Author: admin

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப் பணியால், தேஜஸ், மன்னை, குருவாயூர் விரைவு ரயில் உள்பட 5 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளளது. தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, எழும்பூர் – மதுரை தேஜஸ் விரைவு ரயில் உள்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவற்றில் 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னை…

Read More

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதற்கு முன்பு நிகழ்ந்த 10 மோசமான விமான விபத்துகளின் விவரம்… * 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மும்பையிலிருந்து 213 பேருடன் புறப்பட்ட போயிங் 747 விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 213 பேர் உயிரிழந்தனர். * 1982-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் உயிரிழந்தனர். * 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில்…

Read More

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக. அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை சதவீதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022-ம் ஆண்டு ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மூலம், பெற்றோர் இல்லா மாணவர்கள், மாற்றுத் திறனாளி மற்றும் ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், உயர் கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக், ஐடிஐ-யில் சேர்க்கை: இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 6-வது தளத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து…

Read More

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்தோர் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் நகரம் முழுவதும் சாலை, தெருக்களில் பேரணி நடத்தினர். அப்போது பெரும் கலவரம் வெடித்தது. தற்போது கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. 1,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் நியூயார்க்,…

Read More

சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு கட்டுப்பாட்டு அறை மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமானம் அகமதாபாத்துக்குச் செல்லாமல் நடுவானில் திரும்பி மீண்டும் சென்னையை வந்தடைந்தது. அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் சீரடைந்த பின்பு, சென்னை- அகமதாபாத் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

நீங்கள் நினைப்பதை விட சிறுநீரக கற்கள் மிகவும் பொதுவானவை, மேலும் அவை நம்பமுடியாத அளவிற்கு வேதனையாக இருக்கும். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், சில ஸ்மார்ட் உணவு மாற்றங்களுடன், அவற்றை உருவாக்கும் அபாயத்தை நீங்கள் கணிசமாகக் குறைக்கலாம் – அல்லது இதற்கு முன்பு நீங்கள் இருந்தால் அவை திரும்பி வருவதைத் தடுக்கலாம். உங்கள் உணவை கொஞ்சம் மாற்றுவதன் மூலம் உங்கள் வாய்ப்புகளை நீங்கள் குறைக்கலாம். ஆமாம், உங்கள் சமையலறை அந்த மோசமான கற்களை ஒதுக்கி வைப்பதற்கான ரகசியத்தை வைத்திருக்கக்கூடும். எனவே அதை உடைப்போம்: என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், அந்த சிறுநீரகங்களை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருப்பது.சிறுநீரக கற்கள்: சாப்பிட உணவுஇது உங்கள் முழுநேர வேலை போன்றதுவிதி முதலிடம்: தண்ணீர் குடிக்கவும். அதில் நிறைய. நீரேற்றமாக இருப்பது கற்களை உருவாக்கும் உங்கள் சிறுநீர் கழிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை நோக்கம்…

Read More

அகமதாபாத்: உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவியது.…

Read More

சேலம்: டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அபிஷேக் தலை​மையி​லான சேலம் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி இரண்​டிலும் வெற்றி கண்​டுள்​ளது. இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. திருப்​பூர் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, தோல்​வியை பதிவு செய்​துள்​ளது. இதன் மூலம் 2 புள்​ளி​களு​டன் அந்த அணி 3-வது இடத்​தில் உள்​ளது. திருப்​பூர் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சேப்​பாக் சூப்​பர் கில்​லீஸ் அணி​யிடம் தோல்வி கண்​டிருந்​தது. எனினும் இதில் இருந்து மீண்டு வந்து அடுத்த ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான திண்​டுக்​கல் அணிக்கு எதி​ராக 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது.

Read More

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராக விலக்குகோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பின்னர், செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெரும் தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் எம்.பி கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம்,…

Read More