Author: admin

மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக அங்கீகரித்திருக்கிறது தேமுதிக பொதுக்குழு. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது. தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் உங்களுக்கு உறவு மலர்ந்ததை சுருக்க மாகச் சொல்ல முடியுமா? எனது தந்தை ஆம்​பூர் கூட்​டுறவு சர்க்​கரை ஆலை​யில் பணி​யாற்​றிய​தால் நான் பிறந்து வளர்ந்து எல்​லாமே குடி​யாத்​தத்​தில் தான். பள்​ளிச் சிறு​வ​னாய் இருந்த போதே கேப்​டனின் வெற்​றிப் படங்​களை குடும்​பத்​துடன் பார்த்து ரசித்​திருக்​கிறேன். சென்னை பச்​சையப்​பன் கல்​லூரி​யில் படித்த நான் அதன் மாண​வர் பேரவை தேர்​தலில் போட்​டி​யிட்டு செய​லா​ள​ராக வந்​தேன். அந்த சமயத்​தில் ஹாஸ்​டல் மாண​வர்​கள்…

Read More

ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி வெகு விமரிசையாக தொடங்க உள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் வரும் 8-ம் தேதி முதல் வர தொடங்குகின்றனர். உலக அழகி போட்டிகள் நடைபெற உள்ள இடங்களை ‘மிஸ் வோர்ல்டு லிமிடெட்’ தலைமை செயல் அதிகாரி ஜூலியா இவேலின் மோர்லி நேற்று பார்வையிட்டார். மே 10-ல் ஹைதராபாத் கச்சிபவுலி விளையாட்டு அரங்கில் மாநில சுற்றுலா துறை சார்பில் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற உள்ளன.

Read More

பிறந்தது முதல் சிரிக்கும் உணர்ச்சியை இழந்துவிட்ட சிறுவன் பாரிவேல் (சூர்யா), தூத்துக்குடியில் கேங்ஸ்டராக இருக்கும் திலகனிடம் (ஜோஜூ ஜார்ஜ்) வளர்கிறான். அவன், தனது 14 வயதில் ருக்மணி (பூஜா ஹெக்டே) என்ற சிறுமியை காசியில் சந்தித்துப் பிரிகிறான். 14 ஆண்டுகள் கழித்து பாரியை அவள் அடையாளம் கண்டுகொள்கிறாள். பால்யத்தில் துளித்த காதல், இப்போது செழித்து வளர, ருக்மணிக்காக கேங்ஸ்டர் வாழ்க்கையைத் துறந்து, திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். திருமணத்தன்று நடக்கும் அப்பா – மகன் மோதலில், திலகனின் கையை வெட்டிவிட்டு சிறை செல்கிறான் பாரி. பின் சிறையில் இருந்து தப்பித்து அந்தமான் தீவுக்கு, மனைவியைத் தேடிப் போகிறான். அங்கே அவளுடன் இணைந்தானா? அந்தத் தீவுக்கும் பாரிக்கும் என்ன தொடர்பு? அப்பா -மகன் மோதல் ஏன் ஏற்பட்டது என பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. பால்யத்தில் தாயையும், தன் இனக்கூட்டத்தையும் பிரிந்து, முரடனாக வளரவேண்டிய ஒருவனுக்கு, காதலால் தன்னை மீட்டுக்கொள்ளப் போராடும் அந்த…

Read More

சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேற்று காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு இமெயிலில், மேற்கூறிய விமானத்தில், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பகல் 11.59 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடிப் படையினர், விமானத்தை சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர்.…

