Author: admin

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர். அனைத்து விமானங்களிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்று இருக்கும் இந்த சாதனத்தில், விமானத்தின் செயல்பாடு, பயணிகள் இருக்கும் பகுதி, விமானத்தின் வெளிப்புற பகுதி ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவாகும். விமான விபத்து நடந்த இடத்தில், இடிபாடுகளுக்கு இடையே டிவிஆர் சாதனத்தை தேடும் முயற்சியில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேற்று ஈடுபட்டனர். இறுதியில் விமானத்தின் டிவிஆர் மீட்கப்பட்டது. இது தடய அறிவியல் நிபுணர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதில் உள்ள பதிவுகளை ஆராய்ந்தால் விமான விபத்துக்கான காரணங்கள் தெரியவரும் எனத் தெரிகிறது.

Read More

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸின் காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி (241.7) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் குயன்ஸுன் யாவோ (221.7) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

Read More

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ‘ஜுராசிக் பார்க்’. இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. பிறகு ஸ்பீல்பெர்க் இந்தப் படங்களிலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்’ என்ற படத்தை யுனிவர்சல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இதில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி நடித்துள்ளனர். சர்வைவல் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் படம் ஜுலை 4-ல் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

Read More

பேசக்கூடாததைப் பேசி திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தைப் பறிகொடுத்த பொன்முடி, நீதிமன்ற நெருக்கடியால் மந்திரி என்ற மகுடத்தையும் இழந்தார். ஆனாலும், தன்னை மீறி தனது எல்லைக்குள் யாரும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் பொன்முடி, இப்போது இலாகா இல்லாத அமைச்சர் போலவே வலம் வருவதாக ஆளும் கட்சியினரே அறிக்கை வாசிக்கிறார்கள். த​விர்க்க முடி​யாத நிர்​பந்​தத்​தின் காரண​மாக பொன்​முடியை அமைச்​சர் பதவியி​லிருந்து நீக்​கி​னாலும் விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு புதிய அமைச்​சர், பொறுப்பு அமைச்​சர் என யாரை​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நியமிக்​க​வில்​லை. இந்த நிலை​யில், அண்​மை​யில் தேர்​தல் பணி​களை கவனிக்க மண்ட பொறுப்​பாளர்​களை அறி​வித்த போது அமைச்​சர் எ.வ.வேலு விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு மண்​டலப் பொறுப்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார். இதையடுத்​து, பொன்​முடிக்கு போட்​டி​யாக இன்​னொரு அமைச்​சர் மாவட்​டத்​துக்​குள் அதி​காரம் செய்ய வரு​வதைக் கொண்​டாடித் தீர்த்த பொன்​முடி எதிர்ப்​பாளர்​கள், வேலுவை வரவேற்று சுவர் விளம்​பரங்​களை தீட்​டி​னார்​கள். அதி​லும் சிலர் அரசி​யல் செய்​தார்​கள். இதையெல்​லாம் ஜீரணித்​துக் கொள்​ள​முடி​யாத…

Read More

உங்கள் காலை நடைப்பயணத்தின் போது அந்த சங்கடமான உணர்வு அடிப்படை சுகாதார பிரச்சினைகளை சமிக்ஞை செய்யக்கூடும். வேகம், சமநிலை அல்லது கால் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் வைட்டமின் குறைபாடுகள், இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய் அல்லது நரம்பியல் கவலைகளைக் குறிக்கலாம். பலவீனமான தசைகள், உள் காது பிரச்சினைகள், மருந்துகள் மற்றும் கீல்வாதம் ஆகியவை உங்கள் முன்னேற்றத்தை பாதிக்கலாம், எனவே பிரச்சினைகள் தொடர்ந்தால் கவனம் செலுத்துவதும் மருத்துவரை அணுகுவதும் முக்கியம். நீங்கள் உங்கள் ஸ்னீக்கர்களைக் கட்டிக்கொள்கிறீர்கள், உங்கள் வழக்கமான காலை நடைக்கு வெளியே செல்லுங்கள், மற்றும் … ஏதோ சரியாக உணரவில்லை. உங்கள் கால்கள் வழக்கத்தை விட கனமாக இருக்கலாம். உங்கள் வழக்கமான முன்னேற்றத்தைத் தாக்கும் முன்பே நீங்கள் சற்று மூச்சு விடவில்லை. .தெரிந்திருக்கிறதா? நீங்கள் தனியாக இல்லை. பலருக்கு, அந்த அதிகாலை நடை ஆழமான ஒன்று நடந்து கொண்டிருக்கும் முதல் துப்பு. உடல் விசித்திரமான வழிகளில் பேசுகிறது -பெரும்பாலும், அது கத்துவதற்கு…

