அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சென்ற மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமருடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இதைத் தொடர்ந்து விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். மீளாத் துயரில் சிக்கியுள்ள ரூபானி குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின்…
Author: admin
தெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நேற்று சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்ததாக்குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான யுரேனியம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்டினால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை 5 கட்ட பேச்சு நடத்தியும், எந்தஉடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல்…
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன்” என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்களுக்கும், அவருடைய கட்சியில் இருந்து வெளியே வந்த பெண்களுக்கும் அவருடைய தொண்டர்கள் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதை அந்த பெண்ணின் அம்மா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பது போல அவர்களுக்கு பாதுகாவலர்கள் இல்லை. ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் இதையெல்லாம் தடுக்க வேண்டும். ஒரு திறமையான அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தின்…
சுவையான கோடைகால விருந்துக்கு இப்போது நடவு செய்ய வேகமாக வளரும் 6 பழங்கள் ஒரு சூடான பிற்பகலில் உங்கள் தோட்டத்தில் உலா வருவதையும், உங்கள் சொந்த முற்றத்தில் இருந்து பழுத்த, சதைப்பற்றுள்ள பழங்களைப் பறிப்பதையும் சித்தரிக்கவும், கடை ரன் தேவையில்லை. பழ மரங்கள் வழக்கமாக பல ஆண்டுகளாக செயல்படுவதற்கும் காத்திருப்பதற்கும் சமமாக இருக்கும்போது, சில பழங்கள் உள்ளன, அவை ஒரு வளரும் பருவத்தில் விழுங்கப்படும் அளவுக்கு விரைவாக வளர்கின்றன.நீங்கள் ஒரு புதிய தோட்டக்காரர் அல்லது நீண்டகால பச்சை கட்டைவிரல் என்றாலும், விரைவான உற்பத்தி செய்யும் பழங்கள் உள்ளன, அவை குறைந்த சூரியன், நீர் மற்றும் முன்னறிவிப்புடன் செழிக்கக்கூடியவை. சிறந்த நிலைமைகள் மற்றும் நேரத்துடன், நீங்கள் பல மாதங்களுக்குள் ஸ்ட்ராபெர்ரிகள், முலாம்பழம்கள் மற்றும் பெர்ரிகளைத் தேர்வுசெய்யலாம் உங்கள் கோடைகாலத்தை பலனாகவும் சுவையாகவும் மாற்றலாம். வேகமாக வளர்ந்து வரும் ஆறு பழங்களுக்கான படிப்படியான வழிகாட்டி இங்கே நீங்கள் இன்று நடவு செய்யலாம் மற்றும் பருவத்தின்…
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது கடந்த 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது நீதிமன்றத்தில் 2018-ல் போலீஸார் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள…
இதை விரிவாகக் கூறி, க aura ரங்கா தாஸ் வீடியோவில், “எல்லோரும் இன்னும் வெளியேறிய ஒருவரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், சில முன்னாள் நினைவுகள் அவர்கள் சிக்கித் தவிக்கின்றன, மூடுவதைத் துரத்துகின்றன, அல்லது அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறார்கள். இந்த செயல்பாட்டில், மக்கள் அவர்களை உண்மையாக மதிக்கும் ஒருவரை புறக்கணிக்கிறார்கள்.” உண்மையிலேயே அவ்வாறு. தவறான நபர்கள் மீது உங்கள் நேரத்தையும் சக்தியையும் எத்தனை முறை வீணடித்தீர்கள், பின்னர் வருத்தப்படுவதற்கு? நினைவில் வைத்து கொள்ளுங்கள், உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கிறீர்கள், எதுவாக இருந்தாலும். என்ன அல்லது யார் செய்யவில்லை, அவர்கள் ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
சென்னை: “நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். போலி வேடம் போட்டு உழவர்களை ஏமாற்றும் வித்தை எல்லாம் தமிழ்நாட்டில் என்றும் பலிக்காது. வரும் தேர்தலில் போலி விவசாயி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்,” என்று இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தில் அரசு விவசாயக் கண்காட்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருவதை பட்டியல் போட்டுச் சொன்னார். அதனைப் பொறுக்க முடியாமல் பொறுமிக்கொண்டு அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை ஏமாற்றும் போலி விவசாயி பழனிசாமியின் முகத்திரையை முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் வைத்துக் கிழித்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தலைவாசலில் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,025 கோடி மதிப்பீட்டில், மிகப் பெரிய…
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுள் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். இந்த கோர விபத்தில் அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும் (68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். விஜய் ரூபானி 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்தி வந்தார். தனது வாகன பதிவெண்களில் கூட…
லண்டன்: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 241 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். வியாழக்கிழமை (ஜூன் 12) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் கனவுகள் கருகி உள்ளன. இந்த விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். உலக தலைவர்களில் டொனல்டு ட்ரம்ப், புதின், ஷெபாஸ் ஷெரீப், ஸ்டார்மர்…
சைலேஷ் கோலனுவின் எழுத்து, இயக்கத்தில் உருவான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ஹிட் 3’ (HIT: The Third Case). 2025-ல் வெளியான இப்படத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஹிட்’ இரண்டாவது வழக்கின் நிகழ்வுகளை தொடர்ந்து, கிருஷ்ணதேவுக்கு பதிலாக அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் பணியமர்த்தப்படுகிறார். காட்டுப் பகுதியில் ஒரு நபரை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்கிறார் அர்ஜுன். பின்பு அந்த கொலையை விசாரிக்கும் அதிகாரியாகவும் அவரே செயல்படுகிறார். அர்ஜுனின் செயல்கள் மீது சந்தேகப்படும் ஏஎஸ்பி வர்ஷா அவரை கண்காணிக்கத் தொடங்குகிறார். அர்ஜுன் அதேபோல் செய்ய போகும் அடுத்த கொலையை தடுத்து நிறுத்த முயல்கிறார் வர்ஷா. தான் ஏன் அந்த கொலைகளை செய்கிறார் என வர்ஷாவிடம் அர்ஜுன் விளக்க, கதை ஒரு மாதத்துக்கு முன் நகர்கிறது. அர்ஜுன் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி கொண்டிருந்தபோது, இதேபோன்ற ஒரு கொலையை விசாரித்து, அதன் குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார். அவர்…