Read More

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார். கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது, இரு நாடு​களி​லும் ஒரே குடும்​பத்​தின் உறவு​களும் பிரிந்​தன. இந்த எண்​ணிக்கை பஞ்​சாப், உத்தர பிரதேசத்​தில் அதி​கம். இரு நாடு​களி​லும் பிரிந்த உறவு​கள் திரு​மணங்​கள் மூலம் மீண்​டும் சேர்​வது வழக்​க​மாக உள்​ளது. அந்த வகை​யில், உ.பி.​யின் பரேலி​யில் சுபாஷ் நகரைச் சேர்ந்த முஸ்​லிம் பெண் ஒரு​வர் தன் குடும்​பத்​தில் பிரிந்த ஒரு உறவுடன் 14 ஆண்​டுக்கு முன்பு திரு​மணம் முடித்​தார். பிறகு பாகிஸ்​தான் சென்​றவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை​யும் கிடைத்​தது. இதனால் அந்த பெண்​ணின் இந்​திய குடி​யுரிமை ரத்​தானது. இதற்​கிடை​யில், திரு​மண​மாகி ஒரே ஆண்​டில் விவாகரத்​தானது. இதையடுத்து அந்த பெண் உ.பி.​யில் உள்ள தாய் வீட்​டுக்கு வந்து விட்​டார். வாழ்க்​கையை இழந்த விரக்​தி​யில் இந்​திய குடி​யுரிமை பற்றி கவலைப்​பட​வில்​லை. இங்கு அவருக்கு ஒரு பெண்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைமுறை இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளை மாளிகையும் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வேளையில் டரம்ப் வெளியிட்ட புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது. சமூக ஊடகத்தில் சிலர் இந்தப் படத்தை வேடிக்கையாக பார்த்தாலும் பலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். இப்பதிவு…

Read More

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில், ஆனந்த் மற்றும் முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் அதிவேக படகில் வந்து, கத்திமுனையில் தாக்குதல் நடத்தி, வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல, செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், வெள்ளப்பள்ளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சுமதி, மாணிக்கவேல், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த துர்காதேவி ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் மீன்பிடித்த 19 மீனவர்கள் மீது, அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 5 தாக்குதல்…

Read More

மூலவர்: அகத்தீஸ்வரர் அம்பாள்: பாடகவள்ளி தல வரலாறு: அகத்தியர் எவ்விடத்தில் சிவன் – பார்வதி திருமணக்காட்சி காண விரும்புகிறாரோ அவ்விடங்களில், தான் மணக்கோலத்தில் காட்சி அளிப்பேன் என்ற சிவபெருமான், அகத்திய முனிவருக்கு வரம் அளித்தார். அதன்பிறகு தென்திசை வந்த அகத்தியர் சிவ – பார்வதி திருமண தரிசனம் பெற வேண்டும் என எண்ணினார். சிவனைதரிசிக்கும் முன்பு நீராட விரும்பினார். அந்த நேரத்திலேயே, அதிசயமாக பாறையில் ஊற்று பெருகியது. வழிபட லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை, பாறையில் சுனை நீரை தெளித்து பாறையை நெகிழ்வாக மாற்றி சிவலிங்கமாக பிடித்து பூஜைகள் செய்து வழிபட்டார் அகத்தியர். (இத்தீர்த்தம் பெயராலேயே இவ்வூர் திருச்சுனை என்று அழைக்கப்படுகிறது) அப்போது சிவன் பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். அகத்தியருக்கு காட்சி தந்ததால் இத்தல ஈசன், அகத்தீஸ்வரர் என பெயர் பெற்றார். இங்கு குன்றின் மீது சிவன் அருள் பாலிப்பது தனிச்சிறப்பு. சிறப்பு அம்சம்: அகத்தியர் தெற்கு நோக்கி தனி சந்நிதியில்…

Read More

சென்னை: தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. இந்நிலையில், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 5, 6-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 4) முதல் 9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5-ம் தேதி கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 6-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி,…

Read More

சென்னை: மாநில உரிமை​களை எந்த காலத்​தி​லும் விட்​டுக்​கொடுக்க மாட்​டோம் என சென்​னை​யில் நடந்த பாராட்டு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட்டு வைத்​திருந்​ததை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்​கில், மசோ​தாக்​களுக்கு உச்ச நீதி​மன்​றமே அனு​ம​தி​யளித்​து, முக்​கிய தீர்ப்பை வழங்​கியது. இதை முன்​னெடுத்த தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு கல்​வி​யாளர்​கள் சார்​பில் சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கத்​தில் நேற்று பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்​தான பாராட்​டு’ என்ற தலைப்​பில் நடந்த விழாவுக்கு வந்த முதல்​வர் ஸ்டா​லினுக்கு மேள​தாளம் முழங்க நடன நிகழ்ச்​சிகளு​டன் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர் நடை​பெற்ற இசை, கலை நிகழ்ச்​சிகளை முதல்​வர் கண்டு ரசித்​தார். பின்​னர் மேடையேறிய முதல்​வருக்கு பொன்​னாடை போர்த்​தி, நினைவு பரிசு, செங்​கோல் உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. விருந்​தினர்​களும் கவுரவிக்​கப்​பட்​டனர். சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​கள் கூட்​டமைப்பு…

Read More