திருப்பதி: காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டியுள்ளார். ‘தி இந்து’ பதிப்பக குழுமம் சார்பில் ‘உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி’ நூல் வெளியீட்டு விழா, காஞ்சி சங்கர மடத்தின் திருப்பதி கிளையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்நூலை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் (திருப்பதி) முதுநிலை பேராசிரியர் தேவநாதாச்சாரியார் பெற்றுக் கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியை இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் பி.வைத்யநாதன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அனுக்கிரக பாஷணம்: காஞ்சி மகாஸ்வாமியின் வாழ்க்கை சரித்திரம் குறித்த நூலை இரண்டு தொகுதிகளாக, ‘தி இந்து’ குழுமம் சில…
Author: admin
பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். னிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இந்நிலையில் இதன் தமிழ் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார், ஆமீர் கான். அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம் இது. >>டிரெய்லரை காண
நாமக்கல்: முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சீர்மிகு நகரத் திட்டத்தைத்தான் சிங்காரச் சென்னை என்று திமுகவினர் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும், மாநில அரசு செய்ததுபோல காட்டுவது திமுகவின் வேலை. வலிமையான கூட்டணி: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை முருகப் பெருமான் ஓட ஓட விரட்டப் போகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமிக்க வலிமையான கூட்டணியாக உள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுக கூட்டணி கட்சியினர் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர். மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும். திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். மக்களைப் பாதுகாக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ, அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…
உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்) இரண்டும் கவலைக்குரியவை, இருப்பினும் பிந்தையவை சிறந்த உணவுடன் சரி செய்யப்படலாம் மற்றும் (பொதுவாக) அதிக அக்கறை கொண்டவை அல்ல, இது தலைச்சுற்றல், பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தாவிட்டால். மறுபுறம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற சிக்கல்களைத் தடுக்க உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் பிபி ஒரு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். இருப்பினும், உங்கள் பிபி கண்காணிக்கும்போது, அவ்வாறு செய்ய சரியான நேரம் என்ன? நாங்கள் பார்ப்போம் …நேரம் ஏன் முக்கியமானதுஉடற்பயிற்சி, மன அழுத்தம், உணவு உட்கொள்ளல், நீர் உட்கொள்ளல் (நீரிழப்பு பிபி பாதிக்கலாம்), மற்றும் உடல் நிலை (படுத்துக் கொள்ளுங்கள், சறுக்குதல், உட்கார்ந்து) போன்ற காரணிகளால் இரத்த அழுத்தம் இயற்கையாகவே நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது, ஏனெனில் இந்த மாறுபாடுகள் காரணமாக, சீரற்ற நேரங்களில்…
மூத்த குடிமக்களை குறிவைத்து மோசடி திட்டத்தில் இந்திய வம்சாவளி மனிதருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்க மாவட்ட நீதிபதி வில்லியம் எஃப் ஜங், பிரணவ் படேலுக்கு 1,791,301 டாலர், குற்றத்தின் வருமானத்தை இழக்க உத்தரவிட்டார். அக்டோபர் மற்றும் டிசம்பர் 2023 க்கு இடையில், வயதான நபர்களை குறிவைத்து ஒரு மோசடி நடவடிக்கையில் படேல் பங்கேற்றதாக நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு அழைப்பு மையங்களில் இருந்து செயல்படும் குற்றவாளிகள், அமெரிக்க கருவூலத் துறை அதிகாரிகளாக தங்களை பொய்யாக முன்வைத்தனர். கைது வாரண்டுகள் இருப்பதாகக் கூறி அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றினர், அவை அனுமதிக்க வேண்டிய பணம் தேவை அல்லது பாதுகாப்பிற்காக பணம் மற்றும் தங்கத்தை ஒப்படைக்கும்படி அவர்களை வற்புறுத்துகின்றன என்று அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.பணக் கழுதை என்ற தனது பாத்திரத்தில், படேல் நியூ ஜெர்சியிலிருந்து புளோரிடாவின் மத்திய மாவட்டம் உட்பட கிழக்கு அமெரிக்கா முழுவதும்…
