ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்காதே’. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினை, தணிக்கை பிரச்சினை என பல்வேறு தடங்கல்களால் வெளியாகாமல் இருந்தது. தணிக்கை பிரச்சினை சரியாகிவிட்ட பிறகும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினையும் பேசி தீர்க்கப்பட்டு, ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்ரீக்ரீன் நிறுவனம் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று தயாரிப்பாளர் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
Author: admin
சென்னை: ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஏப்.30-ம் தேதியன்று 3.49 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச் சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்-அப், பேடிஎம் செயலி, போன்பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம்…
இம்பால்: கடந்த 2023, மே 3ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய பகுதிகளான இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களின் தலைநகரங்களில் போலீஸார் தீவிர சோதனை மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இம்பாலின் குமான் லம்பாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில், அதிலும் குறிப்பாக சனிக்கிழமையன்று சமூக விரோதிகளால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். மைத்தேயி சமூக அமைப்பான, மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புத் குழு, மே 3-ம் தேதி அனைத்து வேலைகளையும் நிறுத்திவைத்து விட்டு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குகி மாணவர்கள் அமைப்பு மற்றும் சோமி மாணவர்கள் கூட்டமைப்பு…
சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழக அளவில் ரூ.17.75 கோடியையும், இந்திய அளவில் சுமார் ரூ.20 கோடியையும் வசூல் செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1-ல் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ‘ரெட்ரோ’ முதல் நாளில் ரூ.17.75 லட்சம் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.20 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. ‘கங்குவா’ உடன்…
சென்னை: சிவகிரி அருகே தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தொடர் படுகொலைகளை திமுக அரசால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி…
திருவேற்காடு: பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை இந்து சமய…
சென்னை: சாம்சங் விவகாரத்தில் தொழிலாளர் துறை சரியாக நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் சம்பவத்தை சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தக் கூடாது. சிந்து நதி நீரைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் 4.50 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 70 சதவீத மக்களின் குடிநீர் தேவையை சிந்து நதி நீர் பூர்த்தி செய்கிறது. சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு தர மாட்டோம் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, வரி உயர்வை எதிர்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 29…
ஒவ்வொரு ‘இட்’ பெண்ணின் அலமாரிகளிலும் இது அவசியம் வாங்க வேண்டும், மேலும் ஜான்வி கபூர் வேறுபட்டதல்ல. திவா ஒரு ஜோடி கருப்பு மோனோக்ரோம் ஜிம் கிளாசிக் அணிந்திருந்தார், இது ஒரு பயிர் மேல் மற்றும் ஷார்ட்ஸ் கலவையை உள்ளடக்கியது, அது அவளது சுத்த பேனலிங் மூலம் உயர்த்தப்பட்டது. குறுகிய நிகர ஸ்லீவ்ஸுடன் மேலே வந்தது, மேலும் ஜிம் ஷார்ட்ஸில் அவற்றின் வெள்ளை புறணி ஒரு முழுமையான மேலடுக்கு இடம்பெற்றது. பெருமையுடன் தனது வயிற்றைக் காட்டி, ஒரு தைரியமான துணை தொடுதலைச் சேர்த்து, தனது கருப்பு சேனல் ஸ்லிங் கைப்பை எடுத்துச் சென்றார். ஒரு நீண்ட ஸ்லிங் ஷோ, வசதியான நிழல், விசாலமான உள்ளே, மற்றும் சின்னமான தோற்றத்துடன், இது ஜிம் ரன்களுக்கு வழக்கத்திற்கு மாறான தேர்வாக இருக்கலாம், ஆனால் ஜான்வி கபூர் தனது இடப்பட்ட ஆடை மற்றும் ஆன்-பாயிண்ட் துணை தேர்வு மூலம் தோற்றத்தை ராக் செய்வதை நிரூபித்தார்.(பட வரவு: Pinterest)
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை நடப்பாண்டில் கான்பூர் ஐஐடி நடத்துகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. எனவே, தகுதியான மாணவர்கள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பிரதானத் தேர்வு இரு தாள்களாக காலை,…
சென்னை: உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது மற்றும் 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 2) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தமிழகத்தில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதினையும், டிஎன்பிஎஸ்சி மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மூன்று நபர்களுக்கு நம்மாழ்வார் விருது வழங்குதல்: 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் இயற்கை வேளாண்மையை…
