Author: admin

சென்னை: கல்வி உதவித்தொகையுடன் கூடிய முதுநிலை தமிழ் படிப்பில் சேர மாணவர்கள் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “இந்த நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண் கால ஒருங்கிணைந்த முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு (Five Years Integrated Post Graduate M.A. Tamil), முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு ( M.A Tamil ) மற்றும் தமிழ் முனைவர் பட்டம் ( Ph.D ) பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஏற்புடன் நடத்தப்படுகின்றன. இதில் முதுநிலை தமிழ் (2 ஆண்டு) படிப்புக்கான வரும் கல்வியாண்டு ( 2025-26 ) மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை இளநிலை பட்டம் முடித்தவர்கள் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக்…

Read More

பசில் ஜோசப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாள திரையுலகில் நடிகராகவும், இயக்குநராகவும் முன்னணியில் இருப்பவர் பசில் ஜோசப். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படம் இந்திய திரையுலகில் பலருடைய கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் இவரிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். அதே வேளையில் மறுபுறம் இவருடைய நடிப்பில் வெளியான படங்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ‘சக்திமான்’ படத்தை பசில் ஜோசப் இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்குப் பிறகு எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது. தற்போது பசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லி படத்தினை முடித்துவிட்டு, பசில் ஜோசப் படத்தினை தொடங்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்பட…

Read More

திருவள்ளூர்: “மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்து, இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயர்தர சிகிச்சை வழங்கவும் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விமான விபத்து தொடர்பாக நேர்மையான, சுதந்திரமான நீதி விசாரணை…

Read More

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், 6 பேரின் முகம் அப்படியே இருந்ததால், அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதே பரிசோதனை நடைமுறைகளை கையாளும் ஆய்வாளர் சிராக் கோசாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “வியாழக்கிழமை விபத்துக்குப் பிறகு குறைந்தது 265 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், ஆறு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் முகம் அப்படியே…

Read More

சென்னை: தேசதுரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் ​​வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, தேசதுரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைகோவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது…

Read More

அமெரிக்க ராப்பர் குளோரில்லா இடம்பெறும் தனது சமீபத்திய தனிப்பாடலான கில்லின் இட் கேர்ள் வெளியீட்டில் பி.டி.எஸ்ஸின் ஜே-ஹோப் மீண்டும் தனது பல்துறை மற்றும் மேடை இருப்பை நிரூபித்துள்ளார். புத்திசாலித்தனமான ட்ராக் அவரது தனி ஒற்றை முத்தொகுப்பில் இறுதி வெளியீடாகும், இது ஸ்வீட் ட்ரீம்ஸ் (சாதனை. மிகுவல்) மற்றும் மோனாலிசா மார்ச் 2025 இல் தொடங்கியது.’கில்லின்’ இட் கேர்ள் ‘பாடல் மற்றும் கருத்துஒரு துடிப்பான பாப் கோரஸில் தடையின்றி கலப்பதற்கு முன் பாடல் ஒரு மெல்லிய ஹிப்-ஹாப் தாளத்துடன் தொடங்குகிறது, இதனால் கேட்போர் அதன் கவர்ச்சியான துடிப்பு மற்றும் தவிர்க்கமுடியாத ஆற்றலால் கவர்ந்திழுக்கிறார்கள். பாடல் ரீதியாக, பாடல் முதல் பார்வையில் அன்பின் மின்மயமாக்கல் உணர்வைப் பிடிக்கிறது, இது ஒரு துடிப்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது. மியூசிக் வீடியோ அதிர்வுடன் சரியாக பொருந்துகிறது. ஜே-ஹோப் ஒரு சிற்றின்ப மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்குவதால் கவர்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். அவரது வெளிப்படையான முகக் குறிப்புகள் முதல் திரவ…

Read More

புதுடெல்லி: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட தமிழகத்தின் வரலாற்றாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறை தலைவரும், செனட் உறுப்பினருமான பேராசிரியர் சுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாய்வு அறிக்கையை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார். கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல் பூர்வமான ஆதாரம் என்பது காலதாமதமே. இனியும் தாமதப்படுத்தாமல் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். ’தொல்லியல் அகழாய்வு’ வரலாற்றுத் தரவுகளைத் தந்து கடந்தகால பண்பாடுகளை உறுதியாக கட்டமைக்கும் ஓர் அரிய முன்னெடுப்பாகும். இந்திய துணைகண்டத்தில் பல்வேறு மாநிலப்பகுதிகளில் நடந்தேறிய பல அகழாய்வுகள் அந்தந்த மொழி, மண்-இனமரபு சார்ந்த பண்டைய வரலாற்று மாண்புகளை வெளிக்கொணர்ந்து சமகால மக்களை வியக்க வைத்துள்ளன. கீழடியில் இந்திய தொல்லியல் துறை(ஏஎஸ்ஐ) சார்பில் தெற்குமண்டல அகழாய்வு அலுவலக கண்காளிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வு…

Read More

சென்னை: “அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. திமுக கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை போன்ற காழ்ப்புணர்ச்சியாளர்கள் தமிழக அரசு மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என கோயபல்சை மிஞ்சுகிற வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது இருப்பை காட்டிக் கொள்வதற்கு இத்தகைய அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார். 2014 மக்களவை தேர்தல்…

Read More

அறிவியலின்படி, நாய் உரிமையாளர்கள் ஏன் தங்கள் செல்லப்பிராணிகளைப் போல இருக்கிறார்கள் நாய் உரிமையாளர்கள் பெரும்பாலும் தங்கள் அன்பான செல்லப்பிராணிகளைப் போல எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு பூங்காவில் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் ஸ்க்ரோலிங் செய்யும் போது இதை நீங்கள் கவனித்திருக்கலாம். வலுவான தாடை மற்றும் செதுக்கப்பட்ட ஹேர்கட் கொண்ட ஒரு மனிதன் புல்டாக் நடந்து தனது அதிர்வை பிரதிபலிக்கிறான். . எனவே, இது ஒரு பாப் கலாச்சார நகைச்சுவையாக மாறியுள்ளது: செல்லப்பிராணி பெற்றோர் தங்கள் நாய்களைப் போல தோற்றமளிக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்றால் என்ன செய்வது?மாறிவிடும், இந்த விசித்திரமான ஆனால் கவர்ச்சிகரமான நிகழ்வைப் பற்றி விஞ்ஞானத்திற்கு கொஞ்சம் சொல்ல வேண்டும்! தங்களை சில அம்சங்களை பிரதிபலிக்கும் நாய்களை மக்கள் பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது – தோற்றத்தில் மட்டுமல்ல, ஆளுமை, உணர்ச்சிகள் மற்றும் பழக்கவழக்கங்களிலும்…

Read More

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி பாப்பா (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்கக் கூறுகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் விமானத்தில் பயணித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதால் பூமி சவுகான் என்பவர் உயிர் பிழைத்திருக்கிறார். குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான், லண்டனில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பூமி சவுகான், நேற்று…

Read More