Author: admin

கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர். திருச்சி அணி தரப்பில் அதிசராஜ் டேவிட்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சாக ஜெகதீசன் கவுசிக் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், ராஜ் குமார் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் விளாசினர். பொய்யாமொழி வீசிய…

Read More

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். காரியாபட்டி அருகே உள்ள வடகரையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் முருகன் (45), பிச்சையம்மாள்…

Read More

கல்லீரல் உடலின் மிகப்பெரிய திட உறுப்பு ஆகும், இது இரத்தத்தை வடிகட்டுதல், ஊட்டச்சத்துக்களை செயலாக்குதல், ஆற்றலைச் சேமித்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நச்சுத்தன்மையாக்குவது போன்ற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. ஆரோக்கியமான உணவு, வரையறுக்கப்பட்ட அல்லது ஆல்கஹால் போன்ற நல்ல பழக்கங்களைப் பின்பற்றும்போது, ​​கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க மற்றவர்கள் முக்கியமாக இருக்கும்போது, ​​சில நேரங்களில் இவை போதாது. இந்த நாட்களில் கல்லீரல் பாதிப்பு பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது, மேலும் கல்லீரலின் சரியாக செயல்படும் திறனை பாதிக்கும் பரந்த அளவிலான நிலைமைகளை உள்ளடக்கியது. இது வைரஸ் தொற்று, ஆல்கஹால் நுகர்வு, மரபணு நிலைமைகள் மற்றும் பிற காரணிகளால் இருக்கலாம். மற்ற அறிகுறிகளுக்கிடையில், கல்லீரல் உங்கள் சருமத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு உங்களை சோதித்துப் பார்ப்பது நல்லது …தோலின் மஞ்சள் (மஞ்சள் காமாலை)கல்லீரல் நோயின் மிகவும் பிரபலமான அறிகுறிகளில் ஒன்று சருமத்தின்…

Read More

நாசா-அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி மெனுவில் இப்போது வறுக்கப்பட்ட கோழி, சாக்லேட் புட்டு மற்றும் தக்காளி பசில் சூப் ஆகியவை அடங்கும்; இந்த இந்திய மூல விஞ்ஞானிக்கு நன்றி விண்வெளி பயணம் இனி உயரடுக்கு விண்வெளி வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, ஆனால் பெருகிய முறையில் தனியார் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை உள்ளடக்கியது, உயர்தர, சத்தான மற்றும் சுவையான உணவின் தேவை முன்னெப்போதையும் விட அழுத்தமாகிவிட்டது. கலோரி அடர்த்தியான கஞ்சி நிரப்பப்பட்ட சாதுவான, பயன்பாட்டு பைகளின் நாட்கள் முடிந்துவிட்டன. அதன் இடத்தில் ஒரு புதிய தலைமுறை நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர் பாணி உணவுகள் உள்ளன, இது ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமல்லாமல், விண்வெளி வீரர்களின் மாறுபட்ட சமையல் பாரம்பரியங்களையும் பிரதிபலிக்கிறது.இந்த பரிணாம வளர்ச்சியின் மையத்தில் பேராசிரியர் சுரேஷ் பிள்ளை, ஒரு இந்திய மூல அமெரிக்க உணவு விஞ்ஞானி, நாசாவின் சமையல் நிலப்பரப்பை மாற்ற உதவியது. உடன் ஆக்சியம்…

Read More

சவுத்தாம்ப்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஜேமி ஸ்மித் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது. ஜாஸ்பட்லர் 10, கேப்டன் ஹாரி புரூக் 35, ஜேக்கப் பெத்தேல் 36 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்போர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 249 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு…

Read More

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் உள்ள ராஜசந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் முருகன் (45), பிச்சையம்மாள் (43), கணேசன் (43), மாரியம்மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உரிமம் ரத்து: விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் இன்று உனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார்…

Read More

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளது அந்த அணியின் உரிமையை தன்வசம் வைத்துள் Diageo. இந்நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தை மற்றும் அந்த பங்குச் சந்தையின் கண்காணிப்புத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது அந்நிறுவனம். தங்கள் அணியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஊகம் மட்டுமே என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. “ஆர்சிபி அணியை விற்பனை செய்ய திட்டம் என வெளியான தகவல் வெறும் ஊகம் மட்டுமே. எங்கள் நிறுவனம் அது தொடர்பாக எந்தவொரு விவாதத்தையும் முன்னெடுக்கவில்லை. இதை தங்களது தகவலுக்காக தெரிவித்து கொள்கிறோம்” என பங்குச் சந்தை ஒழுங்குமுறை தரப்புக்கு Diageo நிறுவன செயலாளர் மிட்டல் சங்வி தெரிவித்துள்ளார். ஆர்சிபி…

Read More

உயர் யூரிக் அமிலம், ஹைப்பர்யூரிசீமியா என்றும் அழைக்கப்படுகிறது, இது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு உயர்த்தப்படும் ஒரு நிலை. இந்த நிலை வேதனையாக இருக்கலாம், சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும், அது மிகவும் சங்கடமாக இருக்கும். மருந்துகளைத் தவிர, எங்கள் குளிர்சாதன பெட்டிகளுக்குள் பார்த்தால், உயர் யூரிக் அமிலம் உட்பட நிறைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதைக் காணலாம். நாள் முடிவில், ஒரு நல்ல மற்றும் சீரான உணவு என்பது நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எங்களுக்கு எப்போதுமே ஆடம்பரமான சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை தேவையில்லை – சரியான அளவில் உணவை உட்கொள்வது மற்றும் நாளின் சரியான நேரத்தில், உடலில் உயர் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவும். உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் ஆறு உயர் நார்ச்சத்து காய்கறிகள் இங்கே.வெள்ளரிகள்வெள்ளரிகள் அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன, இதன் காரணமாக அவை அதிகரித்த சிறுநீர் கழித்தல் மற்றும் நச்சுத்தன்மை மூலம் உடலில்…

Read More

புதுடெல்லி: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததோடு, கொலையை நேரில் பார்த்த குற்றச்சாட்டில் சோனம் ரகுவன்சி கைதாகி உள்ளார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை சோனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவலர்களிடம் சோனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் கைதாகி உள்ள ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. >>விரிவாக வாசிக்க முதலில் கொள்ளை வழக்கு போல ஜோடிப்பதற்கு சோனம் முயன்றார். காவல் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போதும் அதையே தான் சொல்லி உள்ளார். முன்னதாக, காசிப்பூரில் இருந்து ஷில்லாங் வரையில் போலீஸார் உடனான பயணத்தில் அவர் கனத்த மவுனம் காத்துள்ளார். இந்த சூழலில்தான் அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களை ஷில்லாங் போலீஸார்…

Read More

மதுரை: விருச்சுழி ஆற்றில் கருவேல மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிவகங்கை ஆட்சியருக்கு மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை திருப்புத்தூரைச் சேர்ந்த சின்னையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை மாவட்டம் பொன்னாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள விருச்சுழி ஆற்றில் முழுவதுமாக சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பிலான ஆறு , கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. பொன்னான்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, திருநாவுக்கரசு ஆகியோர் சட்டவிரோதமாக கருவேல மரங்களை வெட்டி விற்கின்றனர். சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்கள் இப்பகுதியிலுள்ளள நிலையில் இவற்றை வெட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை. சிவகங்கை ஆட்சியர் தரப்பில் கருவேல மரங்களை வெட்ட டெண்டர் விட்டால் அரசுக்கு வருமானம் வரும். வெள்ளைச்சாமி, திருநாவுக்கரசு இருவரும் இணைந்து தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சத்திற்கு…

Read More