புதுடெல்லி: “துல்லியமாக திட்டமிடப்பட்டு எந்த ஒரு சிறு தவறும் நடைபெறாத வண்ணம் பஹல்காம் தாக்குதலுக்கு சிறப்பான பதிலடியை நமது ராணுவம் வழங்கியுள்ளது” என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து நாளை (மே 8) காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. காலை 11 மணியளவில் நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலியாக, பிரதமர் மோடி அவரது ஐரோப்பிய பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர் – ‘இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத…
Author: admin
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். புதன்கிழமை (மே 7) ஓய்வு குறித்து ரோஹித் பகிர்ந்தார். அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 38 வயதான ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 67 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 116 இன்னிங்ஸில் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதம், 18 அரை சதம் பதிவு செய்துள்ளார். 91 சிக்ஸர்கள், 473 ஃபோர்களை விளாசி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 40.57. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, ரோஹித் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாக அமைந்தது. “நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசத்துக்காக வெள்ளை சீருடையில்…
விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் தேவரகொண்டா. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. ‘ஷாம் சிங்கா ராய்’ படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படம் இது. இதில் நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘டியர் காம்ரேட்’ படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. தற்போது விஜய் தேவரகொண்டா உடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரலாற்றுப் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது.
ராமேசுவரம்: நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன மேலும், நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகையும் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் கடலோர பகுதி சர்வதேச கடல் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார் தெரிவித்துள்ளார். மசூத் அசார் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், பஹவான்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபஹான் அல்லா ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மவுலான மசூத் அசார் கூறுகையில், “இன்றிரவு என் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்த மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் அப்பாவி குழந்தைகள், எனது மூத்த சகோதரி அவரது மரியாதைக்குரிய கணவர், எனது மருமகன், அவரது மனைவி, எனது அன்பான மருமகள், எனது அருமைச் சகோதரர் ஹுஸைஃபாஹ் மற்றும் அவரது அம்மா. இன்னும் இரண்டு உதவியாளர்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல்லாவின் விருந்தினர்களாகி விட்டனர். வருத்தமும்…
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேர்த்திருவிழாவின் போது எந்தெந்த இடங்களில் குடிநீர், மருத்துவ முகாம், கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை பக்தர்கள் அறிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் ‘க்யூஆர் கோடு’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஆணையர் சித்ரா கூறியது: “மதுரை சித்திரை திருவிழாவில் நாளை (மே 8) திருக்கல்யாணம், வெள்ளிக்கிழமை (மே 9) தேரோட்டம் நடக்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்க மதுரைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாக்களை முன்னிட்டு முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 70 இடங்களிலும் குடிநீர், 80 இடங்களில் நடமாடும் கழிப்பறைகள், 15 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த வசதிகளை எளிதாக பயன்படுத்த எந்தெந்த இடங்களில் இந்த வசதிகள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள பிரத்யேக ‘க்யூஆர் கோடு’ வசதியை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் திருவிழா நடக்கும் 300 இடங்களுக்கும் மேல் இந்த…
‘மண்டாடி’ படம் குறித்த வதந்திக்கு சுஹாஸ் விளக்கமளித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ள படம் ‘மண்டாடி’. ஆர்.எஸ். இன்ஃபோடையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன். விரைவில் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. தமிழில் சூரி நாயகனாகவும், சுஹாஸ் வில்லனாகவும், அதே போல் தெலுங்கில் சுஹாஸ் நாயகனாகவும், சூரி வில்லனாகவும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை பலரும் பகிர்ந்து படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த வதந்தி தொடர்பாக சுஹாஸ் கூறும்போது, “வணக்கம். நான் நடிக்கவிருக்கும் தமிழ்ப் படம் ‘மண்டாடி’ பற்றிய ஒரு சிறிய விளக்கம் இது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் வதந்திகள் போல் அல்லாமல், இதில் வில்லனாக மட்டுமே நடிக்கிறேன். சூரி அண்ணா நாயகனாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் பயனாளிகளுக்கான தினசரி ஊதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் உரிய ஆணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி ஆணையர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல்…
ஊட்டச்சத்து பற்றாக்குறைகள், சோர்வு, பலவீனம் மற்றும் வீக்கத்தால் கூட பாதிக்கப்படுபவர்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் பெரும்பாலும் உயிர் சேமிப்பாளர்கள் என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், ஒருபோதும் தங்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் ஒருபோதும் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக்கூடாது, எல்லா சப்ளிமெண்டுகளும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. நீங்கள் நாள்பட்ட அழற்சியால் அவதிப்பட்டால், இந்த 5 சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும், உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி …
புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய எல்லைக் கிராமங்களில் பீரங்கிகள் மூலம் குண்டு வீசித் தாக்கியுள்ளன. இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறும்போது, “மே 6 – 7 இடைப்பட்ட நாளில், எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் தன்னிச்சையாக பீரங்கி குண்டுகள் வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி வருகின்றன.…
