இதய நோய் 2023 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் முக்கிய பங்களிப்பாளர்களாக இருந்தது. மார்பு அச om கரியம், மூச்சுத் திணறல் மற்றும் மேல் உடல் வலி போன்ற முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது ஆரம்ப தலையீட்டிற்கு முக்கியமானது. பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்களை வலியுறுத்தும் கோடு மற்றும் மத்திய தரைக்கடல் போன்ற இதய ஆரோக்கியமான உணவுகளை ஏற்றுக்கொள்வது இதய நோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். 2023 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் உயிர்களைக் கொன்ற இதய நோய் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது, இந்த இறப்புகளில் 85% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக உள்ளது. மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது உயிரைக் காப்பாற்றும், ஏனெனில் ஆரம்ப தலையீடு முக்கியமானது. நீங்கள் புறக்கணிக்கக் கூடாத மாரடைப்பின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே. சில மாரடைப்பு திடீரெனவும் தீவிரமாகவும் இருப்பதால் உடனடியாக உதவி…
Author: admin
புதுடெல்லி: தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போரை நடத்துவதற்கு சதி செய்ததாகவும், நிதி திரட்டியதாகவும் கூறி ஷபீர் ஷாவுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக 2022 மார்ச்சில் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் ஷபீர் ஷா மனுத்தாக்கல் செய்தார். இதனை 2023 ஜூலை 7-ம் தேதியன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வாதங்களின் இறுதியில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு…
தஞ்சாவூர்: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேட்டூர் அணையில் முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் விதை நெல், இடுபொருட்கள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடைமடை வரை தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும். கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள், மாணவப் பிரதிநிதிகள், பெற்றோர் சங்க நிர்வாகிகள் என 7 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக்…
ஹைதராபாத்: மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் அதிகமாக விளைகிறது. அக்காலத்தில் இந்த நூர்ஜஹான் மாம்பழத்தை அரசர் பரம்பரையினர் விரும்பி சாப்பிட்டதாக கூறுகின்றனர். நல்ல ருசி கொண்ட இந்த வகை மாம்பழங்கள் தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்தது. இவை ஒவ்வொன்றும் 2 முதல் 5 கிலோ வரை உள்ளது. ஒரு கிலோ ரூ.300-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. வாடிக்கையாளரின் கையில் இருக்கும் மாம்பழம் 3 கிலோ எடை கொண்டது. ஆதலால், ரூ.900 கொடுத்து மாம்பழத்தை வாங்கி சென்றார்.
சென்னை: அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிபிஇ (பேச்சிலர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ்) படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பிஏ (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, சுற்றுலா மேலாண்மை டிப்ளமா படிப்புக்கு இணையானது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை: மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. பள்ளிகல்வித் துறை சார்ந்த மத்திய அரசின் திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டு, தற்போது முடியாது என்று கூறுகிறார்கள். ஜவுளித் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அமைச்சருடன், தொழில் துறையினரை சந்திக்க உதவினோம். கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் காலதாமதம் ஆவதற்கு திமுக அரசுதான் காரணம். விஸ்வகர்மா, மலிவு விலை மருந்தகம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்துகின்றன. ஆனால், தமிழகத்தில் போட்டிக்கு திட்டங்கள்…
மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு, அடுத்த விசாரணை ஜூன் 13-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.அரங்கநாதன் உயர்…
சென்னை: மாநிலங்களவை எம்.பி.க்களாக திமுக சார்பில் கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் அதிகாரியிடம் இருந்து அவர்கள் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் நியமிக்கப்பட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில்…
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பயணிகளுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிர் பிழைத்தவர் களுக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவலுக் காகவும் காத்திருப்பவர்களுக்கு மன வலிமை கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன். துணை முதல்வர் உதயநிதி: இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை எடுக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல்…
சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினர் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் கண்டறியப்பட்டு சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் போலி ஆவணங்களுடன் வங்கதேசம், மியான்மர், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களில் சிலர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்றவர்கள் மீது சட்ட விரோதமாக குடியேறுதல், போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றுதல் உள்பட மேலும் சில சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தங்கி இருக்கும் அனைத்து வெளிநாட்டினர், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்…
