Author: admin

அமராவதி: அகம​தா​பாத்​தில் ஏர் இந்​தியா விமான விபத்து குறித்து அறிந்​ததும், ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று நடை​பெற இருந்த ஓராண்டு சாதனை விளக்க கூட்​டத்தை ரத்து செய்​வ​தாக அறி​வித்​தார். ஆந்​தி​ரா​வில் சந்​திர​பாபு நாயுடு தலை​மையி​லான கூட்​டணி அரசு ஏற்​பட்டு நேற்​றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதன் காரண​மாக நேற்று மாலை ‘ஸ்​வர்​ணாந்​தி​ரா​வின் நல்​லாட்​சி’ எனும் பெயரில் மாபெரும் ஒராண்டு சாதனை விளக்க கூட்​டம் நடை​பெற இருந்​தது. இக்​கூட்​டத்​தில் ஓராண்டு கால ஆட்​சி​யின் சாதனை​கள் மட்​டுமல்​லாது, இனி வர இருக்​கும் 4 ஆண்டு கால வளர்ச்சி திட்​டங்​கள் குறித்​தும் அறிவிக்க இருந்​தது. இதற்​காக அமராவ​தி​யில் அனைத்து ஏற்​பாடு​களும் மிக சிறப்​பாக செய்​யப்​பட்​டிருந்​தன. ஆனால், அகம​தா​பாத் விமான விபத்​தால் இதனை ரத்து செய்ய நேரிட்​டது. இது குறித்து சந்​திர​பாபு நாயுடு கூறுகை​யில், “அகம​தா​பாத் ஏர் இந்​தியா விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்​தேன். மீளாத்​துயர் கொண்​டேன். இதில் உயிர் நீத்​தவர்​களின் ஆன்மா சாந்தி அடைய…

Read More

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் எந்த அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? என அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், டாஸ்மாக் முறைகேட்டுக்கும் ஆகாஷ்…

Read More

டாக்டர் வாஸிலி எலியோப ou லோஸ் மூளையை அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க ஐந்து பழக்கங்களை அறிவுறுத்துகிறார், இது உங்கள் 30 அல்லது 40 களில் தொடங்கலாம். 7-9 மணிநேர தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், தினசரி 30 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள், மேலும் உங்கள் சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த சூரிய ஒளி வெளிப்பாட்டைப் பெறுங்கள். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மூளையை கூர்மையாகவும் கவனம் செலுத்துவதாகவும் இருப்பது முக்கியம். வயதான காலத்தில் அறிவாற்றல் வீழ்ச்சி திடீரென தோன்றும் என்று பலர் கருதினாலும், அது பெரும்பாலும் முன்னதாகவே தொடங்குகிறது. நினைவகம், கவனம் மற்றும் மன ஆற்றலில் ஏற்படும் மாற்றங்களாக இது தொடங்கலாம். இந்த அறிகுறிகள் 30 அல்லது 40 களில் ஆரம்பத்தில் தொடங்கலாம். நல்ல செய்தி? அல்சைமர் ஆபத்தில் 90% தடுக்கக்கூடியது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. நியூயார்க்கைச் சேர்ந்த போர்டு சான்றளிக்கப்பட்ட அவசர மருத்துவ மருத்துவரான எம்.டி., டாக்டர் வாஸிலி எலியோப ou லோஸ், ஐந்து…

Read More

அகமதாபாத்: விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்த 40 வயது விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் ராம் மோகன் நாயுடு, பூபேந்திர படேல் உள்ளிட்டோர்…

Read More

அனிருத் பின்னணி இசை தாமத்தினால், ‘கிங்டம்’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் டீசர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது பின்னணி இசை தாமதமாவதால் இதன் வெளியீடு ஜூலை 4-ம் தேதியில் இருந்து தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் மீண்டும் தள்ளிவைக்காமல் முடிந்தளவுக்கு ஜூலை 4-ல் வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பிலும் படக்குழு இருக்கிறது. இந்தப் பணிகள் தாமதத்தினால் மட்டுமே படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் பட வெளியீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. கவுதன் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. நாக வம்சி தயாரிப்பில்…

