சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று சந்தித்துப் பேசினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் மூலம் காவிரி ஆற்றில் கலக்கக்கூடிய கிளை நதிகள், அதே இடத்தில் சுத்தப்படுத்தப்படும் திட்டத்துக்கு ரூ.11,900 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக ரூ.990 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கோரிக்கையை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். மேலும், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பழனிசாமி உள்ளார். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை…
Author: admin
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிதான் முதல்வராவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக திருவாரூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ.விநாயகம், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்துகின்றனர். கீழடியைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகின்றன. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல காட்டிக்கொண்டு, திமுகவினர் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். வரும் தேர்தலில் அது எடுபடாது.…
ஆப்டிகல் மாயைகள் நம் மூளையை உடற்பயிற்சி செய்கின்றன, மேலும் இது நமது அவதானிப்பு திறன்களின் சரியான சோதனையாகவும், ஆர்வமுள்ள கண்ணாகவும் இருக்கலாம். ஒரு ஆப்டிகல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், அங்கு கண்கள் உணர்ந்ததை மூளை தவறாகப் புரிந்துகொள்கிறது. கண்களால் அனுப்பப்பட்ட தகவல்கள் மூளை எவ்வாறு செயலாக்குகிறது மற்றும் அது பார்ப்பதை புரிந்துகொள்கிறது என்பதோடு முரண்படும்போது இது நிகழ்கிறது. இந்த மாயைகள் பெரும்பாலும் இல்லாத விஷயங்களைப் பார்ப்பதற்கு அல்லது யதார்த்தத்திலிருந்து வித்தியாசமாக பொருட்களை உணருவதில் நம்மை ஏமாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான படம் நகரும் என்று தோன்றலாம், அல்லது இரண்டு வடிவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை சமமற்றதாகத் தோன்றலாம்.மறைக்கப்பட்ட தவளையை இங்கே கண்டுபிடிக்க முடியுமா?இந்த படத்தில் சில வண்ணமயமான பசுமையாக சிதறடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு அழகான பார்வை! இருப்பினும், இலையுதிர்கால இலைகளின் படுக்கைக்கு இடையில், ஒரு ஸ்னீக்கி தவளை எங்காவது ஒளிந்து, புத்திசாலித்தனமாக உருமறைப்பு மற்றும் வெற்றுப்…
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரியநாராயணன் தேசிய அளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு எழுத 22.76 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், 22.09 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த 2024-ம் ஆண்டில்…
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 18 முதல் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர்,…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2025-2026-ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் 4 மாணவிகள் முன்னிலையில் உள்ளனர். முதல் பிரிவில் (ஸ்ட்ரீம் 1) (ஜேஇஇ மெயின் & 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 50 சதவீத இடங்கள்) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னெலம்பாளையத்தில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த அகேலா மேகவன் சர்மா 99.39 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 12-ம் வகுப்பில் 1000-க்கு 991 மதிப்பெண்களும், ஜேஇஇ மெயின் தேர்வில் 99.69 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். மேலும், தெலங்கானாவின் பேகம்பேட்டையில் உள்ள சைதன்யா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த புர்ரா நிஷிதா 98.30 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தைப் பிடித்தார். இரண்டாம் பிரிவில்(ஸ்ட்ரீம் 2) 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், தெலங்கானாவின் கம்மம் எஸ்.ஆர்.ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த இந்தூரி ரஷ்மிதா 1000-க்கு 996…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, மிதுனம் மாத வழிபாட்டுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ராஜீவரரு ஆகியோர் தலைமை வகித்தனர். மங்கல இசை முழங்க, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர், கோயில் நடையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, 18-ம் படி வழியே இறங்கிச் சென்று ஆழிக்குண்டத்தில் கற்பூர தீபம் ஏற்றினர். இதையடுத்து, பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவில் நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் வழிபாடுகள் நடைபெற உள்ளன. மாத வழிபாடுகளுக்குப் பின்பு வரும் 19-ம் தேதி இரவு நடை சாத்தப்பட உள்ளது. தற்போது சபரிமலையில் கனமழை பெய்து கொண்டிருப்பதால், பக்தர்கள் பலரும் நனைந்தபடியே சந்நிதானம் சென்றனர். பம்பை…
சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஏறத்தாழ 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும் குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ பொது முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வெழுதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நடப்பாண்டு நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரியநாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்த மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இதேபோல, இப்பள்ளி மாணவர் பிரணவ் நீட் தேர்வில் 633 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 191-வது இடத்தையும், மாணவர் அவனிஷ் பிரபாகர் 608 மதிப்பெண்கள்…
அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் – யு மும்பா டிடி அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-4, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை அள்ளினார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட்சோக்ஸ், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியானுடன் (சிங்கப்பூர்) மோதினார். இதில் மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (11-5. 11-9, 7-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில்…
