திருநெல்வேலி: “பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் சிகரம். ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறேன். வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் 2026 தேர்தலில் தமிழகத்தில் நடத்தப்படும்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட, இன்று அடைந்த சந்தோஷம் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காகவும், தேச ஒற்றுமை பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் வரவேற்று பேசியதற்கும்…
Author: admin
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியான இந்திய ராணுவத்தின், ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி நடவடிக்கைக்கான பெயரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ- தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது கோட்டையான பஹாவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரிட்கே தளம் ஆகியவையும் அழிக்கப்பட்டுள்ளன. பெயரை இறுதி செய்த பிரதமர்: இந்நிலையில், பஹல்காம்…
மும்பை, வான்கடேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற த்ரில் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி தோல்வி கண்டது. குறிப்பாக தீபக் சாஹர் கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் வீசிய நோ-பாலும், அதற்கு முன்பாக 8=வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய 2 நோபால்களும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவினால் தோல்விக்கான காரணமாக சுட்டப்பட்டுள்ளது. பொதுவாக, களத்திலேயே கோபத்தைக் காட்டுபவராக தொடங்கி இப்போது சற்றே நிதானம் காட்டும் முதிர்ச்சி பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு அணியின் ஆட்டத்தை விமர்சிக்கத் தயங்க மாட்டார். ரோஹித் சர்மா போல் வழவழா கொழகொழா சாக்குப் போக்குகளெல்லாம் சொல்ல மாட்டார். தான் வீசிய 8-ஆவது ஓவரில் 2 நோபால்கள் வீசியதால் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் 14 ரன்களைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் முக்கியமான ஒரு மேட்ச் சூழ்நிலையில் தீபக் சாஹர் நோ-பால் ஒன்றை வீசினார்.…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதைத்தொடர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோருக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. முன்பணம்…
ஆலியா பட் இருந்து சல்வார் சூட் யோசனைகள்சிரமமின்றி இன கிளாம் என்று வரும்போது, அலியா பட் போல யாரும் இதைச் செய்யவில்லை. அவர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டாலும் அல்லது ஒரு படத்தை ஊக்குவித்தாலும், மிக அழகான சல்வார் வழக்குகளில் தலைகளை எவ்வாறு திருப்புவது என்பது ஆலியாவுக்குத் தெரியும். நீங்கள் தேசி ஃபேஷன் உத்வேகத்தைத் தேடுகிறீர்களானால், ஆலியாவின் அலமாரிகளில் இருந்து 10 திகைப்பூட்டும் சல்வார் வழக்குகள் இங்கே நீங்கள் நிச்சயமாக கடன் வாங்க விரும்புவீர்கள்.
புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும் என்றும், செவ்வாய், வெள்ளியும் நமது ரேடாரில் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX) புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விண்வெளி ஆராய்ச்சியில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்கள், தீர்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், முன்னோக்கிச் செல்லும் பாதைகள் குறித்து ஊக்குவிக்கும் நோக்கில் இந்த 3 நாள் மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக தொடக்க உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “உலக விண்வெளி ஆய்வு மாநாடு 2025-ல் உங்கள் அனைவருடனும் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. இது ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம். இந்தியாவின் விண்வெளிப்…
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஒரு நாளைக்கு முன்னதாக அதாவது மே 8-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த…
சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளது. மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி தொடங்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது உள்பட பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது. அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 4.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-23ம் நிதியாண்டில் 4.49 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-24ம் நிதியாண்டில் 4.79 லட்சம் மகளிர் சுய…
இடுகையில், இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும்.
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தகவல்கள் செய்தியாளர்களுக்கு இன்று (மே.7) காலை விவரிக்கப்பட்டது. முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார். அப்போது அவர், ”பஹல்காம் தாக்குதல் நடந்த 15 நாட்களுக்குப் பின்னர் திட்டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே வெகு நேர்த்தியாகக் குறிவைத்து, பொறுப்புடன் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள 9 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதத்தின் மீது பதிலடி கொடுக்கும் நமது உரிமையை நாம் நிலை நாட்டியுள்ளோம்.” என்று…
