லார்ட்ஸ்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. 20 பந்துகளை சந்தித்த உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் காகிசோ ரபாடா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற பெடிங்ஹாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் இதே ஓவரின் கடைசி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையை கட்டினார். ஒரே ஓவரில் ரபாடா கைப்பற்றிய இந்த 2 விக்கெட்களும் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிக்க பந்துவீச்சை சமாளித்து சீராக ரன்கள்…
Author: admin
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது, 93.47 டிஎம்சி நீர் தேங்கி இருக்கும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து,…
ஸ்டட்கர்ட்: ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் பாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7 (5), 6-7 (5) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறுகையில், “ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த தவறும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கம் 7..5 சதவீதமாக இருக்கும்” என்றார். வரும் புதிய நிதியாண்டுக்கான (2025 ஜூலை -26 ஜூன்)பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2.12 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2.55 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ராணுவ ஓய்வூதியங்களுக்கான 742 பில்லியன்…
புதுச்சேரி: திமுக கூட்டணி சலசலத்துப் போயிருக்கிறது. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட மத்திய அமைச்சர் முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார். அவர் நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி ஊழல்கள் நிறைந்த ஆட்சி. பாஜக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாகும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். மணிப்பூரில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணி சலசலத்துப் போயுள்ளது. திருமாவளவன்…
ஜெட்டா: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் கானர் மெட்கால்ஃபும், 48-வது நிமிடத்தில் மிட்ச் டியூக்கும் கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ‘சி’ பிரிவில் 2-வது இடம் பிடித்து ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய…
பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு – கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து கொச்சியில் உள்ள இந்திய கடல் கண்காணிப்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கப்பலில் 22 பேர் இருந்த நிலையில், அதில் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். கப்பலில் இருந்தவர்களில் 4 பேரை மட்டும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி…
சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. நாளை, கோவை, நெல்லை மாவட்டங்களின்…
புதுடெல்லி: ஏ.சி. இயந்திரங்களின் இயல்பு வெப்பநிலையை 20 முதல் 28 டிகிரி செல்சியஸுக்குள் பராமரிப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்கண்டீஷனர் (ஏ.சி.) வெப்பநிலையை தரப்படுத்துவது குறித்து, உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆலோசனை முடிந்ததும், அதற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்போது, அந்தந்த மாநிலங்களின் ஈரப்பதத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என சில மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளன. வாகனங்களில் பொருத்தப்படும் ஏ.சி.களை தரப்படுத்துவது தொடர்பாக வாகன உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து மின் துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் கூறும்போது, “நாட்டில்…
புதுடெல்லி: ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, ஒரு பெண் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் (டிஎப்ஆர்) 1.9 ஆக குறைந்துள்ளது. 1970-களில் 5 ஆக இருந்த இது படிப்படியாக குறைந்து வருகிறது. கல்வி அறிவு அதிகரித்தது மற்றும் கருவுறுதல் தொடர்பான சுகாதார வசதிகள் அதிகரித்ததுமே இதற்குக் காரணம். இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தாலும் 0 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 24%, 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் 17%,…