Read More

அகமதாபாத்: குஜராத் விமான விபத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் நிராளி படேல் (32) எனத் தெரியவந்துள்ளது. கனடாவில் ரொடன்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் நிராளி தனது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன வசித்து வந்தார். மிசிசாகா என்ற இடத்தில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரது பெற்றோரும் சகோதரரும் பிராம்டன் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 5 நாள் பயணமாக இந்தியா வந்த அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கனடா திரும்பும்போது துரதிருஷ்ட விபத்தில் சிக்கினார். நிராளி கடந்த 2016-ல் இந்தியாவில் பல் மருத்துவப் படிப்பை முடித்தார். இதையடுத்து 2019-ல் கனடாவில் பல் மருத்துவருக்கான உரிமம் பெற்றார். கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்ட பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்ஹாம் 45, கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில்…

Read More

பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ​பாமக-​வில் அன்​புமணி​யின் ஆதிக்​கத்​தைப் பிடிக்​காமல் தான் பண்​ருட்டி வேல்​முரு​கன் உள்​ளிட்ட செல்​வாக்​கான மனிதர்​கள் கட்​சியை விட்டு வில​கி​னார்​கள். இதில், வேல்​முரு​கன் தமிழக வாழ்​வுரிமை கட்​சி​யைத் தொடங்கி தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் எம்​எல்​ஏ-​வாக​வும் இருக்​கி​றார். தந்​தைக்​கும் மகனுக்​கும் மோதல் வெடித்த சமயத்​தில், கட்​சியை பலப்​படுத்​து​வதற்​காக வேல்​முரு​கன், காடு​வெட்டி குரு​வின் மகன் உள்​ளிட்​ட​வர்​களை மீண்​டும் பாமக-வுக்​குள் கொண்​டுவர ராம​தாஸ் தரப்​பில் ஒரு மூவ்…

Read More

சித்தூர்: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நோக்கி சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பெங்களூரு புறநகர் ஹொஸக்கோட்டை பகுதியில் ஒரு லாரி மீது இந்தப் பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஹொஸக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும் சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் 6 பேரின் உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Read More

குருகிராம்: அல்டிமேட் கோ கோ சீசன் 3 போட்டிகள் வரும் நவம்பர் 29-ல் தொடங்கும் என கோ கோ இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இம்முறை சர்வதேச வீரர்கள் முதன்முறையாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோ கோ இந்திய கூட்டமைப்பு தலைவர் சுதன்ஷு மிட்டல் கூறும்போது,“ வரவிருக்கும் அல்டிமேட் கோ கோ சீசன் 3-க்கான வீரர்கள் ஏலத்தில் சர்வதேச வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். அல்டிமேட் கோ கோ சீசன் 3 வரும் நவம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது. முதல் முறையாக சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் துணிச்சலான நடவடிக்கையை எடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த நடவடிக்கை போட்டியின் தரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவை கோ கோ-வின் உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது” என்றார். அல்டிமேட் கோ கோ சீசன் 1-ல் ஒடிசா ஜாகர்னட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2023–24–ம் ஆண்டு சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ்…

Read More