Author: admin

புதுடெல்லி: வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் வீடு சேதப்படுத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் ரவீந்திரநா் தாகூர் வாழ்ந்த வீடு வங்கதேசத்தின் சிராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ளது. இந்த வீட்டை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய் கிழமை தாக்கி சேதப்படுத்தினர். இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: வங்காளம், இந்திய கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் அடையாளமாக திகழ்பவர் ரவீந்திரநாத் தாகூர். இவரது வீட்டை ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெபாசத்-இ-இஸ்லாம் அமைப்பினர் சேதப்படுத்தியதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுப்பவில்லை. அவர் வங்கதேச ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கிகளாக பார்க்கிறார். அரசியல் காரணங்களுக்காக அவர் அமைதியாக இருக்கிறார். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவீந்திரநாத் வாழ்ந்த வீடு சேதப்படுத்தப்பட்டதற்கு, கலாச்சாரம் மற்றும் நாகரீக சிந்தனைகளை மதிக்கும் நாடுகள் ஒன்றிணைந்து கண்டனம்…

Read More

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, வெளியாகாமல் இருக்கிறது. தற்போது இப்படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். இது தொடர்பாக கவுதம் மேனன், “‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிட்டு விட்டுதான் அடுத்த படம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதற்காக இயக்கம், நடிப்பு என அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டேன். இந்தப் படத்தினை நிறைய முதலீட்டாளர்களிடம் திரையிட்டு காட்டினேன். அதில் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் படத்தின் மீதிருக்கும் சட்ட சிக்கல்களை சரிசெய்ய பேசி வருகிறேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக படம் வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார்,…

Read More

சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல,…

Read More

அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தானும் விஜய் ரூபானியும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (ஜூன் 12) மதியம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இன்று காலை அகமதாபாத் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். பின்னர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி விஜய் ரூபானியின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், விஜய் ரூபானியுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இது…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று `டெட்’ தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு (தாள்-1) தேர்ச்சி அவசியம். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டெட் தகுதித் தேர்வில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 2,563 காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை 25,319 பேர் எழுதினர். இவர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். டெட் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனத் தேர்வை எழுத முடியும். அதில் 23,872 பேர் தேர்வு செய்யப்பட்டாலும் காலியிடங்களின் அடிப்படையில் 2,563 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர் நியமனம்…

Read More

“நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை” என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார். ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், சித்தார்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மிஷ்கின் பேசும் போது, “‘பிசாசு 2’ மற்றும் ‘ட்ரெயின்’ படங்களுக்கு பின் மிஷ்கின் முகவரியே இல்லாமல் போய்விடுவார் என்று ஒருவர் சொல்லியிருந்தார். அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன்.…

Read More

மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்வதாக ஏற்பட்ட குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து கணவர் நீக்கப்பட்ட நிலையில், மேயர் இந்திராணி, உள்ளூர் அமைச்சர்கள், மாநகர மாவட்டச் செயலாளர், ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஆதரவில்லாமல் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார். மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு அடிப்படையில் 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி மேயரானார். இதனால் மேயர் பதவியை எதிர்பார்த்த திமுக முக்கிய நிர்வாகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால், தொடக்கம் முதலே மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதல் நீடித்து வந்தது. கட்சித் தலைமை அடிக்கடி திமுக கவுன்சிலர்களை அழைத்து சமாதானம் செய்த போதும், தற்போது வரை மேயருக்கும், ஆளும் கட்சி கவுன்சிலர்களுக்கு மான பனிப்போர் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் மேயர் இந்திராணி தன்னிச்சையாக செயல்படாமல் தனது…

Read More

உங்கள் தலையணையில் எஞ்சியிருக்கும் தலைமுடியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதிகாலை 2 மணிக்கு கூகிளில் “முடி வீழ்ச்சியை எவ்வாறு நிறுத்துவது” என்பதை நீங்கள் எப்போதாவது தட்டச்சு செய்திருந்தால், நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. ஒரு கட்டத்தில், நம் தலைமுடி வழக்கத்தை விட மெலிக்கவோ அல்லது சிந்தவோ தொடங்கும் போது நம்மில் பெரும்பாலோர் அந்த அமைதியான பீதியைத் தாக்குகிறோம். அந்த இரவு நேர முயல் துளைகளில் எப்போதும் காண்பிக்கப்படும் ஒரு துணை? ஒமேகா -3. ஆனால் இது மிகைப்படுத்தலின் அலைகளை சவாரி செய்யும் மற்றொரு ஆரோக்கிய போக்கு, அல்லது அது உண்மையில் உங்கள் தலைமுடிக்கு ஏதாவது செய்ய முடியுமா?எனவே, ஒமேகா -3 கள் சரியாக என்ன?ஒமேகா -3 கள் உங்கள் உடல் சொந்தமாக செய்ய முடியாத ஆரோக்கியமான கொழுப்பு. நீங்கள் சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது கூடுதல் வழியாகவோ அவற்றைப் பெற வேண்டும். EPA, DHA மற்றும் ALA மூன்று முக்கிய வகைகள் உள்ளன. EPA…

Read More

நாசாவின் தங்கப் பணி ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது, இது விஞ்ஞானிகள் பூமியின் மேல் வளிமண்டலத்தை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை மாற்றுகிறது. முதன்முறையாக, தங்கம் அயனோஸ்பியரில் எக்ஸ் வடிவ வடிவங்களைக் கண்டது-இது பூமியின் மேற்பரப்பில் சுமார் 50 முதல் 400 மைல் வரை நீடிக்கும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் அடுக்கு. இவை எக்ஸ் வடிவ கட்டமைப்புகள் அமைதியான விண்வெளி வானிலையின் போது காணப்பட்டது, இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் இதுபோன்ற வடிவங்கள் வலுவான காலத்தில் மட்டுமே நடக்கும் என்று கருதப்பட்டது சூரிய புயல்கள். ஜியோபிசிகல் ரிசர்ச்: விண்வெளி இயற்பியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகள், ஜி.பி.எஸ் சிக்னல்கள் மற்றும் விண்வெளி வானிலை கணிப்புகளை நாங்கள் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதை பாதிக்கலாம்.எக்ஸ் வடிவ கட்டமைப்புகளுக்குப் பின்னால் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்பட்டதுபொதுவாக, அயனோஸ்பியரில் காந்த பூமத்திய ரேகையின் இருபுறமும் அடர்த்தியான பிளாஸ்மாவின் இரண்டு பட்டைகள் உள்ளன. ஐடிஆரின் கூற்றுப்படி, பூமத்திய ரேகை அயனியாக்கம்…

Read More

பதிண்டா: பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரைச் சேர்ந்த காஞ்சன் குமாரி (30), கமல் கவுர் பாபி என்ற பெயரில் பல்வேறு சமூக ஊடக இன்ப்ளூயன்சராக இருந்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவரை 3.83 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பதிண்டா நகரில் ஆதேஷ் மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து அவருடைய உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பதிண்டா காவல் கண்காணிப்பாளர் நரிந்தர் சிங் கூறும்போது, “காஞ்சன் குமாரி பதிண்டாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடல் கூறாய்வுக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றார்.

Read More