ஜெர்ரி, வட்டாரம், எந்திரன், நஞ்சுபுரம், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ராகவ் ரங்கநாதன். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘நாக் நாக்’. மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நவீன் சுந்தர் இசை அமைத்துள்ளார். படம் பற்றி ராகவ் ரங்கநாதன் கூறும்போது, “இத்தனை காலமாக என்னை நடிகர், நடனக் கலைஞர், இசை கலைஞராகப் பார்த்திருக்கலாம். இப்போது முதல்முறையாக இயக்குநர் ஆகி இருக்கிறேன். இதன் மூலம் என் கனவு நனவாகி இருக்கிறது. இது ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. கதைதான் ஹீரோ. நான் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பி அதன்படி…
Author: admin
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 42,718 பேருக்கு வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) சார்பில் தேசிய அளவிலான மருத்துவ கல்வி மாநாடு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்பு ராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணி ராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் கோபால கிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கவிதா மற்றும் மருத்துவ பேராசிரியர்கள்,…
பழங்காலத்தில், மக்கள் தங்களுக்கும், அவர்கள் விரும்பும் மக்களுக்கும் சரியான விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள். வெளிப்பாடு என்பது உங்கள் கருத்துக்கள், கனவுகள் மற்றும் குறிக்கோள்களை யதார்த்தத்திற்குள் கொண்டுவருவதற்கான செயல்முறையாகும், விருப்பமான சிந்தனை அல்லது பகல் கனவு காண்பதன் மூலம் மட்டுமல்லாமல், சரியான நோக்கங்களை வைத்திருப்பதன் மூலமும், உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுவதன் மூலமும், அவற்றை மெதுவாக யதார்த்தமாக மாற்றுவதன் மூலமும். தற்போதைய காலங்களில், பல வெற்றிகரமான நபர்கள் தங்கள் குறிக்கோள்களைக் காட்சிப்படுத்தும் சக்தியைப் பற்றி பேசியுள்ளனர், அவர்கள் ஏற்கனவே அடைந்துவிட்டார்கள், குறிக்கோள்களும் கனவுகளும், ஆசைகள் யதார்த்தத்திற்கு மாறும் வகையில் வாழ்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) சனிக்கிழமையன்று மத்திய பிரதேசத்தின் ஷியோபூரில் உள்ள அதன் சோதனை தளத்திலிருந்து அதன் அடுக்கு மண்டல ஏர்ஷிப் தளத்தின் முதல் விமானத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. இது இந்தியாவின் வான்வழி கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. ஆக்ராவை தளமாகக் கொண்ட வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனத்தால் (ADRDE) உருவாக்கிய தளம், கருவிகளின் பேலோடைக் கொண்டு சென்று பூமியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஏறியது. ஆன் போர்டு சென்சார்களிடமிருந்து தரவு வெற்றிகரமாக பெறப்பட்டது மற்றும் எதிர்கால உருவகப்படுத்துதல் மாதிரிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் உயர் உயர விமானம் பயணங்கள்.டி.ஆர்.டி.ஓ அதன் அடுக்கு மண்டல ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்துகிறது விமானத்தின் போது, அவற்றின் செயல்திறனை சரிபார்க்க அழுத்தம் கட்டுப்பாடு மற்றும் அவசர பணவாட்டம் அமைப்புகள் சோதிக்கப்பட்டன. 62 நிமிட விமானத்திற்குப் பிறகு, சோதனைக் குழு மேலதிக ஆய்வுக்காக விமானக் கப்பலை…
புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன் முடிவை மாற்றியதன் முக்கியப் பின்னணியாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் உயர் சாதியினர் மட்டுமே பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாகக் கருதப்பட்டனர். பாஜக என்றவுடன், பலரது மனதில் தோன்றிய முதல் எண்ணம் அது ஒரு உயர் சாதியினர் கட்சி என்பதுதான். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, பாஜகவின் முக்கிய வாக்காளர்கள் உயர் சாதியினர் மட்டுமே என்ற கருத்து இருந்தது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, பாஜகவின் பிற்படுத்தப்பட்ட ஓபிசி வாக்கு வங்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பாஜகவும் பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சியாகிவிட்டது. இதன் காரணமாகத்தான் பாஜக வட மாநிலங்களில் தொடர்ந்து தம் ஆட்சிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஓபிசி வாக்கு வங்கி, பாஜகவின் கணக்கில் தொடர்ந்து…
பெர்த்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்ற இரு ஆட்டங்களில் 3-5, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் கடுமையாக போராடிய இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் நவ்னீத் கவுர் (35-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (59-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கிரேஸ் டூவர்ட் (2-வது நிமிடம்), ஜேட் ஸ்மித் (36-வது நிமிடம்), கிரேட்டா ஹேய்ஸ் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று மீண்டும் மோதுகிறது.
வடசென்னையில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் அஞ்சலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் மையம் திறக்கப்பட உள்ளது. வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், வியாபாரம் மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வெளி நாடு செல்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இவை தவிர, அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள்…
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்துக்கு இடையே இந்திய கடற்படை தனது பலத்தை காட்டி வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை முடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதிலடி கொடுக்கும் முடிவை எடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து விட்டார் பிரதமர் மோடி. இதையடுத்து கடற்படை கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. விமானப்படை விமானங்கள் நெடுஞ்சாலைகளை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய கடற்படையின் ஊடக பிரிவு புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்ப்பல், துருவ ரக ஹெலிகாப்டர், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக அணிவகுத்துள்ளன. (கடலிலும், கடலுக்கு மேலேயும், கடலுக்கு கீழேயும்) – கடற்படையின் மூன்று சக்திகள் என அந்த படத்துக்கு தலைப்பு…
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் போதை மருந்து பயன்படுத்தியதற்காக தடையை பெற்றுள்ளேன் என ரபாடா தெரிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடையவைத்துள்ளார். 30 வயதை நெங்கும் ரபாடா, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா திரும்பினேன். நான் தாயகம் திரும்பியதற்கு மனமகிழ் மருந்து (recreational drug) பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதே காரணம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டிற்கு திரும்புவதை எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் பயன்படுத்திய மருந்து…
இந்தோனேசியாவில் 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் கப்பல் கட்டும் தளம் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன், செல்வதுரை தினகரன், கோவிந்தசாமி விமல்கந்தன் ஆகிய 3 இந்தியர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இந்தோனேசிய நீதிமன்றம் மூவருக்கும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மரண தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட உத்தரவிடக் கோரி 3 பேரின் மனைவிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் குடும்பத்தில் இம்மூவர் மட்டுமே வருமானம் ஈட்டும் நபர்கள் என்பதால் மேல்முறையீடு செய்ய தங்களுக்கு பண வசதி இல்லை என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில்…
