பணிபுரியும் நிபுணர்களைப் பொறுத்தவரை, ஒரு நல்ல அல்லது புரிந்துகொள்ளும் முதலாளியைக் கொண்டிருப்பது மாறுவேடத்தில் ஒரு ஆசீர்வாதத்தை விடக் குறைவாக இல்லை. இருப்பினும், உங்கள் வாழ்க்கையில், நீங்கள் கையாள கடினமாக இருக்கும் சில முதலாளிகளை நீங்கள் அடிக்கடி காணலாம். உங்கள் முதலாளி அதிகப்படியான விமர்சனமாக இருந்தாலும், நிராகரிக்கப்படுகிறாரா, மைக்ரோமேனேஜிங் அல்லது கணிக்க முடியாதவரா, அவர்களின் நடத்தை உங்கள் நம்பிக்கை, வேலை திருப்தி மற்றும் மன நல்வாழ்வை கடுமையாக பாதிக்கும். ஆனால் வெளியேறுவது எப்போதும் சரியான அல்லது உடனடி விருப்பமல்ல. அதற்கு பதிலாக, உங்கள் தொழில்முறை மற்றும் எல்லைகளை பராமரிக்கும் போது அத்தகைய முதலாளிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது உங்கள் தொழில் வாழ்க்கையில் உயிர்வாழவும் வளரவும் உதவும். எனவே, உங்கள் நல்லறிவை இழக்காமல் கடினமான முதலாளியுடன் சில ஸ்மார்ட் வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
Author: admin
விழுப்புரம்: “என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனக்கும் செயல்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் டிராவில் தான் உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. 34 அமைப்புகளைச் சேர்ந்த 14 பஞ்சாயத்துக் காரர்கள் ஒரு தீர்ப்பு வழங்கினார்கள். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். இரு பெரிய ஆளுமைகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தயாராக இருந்தும் அன்புமணி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் எனக்குள் உள்ள இயற்கையாக கோபம் வெளியில் வந்து, நீயா நானா பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்து இப்போது செய்தியாளர்களை…
எம்.ஆர்.ஐ ஸ்கேன் சமகால மருத்துவத்தில் சமீபத்திய இமேஜிங் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். மூளைக் கட்டிகள் முதல் முதுகெலும்பு பிரச்சினைகள் வரை பல்வேறு நிலைமைகளை அடையாளம் காண அவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை அனைவருக்கும் பாதுகாப்பானதா? நன்கு அறியப்பட்ட ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், நீங்கள் எம்.ஆர்.ஐ இயந்திரத்தில் நுழைவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை விளக்குகிறார்.உங்கள் உடலில் உள்ள உலோகங்கள் அபாயகரமானவைஎம்.ஆர்.ஐ இயந்திரங்கள் சக்திவாய்ந்த காந்தப்புலங்களைப் பயன்படுத்துகின்றன, இது உங்கள் உடலில் உலோகப் பொருள்களை மோசமாக பதிலளிக்கக்கூடும். இதில் இதயமுடுக்கிகள், கோக்லியர் உள்வைப்புகள், அறுவை சிகிச்சை கிளிப்புகள் அல்லது சிறு துண்டு ஆகியவை அடங்கும். உங்களிடம் உலோக உள்வைப்புகள் இருந்தால், உங்கள் மருத்துவரை முன்பே தெரிவிக்க வேண்டும். எப்போதாவது, சி.டி ஸ்கேன் போன்ற பிற இமேஜிங் நுட்பங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்படலாம்.கர்ப்பம் மற்றும் எம்.ஆர்.ஐ ஒரு பெரிய இல்லை!எம்.ஆர்.ஐ.க்கள் கதிர்வீச்சைப்…
மேட்டூர்: மேட்டூர் அணையின் வரலாற்றில் 92-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் . மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு…
கோவை: சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிப்பில் சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸில், உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுகன்யா. இவர், கடந்தாண்டு மே மாதம் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில், ‘‘சென்னையைச் சேர்ந்த யுடியூபரான சவுக்கு சங்கர், பெண்கள் காவலர்கள் குறித்தும், காவல்துறை உயரதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில், சைபர் க்ரைம் போலீஸார், தகாத வார்த்தையில் பேசுதல், பெண்களை அவதூறாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்தனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர்…
Last Updated : 12 Jun, 2025 12:48 PM Published : 12 Jun 2025 12:48 PM Last Updated : 12 Jun 2025 12:48 PM மேலக்கோடையூரில் காவல் குடியிருப்பு அருகே பராமரிப்பின்றி இருக்கும் சிறுவர் பூங்கா. | படங்கள்: எம்.முத்துகணேஷ் | மேலக்கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவலர் குடியிருப்பு அருகே உள்ள பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூர் ஊராட்சி காவலர் குடியிருப்பு அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த சிறுவர் பூங்காவில், நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தால், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது பூங்காவில் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. பராமரிப்பின்றி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.…
மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 9.45 மணியளவில் டெல்டா பாசனத்துக்கு மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைத்து, அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய நீரில் மலர்களைத் தூவினார். தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் திட்டப் பணிகள் மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏறத்தாழ 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை பாசனத்துக்கு ஜூன் 12 முதல் செப்டம்பர்…
சென்னை: புதிய விதிகளின்படி ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் எனும் விதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்… தட்கல் டிக்கெட் முறையின் பலனை பொதுமக்கள் பெறுவதை உறுதி செய்வதற்கும், முகவர்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், ரயில்வே அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் திருத்தியுள்ளது, இதில் ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே ஜூலை 1 முதல் IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை எவ்வாறு இணைப்பது? 1. IRCTC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். 2. உங்கள் சான்றுகளுடன் உள்நுழையவும். 3. ‘My Account’ பகுதிக்குச் சென்று ‘Authenticate User’ என்பதை கிளிக் செய்யவும் 4. உங்கள் ஆதார் எண்/ஆதார் அட்டை நகலை உள்ளிடவும். 5. ‘விவரங்களைச் சரிபார்த்து OTP பெறு’…
அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக பணிபுரிந்தவர்கள் விலக விரும்பினால் தகுதியான மற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24, 2024-25-ம் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆசிரியர்களின் பெயர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் முழுமையாக சென்றடைவதன் வாயிலாக மட்டுமே அவர்கள் உயர்கல்வி தொடர்வதை உறுதி செய்ய இயலும். இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள வழிகாட்டி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக மாற்றப்பட்டனர். அதனுடன், கூடுதலாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்கள் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.…
விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால், இதன் உரிமைகளை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை…
