன்று பேர் மட்டுமே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஎம்எல்ஏ-வின் கீழ் பதியப்பட்ட 1,739 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன. பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதி அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே பொதுவான காரணமாக இருக்கலாம். அமலாக்கத் துறையை பொருத்தவரையில் தனது விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தடயவியலையும் பயன்படுத்தும். இவ்வாறு ராகுல் கூறினார். அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இது, கடந்த 1956-ம் ஆண்டு மே 1 அன்று தொடங்கப்பட்டது.
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்ததுடன், அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் சாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசின் முடிவை மனதார வரவேற்கிறேன். விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இது விசிக உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்கு…
வழக்குகள், ஸ்வாகர் மற்றும் நட்சத்திர சக்தி: கே-பாப் பெண் சிலைகள் முதலாளி ஆற்றலை வழங்குகின்றன
புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரியை சேகரிக்க என்ஐஏ-வுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10-ல் 9 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். உயிருடன் பிடிபட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரி்க்காவிலிருந்து கடந்த மாதம் அழைத்துவரப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர்ஜித் சிங் ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், ராணாவின் குரல் மற்றும் கையெழுத்து மாதிரியை சேகரிக்க என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி…
சென்னை: ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவின் எல்பிடபிள்யூ ரிவ்யூ சார்ந்து டிவி அம்பயரின் முடிவு சமூக வலைதளத்தில் விவாதமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். இந்த ஆட்டத்தில் 100 ரன்களில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மும்பை பேட் செய்த போது 2-வது ஓவரை ராஜஸ்தான் வீரர் பசல்ஹக் ஃபரூக்கி வீசினார். அந்த ஆட்டத்தின் 5-வது பந்தை எதிர்கொண்ட ரோஹித், பந்தை மிஸ் செய்ய, பந்து அவரது காலில் பட்டது. உடனடியாக கள நடுவர் அவுட் கொடுத்தார். அதையடுத்து ரோஹித் அந்த முடிவை டிஆர்எஸ் முடிவுக்கு…
உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு மும்பையில் நேற்று தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமவுலி பேசும்போது: “உலகின் வேறு எந்த நாடும் இவ்வளவு துடிப்பான மற்றும் வளமான கதை சொல்லும் கலாச்சாரத்தைக் கொண்டிருப்பதில் இந்தியாவை நெருங்கவில்லை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைசொல்லிகளின் பூமியாக இருந்து வருகிறது. பண்டைய புராணங்கள் மற்றும் இதிகாச நூல்களிலிருந்து லட்சக்கணக்கான கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உண்டு.…
சென்னை: பட்டியலின மாணவி கருக்கலைப்பின்போது உயிரிழந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு எஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த நிலையில் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழு தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை: அந்த புகாரில், ‘பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவியை உதவிப் பேராசிரியர் ராஜேஷ்குமார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கருக்கலைப்பு…
புதுடெல்லி: பிரபல பாகிஸ்தான் நட்சத்திரங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒருவர் இந்த நடிகர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. பாகிஸ்தான் நடிகர்களான பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா கான், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நட்சத்திரம் ஃபவாத் கானின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்ந்து அணுக முடிகிறது. என்றாலும் அவர் நடித்த ‘அபிர் குலால்’ திரைப்படத்தின் வெளியீடு பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இழுபறியில் உள்ளது. பாடகர்கள் அதிஃப் அஸ்லாம், ஃபர்ஹான் சயீத்,…
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தற்போது தான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் என்ன என்பது குறித்து ஆர்சிபி அணியின் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. அது இப்போது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், அது தமிழ் திரைப்பட பாடல். அந்த வீடியோவில் இப்போது எனது ஃபேவரைட் பாடல் என்ன என்பதை அறிந்து ‘நீங்கள் ஷாக் ஆவீர்கள்’ என விராட் கோலி சொல்கிறார். தொடர்ந்து ‘நீ சிங்கம் தான்’ என சொல்லி, தனது போனில் உள்ள ஆடியோ ஆல்பத்தை கேமரா கண்களுக்கு காட்டி இருந்தார். தற்போது கோலி விரும்பி கேட்கும் பாடல் ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ சிங்கம் தான்’ பாடல். சிலம்பரசன் நடிப்பில் கடந்த 2023-ல் இந்த படம் வெளியானது. இதை ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காக இந்தப்…
