சென்னை: நீட் விலக்கு பெற முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டமானது கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 19-ம் தேதி வரை 365 நாட்களும் தினமும் 1000 நபர்களுக்கு மேல், வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 75-வது நேற்று கொளத்தூர் 70-வது வார்டு, ரமணா நகர், கௌதமபுரம் குடியிருப்பு பகுதி மற்றும் 68-வது வார்டு, பெரியார் நகர் மருத்துவமனை அருகில், கார்த்திகேயன் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன்…
Author: admin
சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.250 என அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்தது. தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று (மே 6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025 ஆகவும், பவனுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200 ஆகவும் விற்பனையாகி வருகிறது. சர்வதே அளவில்…
பிளாக்பிங்கின் லிசா ஒரு தைரியமான மெட் காலா 2025 தோற்றத்தை ஒரு சுத்த கருப்பு பிளேஸர் உடையில் தோற்றமளித்தார், கருப்பொருளைத் தவிர்த்தார், ஆனால் முழு கவனத்தையும் கட்டளையிட்டார். முத்து உடல் நகைகள், சுத்த டைட்ஸ் மற்றும் தைரியமான புதுப்பிப்பு ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட லிசாவின் தோற்றம் ஆன்லைனில் கலவையான எதிர்வினைகளைத் தூண்டியது, ஆனால் மாலையின் தனித்துவமான நட்சத்திரங்களில் ஒன்றாக அவளை உறுதியாக நிலைநிறுத்தியது. சரி, மெட் காலா 2025 ஐ பேசலாம். தீம்? “சூப்பர்ஃபைன்: தையல் கருப்பு பாணி.” கருப்பு ஃபேஷன், கலாச்சாரம் மற்றும் படைப்பு மரபு ஆகியவற்றின் பெரிய, தைரியமான கொண்டாட்டம். ஐகான்கள், கதைகள் மற்றும் பாணியை வடிவமைக்கும் அறிக்கைகள் மற்றும் வரலாற்றைக் கவனிக்க ஒரு வாய்ப்பு.கே-பாப் சூப்பர் ஸ்டார் லிசா மனோபலை உள்ளிடவும், இது அவரது மிகவும் பிரபலமான மெட் காலா அறிமுகத்தை உருவாக்கியது. புகழ்பெற்ற கலைஞர் ஹென்றி டெய்லரின் உருவப்படங்களைக் கொண்ட தனிப்பயன் லூயிஸ் உய்ட்டன் லேஸ்…
பெங்களூரு: கடல் பொறியியல் முதல் உணவு பேக்கேஜிங் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வரையிலான தொழில்களுக்கு பயனளிக்கும் பண்புகளுடன் இந்திய ஆராய்ச்சியாளர்களின் குழு ஒரு பயோ இன்ஸ்பைர்டு அலுமினிய மேற்பரப்பை உருவாக்கியுள்ளது.’கொலாய்டுகள் மற்றும் மேற்பரப்புகள் பி: பயோயின்பேஸ்கள்’ இல் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள், இயற்கையில் காணப்படும் கட்டமைப்புகள், தாமரை இலைகள் மற்றும் பூச்சி இறக்கைகள் போன்றவை – தண்ணீரை விரட்டும், அரிப்பு மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும், குறைந்த நீரால் தங்களை சுத்தம் செய்யும் பன்முக மேற்பரப்புகளை எவ்வாறு வழங்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.ஹர்பிரீத் எஸ் க்ரூவால் தலைமையில், அணி சிவ் நாடார் பல்கலைக்கழகம் டெல்லி-என்.சி.ஆரில் குறைந்த விலை மற்றும் சுற்றுச்சூழல் நட்பு செயல்முறையைப் பயன்படுத்தி மைக்ரோ மற்றும் நானோ கட்டமைக்கப்பட்ட அலுமினிய மேற்பரப்புகளை உருவாக்கியது. அலுமினியத் தாள்களை மைக்ரோ வடிவங்களுடன் பதிப்பதும், பின்னர் அவற்றை சூடான நீரில் மூழ்கடிப்பதும் இந்த முறை, இரண்டு தனித்துவமான மேற்பரப்புகளை ஏற்படுத்தியது: “நானோ” மற்றும் “வரிசைமுறை”.இந்த மேற்பரப்புகள் பின்னர்…
புதுடெல்லி: வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான தற்போதைய 40 செயலிகளை உள்ளடக்கி ஒரே செயலி மற்றும் இணையதளத்தை (ECINET) தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலில் தற்போது இறுதி மற்றும் சோதனை கட்டத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் பிஹார் தேர்தலுக்கு முன் இது அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “வாக்காளர் வாக்குப்பதிவு செயலி, உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் செயலி, தேர்தல் முடிவுகள் செயலி போன்ற ஏற்கெனவே உள்ள செயலிகளும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வலைதளங்களும் புதிய செயலியில் ஒருங்கிணைப்படும். மார்ச் மாதம் நடைபெற்ற தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் இதற்கான கருத்து உருவானது” என்று தெரிவித்தனர்.