Read More

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், இந்து மறவர், இந்து வேளாளர், இந்து நாடார் என ஜாதிக்கு முன் ‘இந்து’ என்ற வார்த்தை இடம் பெறும். ஆனால் தற்போது ஆன்லைன் வழியாக பெறப்படும் ஜாதி சான்றிதழ்களில், நேரடியாக ஜாதி பெயர், அது பிற்படுத்தப்பட்ட பிரிவா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவா என மட்டும் குறிப்பிடப்படுகிறது. ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் உள்ளன என்பதற்காகவே, அந்த ஜாதிகளுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில், ஜாதி பெயருடன் இந்து என்ற வார்த்தை சேர்க்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியும். அப்படியிருக்கும் போது, ஏன் இந்து என்ற…

Read More

அஸ்வகந்தா (அக்கா விதானியா சோம்னிஃபெரா) ஒரு தீவிர தருணத்தைக் கொண்டிருக்கிறார். இது கம்மிகள், காப்ஸ்யூல்கள், பொடிகள் மற்றும் டீஸில் உள்ளது – மன அழுத்த நிவாரணம் மற்றும் சிறந்த தூக்கம் முதல் அதிக ஆற்றல் மற்றும் ஜிம்மில் கூடுதல் வலிமை வரை அனைத்தையும் ஆதரிக்கிறது. மக்கள் அதை விரும்புகிறார்கள். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது, எனவே பெரும்பாலான மக்கள் இது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர். மேலும், அது.ஆனால் யாரும் வருவதைக் காணாத சதி திருப்பம் இங்கே: மேலும் மேலும் அறிக்கைகள் அஸ்வகந்தாவை கல்லீரல் பிரச்சினைகளுடன் இணைக்கின்றன -அவற்றில் சில மிகவும் தீவிரமானவை, அரிதான சந்தர்ப்பங்களில் கூட ஆபத்தானது.என்ன? அஸ்வகந்தாவிலிருந்து கல்லீரல் பாதிப்பு?ஆமாம், இது காட்டுத்தனமாக தெரிகிறது, ஆனால் வளர்ந்து வரும் சான்றுகள் உள்ளன. லிவர்டாக்ஸின் கூற்றுப்படி (என்ஐஎச் மூலம் நடத்தப்படும் ஒரு தரவுத்தளம்), அஸ்வகந்தாவுடன் இணைக்கப்பட்ட கல்லீரல் காயம் தொடர்பான உண்மையான, ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்கள் அதை…

Read More

கொல்​கத்தா: மேற்கு வங்கத்தில் இரு குழுக்கள் இடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலா என்ற கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் கடை கட்டுவது தொடர்பாக இரு குழுக்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. இதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன. வன்முறையில் 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீஸார் சிலரும் காயம் அடைந்தனர். அப்பகுதியில் அமைதியை பராமரிக்க பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறை தொடர்பாக ரவீந்திரநகர் போலீஸார் 7 வழக்குகள் பதிவு செய்து, இதுவரை 40 பேரை கைது செய்துள்ளனர். அப்பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை அரசியல் கட்சியினர் அங்கு செல்ல…

Read More

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்கள் அந்த அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். 250 ரன்களை சேஸ் செய்து விடலாம் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் அதிக ஸ்கோரை எட்டியவரான டேவிட் பெடிங்கம் ஆஸ்திரேலியா என்ன இலக்கு நிர்ணயித்தாலும் வெல்வோம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் ‘கொலாப்ஸ்’! – முதல் இன்னிங்ஸில் ஸ்மித், பியூ வெப்ஸ்டர் நீங்கலாக ரபாடா, யான்செனிடம் காலியான ஆஸ்திரேலிய டாப் ஆர்டர், 2-வது இன்னிங்ஸில் யான்சென், ரபாடா, இங்கிடி, முல்டர் ஆகிய வேகப்பந்து வீச்சுக்கு 73 ரன்களுக்கு 7 விக்கெட் என்று மடிந்தனர். பிறகு ஸ்டார்க், கேரி இணைந்து 61 ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.…

Read More

விஜய் பிறந்த நாளன்று ‘மெர்சல்’ திரைப்பட மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. ஜூன் 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் விஜய். அன்றைய தினம் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார்கள். அன்றைய தினத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தைத் தாண்டி ‘மெர்சல்’ படமும் அன்றைய தினத்தில் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறது படக்குழு. இது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அட்லி இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Read More