Author: admin

கோவை / திருப்பூர் / ஊட்டி: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று மொத்தம் 10,637 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். திருப்பூரில் சுடிதாரில் பட்டன் அதிகமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவிக்கு, பெண் போலீஸ் ஒருவர் வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் 6,994 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 234 பேர் தேர்வெழுத வரவில்லை. 6,760 பேர் தேர்வெழுதினர். 96.65 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு மையத்தில் 22 வயதான திருநங்கை தேர்வெழுதினார். அதேபோல, பள்ளி கல்வித்துறை மூலம்…

Read More

சென்னை: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9-ம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8-ம் தேதி சேலம், மே 9-ம் தேதி சென்னை, மே 10-ம் தேதி வேலூர், மே 12-ம் தேதி மதுரை, மே 13-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன். மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணியை நடத்த இருக்கிறோம். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தப் பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம். இந்நிலையில் விசிகவின் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறப்போராக…

Read More

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ கோவில்பட்டி/ நாகர்கோவில்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் 12,349 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல் நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல் நிலைப்பள்ளி, குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி, திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல் நிலைப்பள்ளி, திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராணி அண்ணா அரசு மகளிர்கல்லூரி, சங்கர்நகர் சங்கர்மேல்நிலைப்பள்ளி, விஜயநாராயணம் கேந்திர வித்யாலயா ஆகிய 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்த 6,413 மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கூட அனுமதிச்…

Read More

சென்னை: மாணவர்​களின் உயரை குடிக்​கும் நீட் தேர்​வில் இருந்து தமிழகத்​துக்கு விலக்க அளிக்க வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அன்புமணி: நீட் தேர்​வில் வெற்​றி​பெற முடி​யுமா என்ற அச்​சத்​தில் மேல்​மரு​வத்​தூரை சேர்ந்த கயல்​விழி என்ற மாணவி தற்​கொலை செய்து கொண்​டிருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்கிறேன். 2017-ம் ஆண்​டில் மருத்​துவ படிப்​புக்கு நீட் தேர்வு கட்​டாய​மாக்​கப்​பட்ட பிறகு ஒவ்​வொரு ஆண்​டும் தற்​கொலைகள் நிகழ்​கின்​றன. கடந்த இரு மாதத்​தில் 5 மாணவி​கள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர். நீட் தேர்வு ஒழிக்​கப்​பட​வில்லை என்​றால் தற்​கொலைகள் தொடர்​வதை​யும் தடுக்க முடி​யாது. நீட் தேர்வு தற்​கொலைகளுக்கு மத்​திய, மாநில அரசுகள் தான் பொறுப்​பேற்க வேண்​டும். வாக்​குறுதி அளித்து ஆட்​சிக்கு வந்த திமுக சட்​டப்​போ​ராட்​டம் நடத்​து​வோம் என்று வசனம் மட்​டும்​தான் பேசுகிறது. நீட் தேர்​வால் மருத்​துவ கல்​வி​யின் தரம் உயரவில்லை. மருத்​துவ…

Read More

கிரெக் ஆபெல் விரைவில் பெர்க்ஷயர் ஹாத்வேவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மாறுவார், புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பபெட்டிலிருந்து பொறுப்பேற்றார். வாரன் பபெட்டின் வாரிசாக, ஆபெல் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டு அணுகுமுறையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் மிகவும் திறமையான முதலீட்டாளர்களில் ஒருவரான மே 3 அன்று, வாரன் பபெட் இறுதியாக தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்தார் பெர்க்ஷயர் ஹாத்வே 94 வயதில். செய்தி மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும், பெர்க்ஷயர் ஹாத்வேயில் தனது வாரிசாக கிரெக் ஆபேலை தனது சொந்த குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பஃபெட்டின் முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால், வாரன் பஃபெட் நேபோடிசிமை நிராகரிக்கவும், அதற்கு பதிலாக டிரில்லியன் டாலர் நிறுவனத்தை இயக்கவும் தேர்வு மற்றும் வெளிநாட்டவர்? மேலும் அறிய படிக்கவும்:வாரன் பபெட்டின் குழந்தைகள் யார், அவர்கள் ஏன் பெர்க்ஷயர் ஹாத்வேவை வழிநடத்தவில்லை?அவிழ்க்கப்படாதவர்களுக்கு, வாரன் பபெட்டுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: ஹோவர்ட், பீட்டர் மற்றும்…

Read More

வேலூர்/திருவண்ணாமலை: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடை பெற்ற நிலையில் வேலூர், திரு வண்ணாமலையில் 18 தேர்வுக் கூடங்களில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் மொத்தம் 8,574 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 283 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்ட இந்த நுழைவுத் தேர்வுக்கு இந் தாண்டின் தேர்வு மையங்கள் அனைத்தும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன. அதன்படி, வேலூர் மாவட்டத் தில் மொத்தம் 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத 5,737 மாணவ, மாணவி களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற ‘நீட்’ நுழைவுத் தேர்வை 5,554 பேர் எழுதிய நிலையில் 183 பேர் தேர்வுக்கு வரவில்லை. ‘நீட்’ நுழைவுத்…

Read More

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று (மே.5) காலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகத் தொடங்கி, குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதாநாயகன் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் நடிகர் கவுண்டமணி. இவர் சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். கவுண்டமணியின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாந்தி இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 11.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.

Read More

தூத்துக்குடி: சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது. சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய கும்பலை தீவிர சோதனையில் ஈடுபட்டு கைது செய்ய தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கும்பல் தூத்துக்குடிக்குச் செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே…

Read More

ஓசூர்: ஆண்டு முழுவதும் சந்தையில் நல்ல விலை கிடைத்த நிலையில், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிந்துள்ளது. இதுபோன்ற நேரங்களில் உருளைக் கிழங்கை சேமிக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என ஓசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், பீ்ட்ரூட், நூல்கோல், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியி்ல் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஓசூர் பத்தளப்பள்ளி காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதில், பாகலூர், சூளகிரி, பேரிகை பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்பம் உருளைக் கிழங்கு சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இப்பகுதியில் விளையும் உருளைக்கிழங்கு செந்நிறத்தில் விளைவதாலும், இனிப்பு சுவையுள்ளதாலும், பொதுமக்கள் சமையலுக்கு அதிக அளவில் விரும்பி வாங்குகின்றனர்.…

Read More