தரம்சாலா: எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நிலைமையை மாற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வி சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 40 பந்துகளில், 74 ரன்களும் அப்துல் சமத் 24 பந்துகளில் 45 ரன்களும் விளாசினர். டாப் ஆர்டரில் எய்டன் மார்க்ரம் 13, மிட்செல் மார்ஷ் 0, நிகோலஸ் பூரன் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பார்முக்கு திரும்புவதற்கு தடுமாறி வரும் கேப்டன் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து நடையை கட்டினார். லக்னோ…
தவெக தலைவர் விஜய்யிடம் தெளிவான அரசியல் பார்வையோ, மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதலோ இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிர பாஜக எதிர்ப்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை பலமுறை தனது எக்ஸ் தளத்தில் கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் சாடி பலமுறை பேட்டியளித்துள்ளார். தற்போது பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில் பவன் கல்யாண் மற்றும் விஜய் இருவரின் அரசியல் வருகை குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அதில், “பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது ரசிகர்கள் பட்டாளத்தை மட்டுமே தொண்டர்களாகக் கொண்டவர். அவர் இதனை ஏற்காமல் இருக்கலாம். ஆனால், அதுதான் நிஜம். அதேபோல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு பிரபலமான இயக்குநர். அவர் தனது நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே அவரை அறிமுகப்படுத்த ஏராளமான படங்களை தயாரித்தவர். பவன் கல்யாண் பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்,…
சென்னை: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 5, 12 ,18 மற்றும் 28% என நான்கு ஸ்லாப்புகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சிங்கப்பூரில் இருப்பது போல ஒரே ஸ்லாப்பாக அதாவது 8 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி இருக்க வேண்டும். இதற்காக பாமக தொடர்ந்து போராடும். மருத்துவம் போல வணிகமும் ஒரு சேவை ஆகும். தமிழகத்தில் வணிகர்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்வதற்கு பாமக துணை நிற்கும். எந்த பிரச்சனை வந்தாலும் பாமக உதவும். மே 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டுக்கு அனைவரும் வரவேண்டும். தமிழகத்தில் சாதி…
இளவரசர் ஹாரி மற்றும் இளவரசர் வில்லியம் ராயல் நாடகம் ஒருபோதும் முடிவதில்லை. இப்போது, பிபிசியுடனான இளவரசர் ஹாரியின் வெடிக்கும் நேர்காணல் போல் தெரிகிறது, இங்கிலாந்தில் பாதுகாப்பிற்காக தனது சட்டப் போரை இழந்த பின்னர், இங்கிலாந்து ராயல்ஸுடன்- குறிப்பாக அவரது சகோதரர் இளவரசர் வில்லியம். மாற்றப்படாதவர்களுக்கு, இளவரசர் ஹாரி சமீபத்தில் பிபிசியுடன் மற்றொரு குண்டுவெடிப்பு நேர்காணலுக்காக அமர்ந்தார். அவர் இங்கிலாந்தைக் காணவில்லை மற்றும் அவரது குடும்பத்தினருடன் நல்லிணக்கத்தை விரும்புவதைப் பற்றி பேசியபோது, இளவரசர் வில்லியம் அதை வாங்கவில்லை என்று உள்நாட்டினர் கூறுகிறார்கள்-மேலும் அவர் தனது தம்பியுடன் ஒரு பெரிய ராயல்-லெவல் பழிவாங்கலுக்கு சதி செய்யலாம்.டெய்லி பீஸ்டின் ஒரு அறிக்கையின்படி, அரண்மனை உள்நாட்டினர் ராயலின் குடும்பங்கள் ஹாரியின் கருத்துக்களால் “திகைத்துப்போன மற்றும் விரக்தியடைந்துள்ளனர்” என்று கூறுகின்றனர். ஆனால் வில்லியம்? அவர் வெளிப்படையாக போதுமானவர். வார்த்தை என்னவென்றால், அவர் சிம்மாசனத்தை எடுத்துக் கொண்டவுடன், அவரது முதல் அரச செயல்களில் ஒன்று ஹாரி மற்றும் மேகனை அவர்களின்…
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு ரஷ்யா எப்போதும் பக்கபலமாக இருக்கும்” என்று தெரிவித்தார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தீவிரவாத தாக்குதலில்…
