சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு வழக்கு…
Author: admin
சென்னை: “குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் Zero Tolerance விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் பாலிசி,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபி-யின் நேர்காணலைப் பகிர்கிறேன்.என்சிஆர்பி தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அதேநேரம், போக்சோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் Zero Tolerance விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை,…
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். வனப்பகுதி சாலையில் விபத்து அபாயம் நிலவுவதால் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வழியாக நாகாவதி அணை பகுதிக்கு அரசு நகரப் பேருந்து இன்று(ஜூன் 13-ம் தேதி) காலை சென்று கொண்டிருந்தது. அணைக்கு சற்று முன்னதாக சென்றபோது, எதிரில் சின்னம்பள்ளியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி தனியார் கல்லூரி பேருந்து , மாணவியருடன் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இவ்விரு பேருந்துகளும் சாலை வளைவு ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தனியார் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணித்த 14 மாணவியர் காயமடைந்தனர். அதேபோல, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 4 பயணிகள் காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (ராணுவ தளபதிகள்) மிகப்பெரிய வீரர்களை போன்று பேசினர். அவர்கள் இன்று உயிரோடு இல்லை. ஈரான் ராஜ்ஜியம் நிலைத்திருக்க வேண்டும். இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும்…
சென்னை: “நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் ஜூன் 11-ம் தேதி அன்று நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில், திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார். தலைவாசலில் சுமார் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.1,025 கோடி மதிப்பீட்டில், தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை துவக்கி வைத்து, அதில் ஒரு பகுதியினை 22.2.2021 அன்று திறந்து வைத்தேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு அதிக பால்…
கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் தற்காப்பு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு…
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. மேலும், முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. மேலும், முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்படுகின்றன. இந்த மாநாட்டுக்கான அனுமதி கேட்டு மாநாட்டுப் பொறுப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துறையை அணுகினர். லட்சக்கணக்கானோர் கூடும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக 52 நிபந்தனைகளை விதித்து, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது; இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்தோரும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி அட்டைகள் வழங்க வேண்டும். தனித்தனி வாகன நிறுத்துமிட வசதிகளை…
அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து காப்பீட்டு துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஜி நிறுவனங்களில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. விமானத்தின் வயது, தரத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும். இதன்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை கிடைக்கும். மாண்ட்ரியால் மாநாட்டில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இழ்பபீடு வழங்கப்படும். பெரும்பாலும் விமானத்துக்கான காப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டுவிடும். எனினும் விமான பயணிகளுக்கான காப்பீடு தொகை கிடைக்க காலதாமதம் ஏற்படலாம். சில விமான விபத்துக்களில் 3 ஆண்டுகள் வரை காலதாமதம்…
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே மீட்கப்பட்ட யானை குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி பலனிளிக்காத நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் கடந்த மே 26-ம் தேதி தாயைப் பிரிந்த 10 மாதம் உள்ள ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் உடல் மெலிந்து காணப்பட்ட குட்டி யானைக்கு குளுக்கோஸ், லேக்டோஜென், தர்பூசணி, புல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதனிடையே தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ட்ரோன் உதவியுடன் யானை கூட்டத்தை கண்டறிந்து குட்டியை சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. இதற்காக தனிக்குழுக்கள் அமைத்து தாய் யானையை தேடி வந்தனர். அதேபோல குட்டியுடன் உள்ள வேறொரு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது. இதனிடையே கடந்த 18 நாட்களாக குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், எந்த கூட்டமும் குட்டியை சேர்த்து கொள்ளவில்லை. இதுகுறித்து…
ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஈரான் கட்டமைப்புகள் மீது புதிய வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்டோ அணு உலைக்கு அருகே இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஃபோர்டோ தெஹ்ரானுக்கு தெற்கேயும், மத்திய நகரமான…
