உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றவர் – அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் டோஜ் தலைமை தாங்குதல், ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது, மின்சார கார்களைக் கட்டுவது மற்றும் தொழில்நுட்ப உலகத்தை கிட்டத்தட்ட தினமும் தனது அசத்தல் யோசனைகளுடன் அசைப்பது. ஆனால் எலோன் மஸ்க் மற்றவர்களை விட அதிகமாகச் செய்ய முடியும், அவருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரம் இருப்பதைக் கருத்தில் கொண்டு? தீவிரமான உற்பத்தித்திறனுக்கான மஸ்கின் ரகசிய பழக்கம் வியக்கத்தக்க எளிமையான ஒன்று: ஐந்து நிமிட விதி. எனவே, எலோன் மஸ்கின் ஐந்து நிமிட விதி என்ன அது உங்களையும் வெற்றிகரமாக செய்ய முடியுமா? இதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ள இங்கே படியுங்கள்:எலோன் மஸ்கின் 5 நிமிட விதி ஐந்து நிமிடங்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது அல்லது ஒரே இரவில் வெற்றியை அடைவது பற்றி அல்ல. மஸ்க் தனது நாளை எவ்வாறு ஒழுங்கமைக்கிறார் என்பது…
Author: admin
பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது, 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளிட்டுள்ள சுற்றறிக்கையில்,. ‘ஸ்ரீகாவோவில் ஸ்ரீலைராய் தேவி கோயிலில் ஜாத்ரா திருவிழாவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு சார்பில் நடக்க இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களையும் ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளும் இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசல் சம்பவம்…
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் இப்படத்துக்கு கிடைக்கும் வசூல் வைத்தே, இதன் வெற்றி உறுதி செய்யப்படும். இப்படத்தை 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கார்த்திக் சுப்பராஜ், “‘ரெட்ரோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும், திரையரங்குகளில் ஒலித்த ஆரவாரம், கைதட்டல் மற்றும் உங்களுடைய அன்பை வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி. இது நல்ல நேரத்துக்கான தொடக்கம் என்று தெரியும். ஆனால், இதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மத்தியஸ்தம் மையத்தில் வழக்கு தொடர்பவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழகறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்குமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் கொடுத்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது. மாற்றுமுறை தீர்வாக செயல்படுத்தப்படும் இந்த மத்தியஸ்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு குழு உள்ளது. இந்தக் குழுவில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு மத்தியஸ்தம் தொடர்பாக விவாதித்தல், சர்வதேச மத்தியஸ்த மையம் அமைத்தல், உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தை வலுப்படுத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்.…
சில கோடைகால சிறப்பு லெஹங்காக்கள் இங்கே.
’குட் பேட் அக்லி’ மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது. அஜித் ரசிகர்களும் இப்படத்தினைக் கொண்டாடித் தீர்த்தார்கள். தற்போது இப்படம் மே 8-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பினை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடியில் இப்படம் எந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவரும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழக உரிமையினை…
சென்னை: சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வி.கே.செல்லம் தாக்கல் செய்த மனுவில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நானும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவன். இந்நிலையில் எனக்கு தியாகிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்க கோரி அரசுக்கும், வீட்டு வசதி வாரிய தலைவருக்கும் மனு கொடுத்தேன். எனது மனு பரீசிலிக்கப்படவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எனது மனுவை பரிசீலிக்குமாறு கடந்த 2021-ல், அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு (தமிழ்நாடு வீட்டு வசதி…
நாள்பட்ட அழற்சி புற்றுநோய் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது செல்களை சேதப்படுத்துகிறது மற்றும் அசாதாரண வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வீக்கத்தை எதிர்த்துப் போராட, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற முழு, பதப்படுத்தப்படாத உணவுகளில் கவனம் செலுத்துங்கள். தொகுக்கப்பட்ட தின்பண்டங்கள், சர்க்கரை தானியங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் துரித உணவு போன்ற தீவிர செயலாக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு-இவை அனைத்தும் வீக்கத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. அழற்சி எதிர்ப்பு மூலிகைகள் மற்றும் மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உட்பட உங்கள் கலங்களை மேலும் பாதுகாக்க முடியும்.
புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தானின் இச்செயலை தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் என்று இந்தியா கருதுகிறது. ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைகளில் தினமும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அட்டாரி எல்லை மூடல் போன்ற இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது பலத்தை காட்டும் விதமாக விமானப்படை வீரர்களுக்கு ஏவுகணைத் தாக்குதலுக்கான உத்தரவுகளை வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச்…
இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால், அவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதில், “நான் ’விஜபி’ மற்றும் ‘3’ பட நாட்களில் இருந்தே அனிருத்தின் பெரிய ரசிகன். யார் இவர், நான் எப்போதாவது நடிகனாகிவிட்டால், திரையில் வரும்போது இவருடைய இசை ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். 10 வருடங்களுக்கு பின்பு இப்போது எனது 13-வது படம் 28 நாட்களில் வெளியாகிறது. இது அனிருத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியின் முதல் பாடம். நான் மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இன்றைக்கு ‘கிங்டம்’…