ஜம்மு/ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தங்கிய பிறகு புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம் ஸ்ரீ நகருக்கு நேற்று திரும்பினார். முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா இதுகுறித்து கூறுகையில், “வைஷ்ணவி தேவி கோயிலில் சிறந்த தரிசனம் கிடைத்தது. அமைதி, முன்னேற்றம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான எங்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், நாம் மட்டுமின்றி நமது நாடும் முன்னேறிச் செல்லும். அதன் வளர்ச்சிப் பாதையில் நாமும் ஒரு பகுதியாக மாறுவோம்” என்றார். 87 வயதான பரூக் அப்துல்லா, அவரது பேரன்கள் ஜமீர் மற்றும் ஜாஹித் ஆகியோருடன் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் சதீஷ் சர்மா, முதல்வர் உமர் அப்துல்லாவின் ஆலோகர் நசீர் அஸ்லம் வானி ஆகியோர் உடனிருந்தனர். வந்தே பாரத்…
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 -ல் வெளியாகிறது. இந்தப் படத்தின் இந்திப் பாடல் வெளியீட்டு விழா, மும்பையில் நடந்தது. அப்போது நடிகர் தனுஷ், “எனக்கு இந்தி தெரியாது” என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். அவர் கூறியதாவது: குபேரா உண்மையிலேயே வித்தியாசமான, சிறப்பான படம். இதை இன்னொரு படம் என்று கடந்துவிட முடியாது. என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதை என்னுடன் நடித்தவர்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். இயக்குநர் சேகர் கம்முலா புத்திசாலித்தனமானவர். இந்தப் படத்துக்காக நான் என்ன செய்யவேண்டும் என்று அவர் சொன்னாரோ, அதையே பின்பற்றினேன். அவர் எனக்கு நுணுக்கங்களையும் பேச்சு வழக்கையும் கற்றுக் கொடுத்தார். இதற்கு…
சென்னை/மேட்டூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூரிலிருந்து சென்னை வரை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரையை தொடங்கினர். மேட்டூர் அருகே விருதாசம்பட்டியை அடுத்த மல்லப்பனூர் பிரிவு சாலையில், மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்தில் இருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை நேற்று தொடங்கியது. செயலாளர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதிய பட்டை 4 தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை அரசு மருத்துவர்களுக்கு தர வேண்டும். அரசாணை 354-ன் படி அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை…
சென்னை: ரயில் பயணிகள் தத்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவசரகால ரயில் பயணங்களுக்கு உதவ தத்கல் மற்றும் ப்ரீமியம் தத்கல் முன்பதிவு முறையைப் பயன்படுத்தலாம். மொத்த டிக்கெட்டுகளில் 30 சதவீதம் தத்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது. தத்கல் டிக்கெட்டை ரயில் நிலைய கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பதிவு செய்யமுடியும். பெரும்பாலான ரயில்களில் தத்கல் முறையில் முன்பதிவு தொடங்கும் 5 நிமிடங்களுக்குள் டிக்கெட்கள் விற்பனையாகிவிடும். இதனால் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மேலும், தத்கல் முன்பதிவு முறையில் முறைகேடு நடப்பதாகவும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனடிப்படையில் 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நீக்கியது. இதற்கிடையே, பயணிகளுக்கு உதவும் வகையில் தத்கல் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 3-ம் தேதி அறிவித்தார்.…
புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையில் பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட மாநில பாஜக நிர்வாகிகள் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். முன்னதாக அனைத்து அமைச்சர்களும் கரோனா பரிசோதனைக்கு உட்படுவது அவசியம் எனவும் பிரதமருடன் மேடையில் இருப்பவர்களும் தங்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அட்டையை காண்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 7,121 ஆக உயர்ந்தது. இதில் 2,223 நோயாளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 1,223 நோயாளிகளுடன் குஜராத் இரண்டாமிடத்திலும் உள்ளன. இதையடுத்து டெல்லி 757, மேற்கு வங்கம் 747, மகாராஷ்டிரா 615, கர்நாடகா 459, உத்தரபிரதேசம் 229, தமிழ்நாடு 204, புதுச்சேரி 10,…
