Author: admin

எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெர்ந்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, ராணுவ தளபதிகளுடனும், மத்திய அமைச்சர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனால், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று…

Read More

தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக மீண்டும் தேர்வானார். அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி தரப்பட்டது. ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் துணைச் செயலாளராக நியமிக்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அந்தப் பொறுப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ‘பதவியில் இருந்து விடுவியுங்கள்’ – இந்நிலையில், தனக்கு வழங்கிய புதிய பதவியில் இருந்து விடுவிக்குமாறு பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, நல்லதம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘நான் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். என்றும்…

Read More

எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, ஆரோக்கியமான சிற்றுண்டி தந்திரமானதாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள் பகுதியைக் கட்டுப்படுத்திக் கொண்டால், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பசியுடன் இருந்தால். மறுபுறம், நீங்கள் தாமதமாக எழுந்திருக்க விரும்பினால், இரவு உணவிற்குப் பிறகு, இரவில் நீங்கள் பசியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியமான உணவின் ஒரு முழு நாளுக்குப் பிறகு, நீங்கள் அதிக அளவில் ஆசைப்படும் நேரம் இதுவாகும், ஆனால் அந்த தூண்டுதலை எதிர்க்கவும், அதற்கு பதிலாக இந்த ஆரோக்கியமான தின்பண்டங்களுக்குச் செல்லுங்கள் (இரவு நேர சிற்றுண்டியைத் தவிர்ப்பது அல்லது முதலில் தாமதமாக தூங்குவது சிறந்தது என்றாலும்!)

Read More

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுங்கள் என்று சென்னையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்தார். அப்போது, அதே பல்கலைக்கழக வளாகத்தில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மாநில தலைவர்…

Read More

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சி.வி.சண்முகம் முன்வைத்துள்ள வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் விரைவில் புதிய மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக மற்றும் அதிலிருந்து பிரிந்தவர்கள் அளித்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக மற்றும் ஓபிஎஸ், ஓ.பி.ரவீந்திரநாத், சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், வா.புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டவிதி, பாரா 15-ன் கீழ் வருகிறதா என விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக சார்பில் ஆஜரான சி.வி.சண்முகம் தரப்பில், “இவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை. அதனால் இவர்களின் மனுக்களை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. அனைவரின் மனுக்களும் பாரா 15-ன்கீழ் விசாரிக்க…

Read More

மென்மையான, பாசமுள்ள, மற்றும் சிறிய அளவிலான, காவலியர் கிங் சார்லஸ் ஸ்பானியல் ஒரு அமைதியான தோழரின் வரையறை. இந்த நாய்கள் அவற்றின் நட்பு மனோபாவத்திற்கு பெயர் பெற்றவை, உண்மையிலேயே அவசியமில்லை. அவர்களின் இனிமையான மற்றும் அமைதியான தன்மை காரணமாக, அவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் அல்லது பிற செல்லப்பிராணிகளுடன் வீடுகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

Read More

சம்மன் அனுப்பாமல் யாரையும் விசாரணைக்கு அழைத்து துன்புறுத்த கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான சிவில் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தன்னை விசாரணை என்ற பெயரில் அழைத்து எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உத்தரவிட கோரி எம்.ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில், ‘மனுதாரருக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. பதிலுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.டி.அருணன், ‘‘மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனது இஷ்டம்போல விசாரணைக்கு வரவழைத்து மனுதாரரை துன்புறுத்தி வருகிறார்’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:லலிதாகுமாரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முறையான சம்மன் இல்லாமல் யாரையும் விசாரணை என்ற…

Read More

கள்ளழகரைப் போற்றும் வகையில் மதுரையில் எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு வாராரு… கள்ளழகர் வாராரு…’ எனும் பக்திப் பாடல் வெளியீட்டு விழா மதுரை காளவாசலில் உள்ள தங்கம் கிராண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 10-ம் தேதி அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரைக்குப் புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது. 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இந்நிலையில், கள்ளழகரை வரவேற்க எம்.ஆர். புரமோட்டர்ஸ் சார்பில் ‘மண்ணதிர… விண்ணதிர… வாராரு… வாராரு… கள்ளழகர் வாராரு’ என்ற பக்தி மணம் கமழும் புதிய பாடல் தயாராகியுள்ளது. கள்ளழகர் புகழ் பாடும் இப்பாடலுக்கு இளையவன் இசை அமைத்துள்ளார். பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார். இப்பாடலின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் சிடி-க்கள் வெளியீட்டு விழா நேற்று மதுரை காளவாசல் சந்திப்பில் உள்ள தங்கம்…

Read More

மத்திய பாஜக அரசின் அச்சுறுத்தல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் ஜூன் 1-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸ்க்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: திமுக அரசின் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது, மதுரையில் ஜூன் 1-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும்…

Read More

தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுகவோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்கவில்லை. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும்போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு நீதி கிடைக்கும். பல சமூகங்கள் பயனடையும். அடுத்தாண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, ஓராண்டில் முடிவடையும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும். பாஜக-அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு வாக்கும் எங்களுக்கு முக்கியம். எனவே, திமுவை…

Read More