வேலூர்: தமிழக மாங்காய் லோடு ஏற்றிய வாகனங்களை ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதால், அதிருப்தியடைந்த விவசாயிகள் பரதராமியில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரா வகை மாங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் மா விவசாயிகள் ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளை நம்பியே உள்ளனர். அதிக மகசூல் தரும் பெங்களூரா வகை மாங்காய்களை அறுவடை செய்ததும் லாரி, டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலும் மா விவசாயம் அதிகளவில் இருப்பதால் அம்மாநில விவசாயிகளுக்கு அங்குள்ள பழச்சாறு தொழிற் சாலைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதனால், வேலூர்…
Author: admin
‘மாமன்’ படம் வெளியாகி 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. மே 16-ம் தேதி சூரி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்த வசூலில் ரூ.40 கோடியை கடந்து சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் அனைவருமே பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனிடையே ‘மாமன்’ வெளியாகி 30 நாட்கள் ஆகிவிட்டதை தொடர்ந்து சூரி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சூரி, “இன்று நம்ம படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 30-வது நாளை எட்டியது! இந்த வெற்றி முழுக்க முழுக்க – உங்கள் அன்புக்கே! வார்த்தைகள் போதவில்லை. மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும். படம் முதல் நாளில் எளிமையாகத் தொடங்கியது. ஆனால், சில நாட்களிலேயே குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் வந்ததோடு, அது ஒரு பெரும் அலை போல பரவியது. இன்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ள இந்த பயணம் – உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல்…
உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஊட்டி வந்துள்ளனர். கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களு க்கு சனிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு, வருவாய், காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அரக்கோணத்தில் இருந்து ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறும்போது, “நீலகிரி மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட்…
மதுரை: தனியார் விமான நிறுவனம் சார்பில் மதுரை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்கியது. முதல் நாளில் அபுதாபியில் இருந்து 134 பயணிகள் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர், பிற்பகல் 2.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 174 பயணிகள் அபுதாபிக்கு பயணித்தனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “இந்த விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் நடைபெறும். பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக புதிய விமான சேவை தொடங்கும்போது, விமான நிலையத்தில் அந்த விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தால் அபுதாபி – மதுரை விமானத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை” என்று அதிகாரிகள் கூறினர்.
சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பட்ஜெட் விலையில் சந்தையில் விற்பனை ஆகிறது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் பிளே மற்றும் ஸ்டார்ம் லைட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்டார்ம் சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்களாக அமைந்துள்ளது. இந்த இரண்டு போன்களுக்கும் ஒரு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.75 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 7060 சிப்செட் பின்பக்கம் இரண்டு கேமரா. அதில் 50…
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜைகள் நடத்தவும் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். இதையடுத்து மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கவும் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதிரி அறுபடை…
லாஸ் ஏஞ்சல்ஸ்: செயற்கை நுண்ணறிவின் துணையோடு பொம்மைகள் மற்றும் மொபைல் கேம்ஸ்களை வடிவமைக்கும் நோக்கில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது பார்பி பொம்மையை தயாரித்து, உலக அளவில் விற்பனை செய்யும் ‘மேட்டல்’ நிறுவனம். அது குறித்த விரைவுப் பார்வை இது. மேட்டல் நிறுவனம் ஹாட் வீல்ஸ் கார்ஸ் மற்றும் யூனோ கார்டுகளையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய டிஜிட்டல் காலத்துக்கு ஏற்ப நவீனத்துவம், பிரைவசி மற்றும் புதுமையை தங்கள் சார்ந்துள்ள தொழிலில் கொண்டு வரும் வகையில் ஓபன் ஏஐ உடன் இணைந்துள்ளதாக மேட்டல் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வர்த்தக ரீதியான கொள்கை காரணமாக பொம்மை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் வணிகம் மந்த நிலையில் உள்ளது. இந்த சூழலில்தான் மேட்டல் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது. தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், தயாரிப்புகளில் புதுமையை புகுத்தும் நோக்கிலும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட்டை பயன்படுத்தவும்…
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில், ஜூன் 23, 24-ல் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை…
வாஷிங்டன்: ஈரான் நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும், எனவே விரைவாக ஒப்பந்தத்தை எட்டுமாறும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகமான ட்ரூத் பக்கத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புகளை ஈரானுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினேன். அவர்களிடம் நான், “அதைச் செய்யுங்கள்” என்று வலுவான வார்த்தைகளில் சொன்னேன். எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் அறிந்த, எதிர்பார்த்த அல்லது சொல்லப்பட்ட எதையும் விட இது மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர்களிடம் நான் சொன்னேன். அமெரிக்கா இதுவரை உலகின் சிறந்த மற்றும் மிகவும் ஆபத்தான ராணுவ உபகரணங்களைத் தயாரிக்கிறது. இவை இஸ்ரேலிடம் நிறைய உள்ளன. இன்னும் வரவிருக்கிறது. அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது…
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூன் 14) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூன் 14) முதல் வரும் 17-ம் தேதி வரை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று…
