Author: admin

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் சனிக்கிழமை (மே 3) நடந்த இந்தச் சந்திப்பில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி உடனான இந்தச் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாக தேசிய மாநாடு கட்சி எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும், இது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ‘தடை’கள்: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி…

Read More

கோவை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கட்சியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றேதான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தவெக-வில் தொடங்கினேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து. கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். சிறுவயதில் இருந்து நான் சிறுகச் சிறுக சேமித்த ரூ.5 லட்சம் பணத்தை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன். ஆனால் கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய…

Read More

கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கைக்குச் சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, கொழும்புவில் அந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் சென்னையில் இருந்து இன்று காலை 10.26 மணிக்கு இலங்கைக்கு புறப்பட்டு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு 6 பயங்கரவாதிகள பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.…

Read More

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் படத்துக்கு ‘தலைவன் தலைவி’ என தலைப்பு இடப்பட்டுள்ளது. இதையொட்டி டைட்டில் டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இதன் இறுதிகட்டப் பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாண்டிராஜ் – சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படம் இது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்துள்ளார். டைட்டில் டீசர் எப்படி? – ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசரில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கணவன் – மனைவியாக கொத்து பரோட்டா போட்டுக் கொண்டே வார்த்தை யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வசனங்களும், பெர்ஃபார்மன்ஸும் அழுத்தமாகவும் ஜாலியாகவும் இருக்கின்றன. முடிவில், அவர்கள் இருவரைப் பற்றியும் யோகி பாபு தரும் ஒன்லைன் விளக்கமும் நச் ரகம்.…

Read More

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தரப்பில் வெற்றி வேட்பாளராக பார்க்கப்பட்டவர் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திய அண்ணாமலை, கோவை தொழில்துறையினருக்கும் வாக்குறுதிகளை ஏராளமாக வாரி வழங்கி இருந்தார். மத்திய அரசில் செல்வாக்கான நபராக இருப்பதால் இவர் வெற்றிபெற்றால் நமக்கான பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில், கோவை தொழிலதிபர்கள் சிலர், மாநிலத்தை ஆளும் திமுக-வின் பொல்லாப்பு வருமே என்றெல்லாம் கவலைப்படாமல் அண்ணாமலைக்கு ஆதரவாக நின்றார்கள். சிலர் ஆளும் கட்சியின் நெருக்கடிகளையும் சமாளித்து அண்ணாமலைக்காக வாக்குச் சேகரித்தார்கள்; பலர் நிதியுதவியும் தந்தார்கள். ஆனாலும், தேர்தல் முடிவுகள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்து போனது. ​காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக அரசின் சாதனை திட்டங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி​விட்டு அண்ணாமலை என்ற மனிதருக்காக கோவை மக்கள் சுமார் நாலரை லட்சம்…

Read More

ஐபிஎல் 2025 முகமது ஷமிக்கு சரியாக அமையாவிட்டாலும் பரவாயில்லை, மோசமாக உள்ளது என்பதே இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட்கள் கொண்ட தொடருக்குச் செல்வதற்கு முன்பாக எழுந்துள்ள புதிய கவலையாக உள்ளது. அவரது பந்து வீச்சில் கிரீஸுக்கு நெருங்கும்போது இருக்கும் அந்த கடைசி நேர வேகம் மற்றும் வேகமாகக் கையைச் சுற்றி இறக்கும் தன்மையும் கொஞ்சம் மந்தமடைந்திருப்பது போல் தெரிவதோடு, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பந்தின் திசையைக் கட்டுப்படுத்துவதில் கடுமையாகப் போராடி வருகிறார் ஷமி. ஜோப்ரா ஆர்ச்சர் இந்த சீசனில் சன் ரைசர்சுக்கு எதிராக 4 ஓவர்களில் 76 ரன்கள் விளாசப்பட்டார் என்றால், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 75 ரன்களைக் கொடுத்து செம சாத்து வாங்குகிறார் ஷமி. முழங்கால் காயம் காரணமாக கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஷமி ஆடவில்லை. மார்ச் 2024-ல் அவரது வலது பாதத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2023-ல் குஜராத் டைட்டன்ஸுக்காக 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள்…

Read More

சென்னை: “தனிப்பட்ட கொலை, முன்விரோத கொலை, குடும்பக் கொலை, குடிபோதை கொலை, எங்கோ ஓரிடத்தில் கொலை என்று படுகொலைகளை வகை பிரித்து பாகுபடுத்தி, சட்டம் – ஒழுங்கு சீரழிவை நியாயப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் கூறிய எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதானா?” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த தம்பதிகளான ராமசாமி – பாக்கியம்மாள் இருவரும் நகைக் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. நான்காண்டு கால திமுக ஆட்சியில் வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை…

Read More

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் தோற்றத்தில் இருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கான அனுமதி பெறவில்லை என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் பட்டி காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ஒரு தனித்துவமான காரை பறிமுதல் செய்துள்ளனர். இது, ஜோன்பூர் மாவட்டம் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள லோஹிந்தாவைச் சேர்ந்த ராஜ் நாராயண் என்பவருக்கு சொந்தமானது. இவர் தனது காரை ஹெலிகாப்டர் போன்ற தோற்றத்தில் மாற்றியமைத்துள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த இந்த கார், திருமணங்களில் மணமகனுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. பட்டி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் குமார் தீட்சித் பத்வா பிரதாப்கரின் கடைவீதி பஜாரில் ரோந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் வடிவிலான கார், அவரது கண்களில் தென்பட்டுள்ளது. இந்த காரை ரோஹிடாவைச் சேர்ந்த தினேஷ் குமார் படேல் என்ற ஓட்டுநர் ஒட்டி…

Read More

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததற்காக கேரளா கிரிக்கெட் சங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து, ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம். கேரளா கிரிக்கெட் லீகின் ஏரீஸ் கொல்லம் செய்லர்ஸ் அணியின் சக உரிமையாளராகவும் ஸ்ரீசாந்த் இருப்பதால், அந்த அணி உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம். அதாவது, சஞ்சு சாம்சன் விவகாரத்தில், “அடிப்படை ஆதாரமற்ற, கேரள கிரிக்கெட் சங்கத்தின் நேர்மைக்குக் களங்கம் ஏற்படும் விதமாக ஸ்ரீசாந்த் பேசியதால் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளா கிரிக்கெட் சங்கம் குறித்து அவதூறாகப் பேசிய சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் மற்றும் அவரது கருத்துக்களை ஒளிபரப்பிய 24 நியூஸ் சேனலின் ஆங்கர் ரெஜி லூகோஸ் ஆகியோருக்கும் கேரளா கிரிக்கெட் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் ஹசாரே டிராபியில் தன் மகன் சஞ்சுவை கேரளா அணியில்…

Read More

சென்னை: “பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நமது பலமே திமுகவின் கட்டுமானம்தான். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத இந்த நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பிக்கிறோம். புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வரும் தடங்கல்களை உங்கள் உழைப்பால் வெல்ல வேண்டும். பாஜக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதனால் அச்சுறுத்தி, அதிமுகவை அடக்கிவிட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்காவிட்டால் சொந்த கட்சியில் அவரது தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை…

Read More