‘ஆதிபுருஷ்’ படத்துக்காக மகனிடம் மன்னிப்புக் கேட்டதாக சைஃப் அலிகான் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. இதன் காட்சியமைப்புகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்துக்காகவும் பெரும் கிண்டலுக்கு ஆளானது படக்குழு. மேலும், இப்படமும் பெரும் தோல்வியை தழுவியது. இப்படத்துக்குப் பிறகு ஓம் ராவத் இன்னும் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். இதனிடையே, சமீபத்தில் பேட்டியொன்று அளித்துள்ளார் சைஃப் அலிகான். அதில் ”உங்களுடைய குழந்தைகள் உங்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்வார்கள்” என்று சைஃப் அலிகானிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு “சமீபத்தில் மகன் தைமூருக்கு ‘ஆதிபுருஷ்’ படத்தைக் காட்டினேன். சில மணித்துளிகளில் என்னை ஒரு பார்வை பார்த்தான். உடனே அவனிடம் மன்னிப்புக் கேட்டேன். அதற்கு ஒகே என்று கூறி மன்னித்துவிட்டான்” என்று தெரிவித்துள்ளார். தற்போது இணையத்தில் சைஃப் அலிகானின் இந்தப் பேச்சு ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஏனென்றால், ‘ஆதிபுருஷ்’…
Author: admin
சென்னை: பெங்களூருவில் பலத்த மழை பெய்ததால், அங்கு தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்கின. பெங்களூருவில் நேற்று மாலை திடீரென்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது. சிலிகுரியில் இருந்து 160 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ராஜ்கோட்டில் இருந்து 154 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஐதராபாத்தில் இருந்து 137 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹாங்காங்கில் இருந்து சென்ற சரக்கு விமானம் ஆகிய 4 விமானங்கள் மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, அந்த 4 விமானங்களும் சென்னையில் வந்து தரையிறங்கின. அதேபோல், டெல்லியில் இருந்து சென்ற 2 விமானங்கள் திருப்பதியில் தரையிறங்கின. பெங்களூருவில் வானிலை சீரானதும், சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து விமானங்கள் பெங்களூரு சென்று தரையிறங்கின.
மும்பை: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியா தனது முதல் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடந்த சுழற்சியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் உள்நாட்டில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனை தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவி…
தனது அடுத்த படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார் ராம் பொத்தினேனி. மகேஷ் பாபு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காதல் பாடலொன்றை எழுதியிருக்கிறார் ராம் பொத்தினேனி. முதன் முறையாக இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் மாறியிருக்கிறார். மே 15-ம் தேதி ராம் பொத்தினேனியின் பிறந்த நாளன்று இப்பாடல் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு விவேக் – மெர்வின் கூட்டணி இசையமைத்து வருகிறது. இதில் ராமுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்து வருகிறார். முழுக்க காதல் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. ராம் பொத்தினேனியின் சமீபத்திய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. இதனால் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். விரைவில் இதன் டீஸர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.
சென்னை: ரூ.9,928.33 கோடியில் கோயம்பேடு-பட்டாபிராம் இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு – பட்டாபிராம் இடையே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக, கோயம்பேடு – பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைத்தது. ரூ.9,928 கோடியில் திட்டம்: இந்த திட்டத்தை ஆய்வு செய்த தமிழக அரசு ரூ.9,928.33 கோடியில் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் 21.76 கி.மீ., துாரம் கொண்ட இந்த வழித் தடம், கோயம்பேட்டில் தொடங்கி, பாடிபுதுநகர், முகப்பேர்,…
மந்திரம் ஜாப், அல்லது கோஷமிடுவது என்பது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், இதன் மூலம் மக்கள் கடவுள்களைப் பிரியப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களைச் சுற்றியுள்ள அதிர்வுகளையும் ஆற்றலையும் உயர்த்துகிறார்கள், சில அல்லது வேறு வழியில் குணமடைய உதவுகிறார்கள். சில நபர்களுக்கும் பக்தர்களுக்கும், ஒரு மந்திரத்தை கோஷமிடுவது நேர்மறையானது மற்றும் போதுமான சக்தி வாய்ந்தது, அவர்களுக்கு ஒரு வகையான மகிழ்ச்சியைக் கொடுக்கும், மேலும் சிலருக்கு, வழக்கமான கோஷத்திற்குப் பிறகு அவர்கள் பார்க்கும் முடிவுகள் உண்மையிலேயே மகிழ்ச்சியானவை. நீங்கள் ஒரு மந்திரத்தை முழு நம்பிக்கையுடனும் கவனத்துடனும் கோஷமிடும்போது, நீங்கள் வார்த்தைகளை மீண்டும் செய்வதில்லை, ஆனால் உங்கள் எண்ணங்கள், உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் வாழ்க்கை வடிவத்தை (உங்கள் சுவாசம்) தெய்வீகத்துடன் சீரமைக்கிறீர்கள்.
அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணி உட்பட சுமார் ரூ.58,000 மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். ஆந்திர தலைநகர் அமராவதி மறுகட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அமராவதி வெலகபூடி பகுதியில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தலைநகருக்காக ரூ.49 ஆயிரம் கோடியில் 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், அரசு அதிகாரிகளின் குடியிருப்பு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே, ராணுவத்துக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர 20 வளர்ச்சிப் பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.57,962 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் மத்திய அரசின் ரூ.5,028 கோடி மதிப்பிலான 9 திட்டங்களும் அடங்கும். மத்திய பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சார்பில் ஏவுகணை பரிசோதனை தளம், விசாகப்பட்டினத்தில் ரூ.100 கோடியில் வணிக வளாகம், குந்தக்கல்-மல்லப்பா…
பெங்களூரு: தோல்விகளால் பீதியடையப் போவதில்லை என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சி யாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “இந்த ஆண்டு சரியாக நடக்கவில்லை என்ப தற்காக நாங்கள் நிச்சயமாக பீதியடைந்து எல்லாவற்றையும் தூக்கி எறியப் போவதில்லை, நாங்கள் சில பகுதிகளில் நேர்த் தியாக செயல்பட வேண்டும். நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும், நாங்கள் பல ஆட்டங்களை வெல்லவில்லை. ஆனால் உண்மையில் நாங்கள் வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை. பேட்டிங் வரிசையில் சில மேட்ச் வின்னிங் வீரர்கள் உள்ளனர். தொடரில் எந்த அணியுடனும் நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும். டெவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது சிறப்பான விஷயம். அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சில…
டாக்கா: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். இதை பேஸ்புக் பக்கத்தில் வங்காள மொழியில் அவர் பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் வட கிழக்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும். இது குறித்து சீனா உடன் கூட்டு ராணுவ நடவடிக்கை சார்ந்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்” என அதில் ஃபஸ்லுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஃபஸ்லுர் ரஹ்மானின் கருத்தை எந்த வகையிலும் வங்கதேச இடைக்கால அரசு ஆதரிக்கவில்லை என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. “அவரது கருத்துக்கள் வங்கதேச அரசாங்கத்தின் நிலைப்பாட்டையோ அல்லது கொள்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. எனவே, அரசாங்கம் அதை எந்த வடிவத்திலும் ஆதரிக்கவில்லை” என தெரிவித்துள்ளது. முன்னதாக,…
ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது: “இதைச் சொல்வதால் எனக்குப் பிரச்சினை ஏற்படலாம். ஆனாலும் நான் இதைச் சொல்வேன். நான் பள்ளியில் வரலாறு படித்தபோது, முகலாயர்களைப் பற்றி எட்டு பாடங்கள் இருந்தன. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரிகங்களைப் பற்றி இரண்டு அத்தியாயங்களும், பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நான்கு பாடங்களும், தென்னிந்திய பேரரசுகள்- சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் சேரர்கள் பற்றி ஒரே ஒரு பாடமும் இருந்தன. ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது. அவர்கள் கடல் பயணத்தின் முன்னோடிகள். ரோம் வரை அவர்களுடைய வணிகப் பயணம் நீண்டிருந்தது. நமது வரலாற்றின் அந்தப் பகுதி எங்கே? நமது…
