‘ஜாய்’ என்ற வெள்ளை ஸ்வான் ஏன் ஆக்ஸியம் -4 பணியில் சுபன்ஷு சுக்லாவுடன் விண்வெளிக்கு பறக்கிறது (பட ஆதாரம்: பொருளாதார நேரங்கள்) மனித விண்வெளிப் பயணத்திற்கு இந்தியாவின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரும்புவது ராக்கெட் சக்தியிலிருந்து மட்டுமல்ல, கலாச்சார அடையாளங்களிலிருந்தும் சர்வதேச நல்லெண்ணத்திலிருந்தும் ஒரு கவிதை மற்றும் குறியீட்டு ஊக்கத்தைப் பெறுவதாகும். இந்திய விமானப்படை குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா விரைவில் ராகேஷ் ஷர்மாவின் வரலாற்று 1984 பணிக்குப் பின்னர் சுற்றுப்பாதையில் முதல் இந்திய விண்வெளி வீரராக வரலாற்றை உருவாக்க உள்ளார். ஆனால் இந்த முறை, தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, அவர் தனியாகப் போவதில்லை. அவருடன் ‘ஜாய்’ என்ற வெள்ளை பட்டு ஸ்வான் இருக்கும் ஆக்சியம் -4 பணி to சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்).ஒரு பொம்மை மட்டுமல்ல, ஜாய் என்பது ஆக்சியம் -4 குழுவினரின் முறையான பூஜ்ஜிய-ஈர்ப்பு காட்டி, மற்றும் பாரம்பரியம் விண்வெளி பயணத்தைப் போலவே பழமையானது. டிராகன் காப்ஸ்யூலுக்குள்…
Author: admin
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளான பிரத்யேக சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. இந்த விமான விபத்தை அடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிஆர்பிஎஃப், கடலோர படை மற்றும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச்…
“நான் ரஜினியின் மிகப் பெரிய ரசிகன்” என்று நடிகர் ஆமிர்கான் தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான் நடித்துள்ள படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் ஆமிர்கான். இதற்காக அளித்த பேட்டியில் முதன்முறையாக ‘கூலி’ படம் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் ‘கூலி’ மற்றும் ரஜினிகாந்த் உடன் நடித்தது குறித்து ஆமிர்கான், “லோகேஷ் கனகராஜ் ‘கைதி 2’ படத்தை முடித்தவுடன், அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன். தற்போது அவர் இயக்கத்தில் ரஜினி சார் நடித்துள்ள ‘கூலி’ படத்திலும் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினி சாரின் மிகப் பெரிய ரசிகன். அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. லோகேஷ் கனகராஜ் என்னிடம் ரஜினி சாருடைய படம் என்றவுடன், கதையே கேட்காமல் நடிக்கிறேன் என்று கூறிவிட்டேன். ‘கூலி’ படத்தில் எனது கதாபாத்திரம் சுவாரசியமாக…
சென்னை: சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். இத்தடத்தில் போரூர் முதல் சென்னை வர்த்தகம் மையம் இடையே பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில்,இத்தடத்தில் ராமாபுரம் அருகே உயர்மட்டபாதையில் வியாழக்கிழமை இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சரிந்த விழுந்த இணைப்பு பாலத்தை அகற்றும் பணி நடைபெறுகிறது. சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்துள்ளனர்.
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாராவைச் சேர்ந்த மருத்துவர் கோமி வியாஸ். இவரது கணவர் ப்ரதிக் ஜோஷி கடந்த ஆறு ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் லண்டனில்…
சென்னை: “யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் “நான் முதல்வன்” திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
லாகூர்: அகமதாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். “அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7…
கடலூர் பேருந்து நிலையத்தில், முதல்வர் திறந்து வைத்த சிறப்பு நூலகம் மறுநாளே வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு அரசால் வைக்கப்பட்ட நூலகத்துக்கான அறிவிப்பு மட்டுமே காட்சிப் பொருளாக இருக்கிறது. ‘மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தபடியே மாவட்ட அரசு மருத்துவ மனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் 70 இடங்களைத் தேர்வு செய்து, இந்த சிறப்பு நூலகங்களை காணொலி வழியாக நேற்று முன்தினம் முதல்வர் திறந்து வைத்தாா். அதில் ஒன்று கடலூர் பேருந்து நிலையத்திலும் திறந்து வைக்கப்பட்டது. ‘பயணிகளின் காத்திருக்கும் அறையில் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க இந்த நூலகம் உதவி செய்யும்’ என்று மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் இணைந்து பங்கேற்று, புத்தகங்களை வாசித்து தொடங்கி…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய இந்த விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத் நகருக்கு வந்தது. அதில் பயணித்த பயணி ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார். “விபத்தில் சிக்கிய அதே விமானத்தில் தான் நான் அகமதாபாத் வந்தேன். நான் டெல்லியில் இருந்தேன் வந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்தில் வழக்கத்துக்கு மாறாக சில விஷயங்களை கவனித்தேன். இது தொடர்பாக ஏர் இந்தியாவுக்கு வீடியோ ட்வீட் செய்தேன். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தர விரும்புகிறேன். என்னை தொடர்பு கொள்ளவும்” என எக்ஸ் தளத்தில் ஆகாஷ் என்பவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கிய விமானத்தில் தொழில்நுட்ப சாதனங்கள் வேலை செய்யவில்லை என்பதை தனது பதிவு மூலம் அவர் குறிப்பிட்டிருந்தார். நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது.…
கோவை: “மாணவர்களின் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு,” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோவை சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி பேசியதாவது: “பெற்றோர்கள் தயவு செய்து நம் மாணவர்களை இதர மாணவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை காட்டிலும், தேர்வில் சாதாரண தேர்ச்சி அடைந்தவர்களின் திறமை கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். எனவே, மாணவர்களின் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு திறமையைக் கண்டறிந்து ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். காந்தி சொல்வது போல, பள்ளி என்பது மிகப் பெரிய தொழிற்சாலை. நாம் எதை உருவாக்குகிறோம் என்றால், பள்ளி உயர்ந்த…
