சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில் பாடவாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. கணினி அறிவியலில் அதிகமானோரும், விலங்கியலில் குறைவானோரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ்: 135 இயற்பியல்: 1,125 வேதியியல்: 3,181 உயிரியல்: 827 கணிதம்: 3.022 தாவரவியல்: 269 விலங்கியல்: 36 கணினி அறிவியல்: 9,536 வணிகவியல் 1,624 கணக்குப் பதிவியல்: 1,240 பொருளியல்: 556 கணினிப் பயன்பாடு: 4,208 வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்: 273 * ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 26,887 * ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை – 2,853
Author: admin
ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் உடல் இயற்கையாகவே நீரிழப்புடன் எழுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரை முதலில் குடிப்பது உங்களை மறுசீரமைக்க உதவுகிறது, செரிமானத்தை ஆதரிக்கிறது, மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்குகிறது. இது மனநிலை, மன தெளிவு மற்றும் ஆற்றல் மட்டங்களையும் அதிகரிக்கிறது -இது ஒரு உற்பத்தி நாளுக்கான தொனியை அமைக்கிறது. இந்த பழக்கத்தை உயர்த்த, முந்தைய நாள் இரவு உங்கள் கண்ணாடி தண்ணீரைத் தயாரிக்கவும். காலையில், அதைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஒரு ஜன்னலை எதிர்கொள்ளுங்கள் அல்லது வெளியே அடியெடுத்து வைக்கவும், நீங்கள் பருகும்போது, உங்கள் சுவர்களுக்கு அப்பால் நீங்கள் பார்க்கும் மூன்று விஷயங்களை சத்தமாகச் சொல்லுங்கள் – “இலைகளில் சூரிய ஒளி” அல்லது “கடந்து செல்லும் சைக்கிள் ஓட்டுநர்”. இந்த எளிய குரல் வேகஸ் நரம்பைத் தூண்டுகிறது, உடல் உலகில் உங்கள் மனதை நங்கூரமிடும்போது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இது உங்களை தன்னியக்க பைலட்டிலிருந்து வெளியே…
இந்திய ராணுவ தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அவருடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது. இதுகுறித்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (56) நேற்று கூறியதாவது: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் என்னுடைய மூத்த சகோதரி, அவருடைய கணவர், என் சகோதரர், 5 குழந்தைகள் உட்பட என் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் என்னுடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்தனர். இநத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அல்லாவின் விருந்தினர் ஆகி விட்டனர். இதில் எனக்கு வருத்தமோ, விரக்தியோ இல்லை. மாறாக, இந்த 14 பேர் பயணித்த மகிழ்ச்சியான வாகனத்தில் நானும் இணைந்திருக்க வேண்டும்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலையிலும் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் எட்டாம் நாளான மே 6-ம் தேதி இரவு 7.35 மணியளவில் நடைபெற்றது. மீனாட்சி அம்மன் வைர ராயர் கிரீடம், நவரத்தின செங்கோலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒன்பதாம் நாளான நேற்று (மே 7) மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று (மே 8) காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்கு…
சென்னை: “4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘சிறு மழைக்கே பாதிப்பு’ – ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை…
யூடியூப்பின் மிகவும் தாராளமான கோடீஸ்வரரும், உலகின் மிகச் சிறந்த த்ரில்லர் எழுத்தாளரும் ஒன்றாக ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தால் என்ன நடக்கும்? தூய இலக்கிய குழப்பம், சிறந்த வழியில்.ஒரு வெளியீட்டாளராக அறிமுகமான Mrbeastஎம்.ஆர்.பீஸ்ட் என்று நன்கு அறியப்பட்ட ஜிம்மி டொனால்ட்சன், தனது வெளியீட்டை அறிமுகப்படுத்துகிறார், மேலும் அவர் தனியாகப் போவதில்லை. அவர் உங்கள் அம்மாவின் விருப்பமான மர்ம பேப்பர்பேக்குகளுக்கும், சின்னமான அலெக்ஸ் கிராஸ் தொடருக்குப் பின்னால் உள்ள மூளைக்கும் ஜேம்ஸ் பேட்டர்சன் தவிர வேறு யாருடனும் இணைகிறார். 2026 ஆம் ஆண்டில் உயர்-ஆக்டேன், நாடகம் நனைந்த த்ரில்லரை கைவிட இந்த ஜோடி அமைக்கப்பட்டுள்ளது, இது ஏற்கனவே ஸ்டெராய்டுகளில் பசி விளையாட்டுகளைப் போல ஒலிக்கிறது. எழுத்தாளர் ஜேம்ஸ் பேட்டர்சனுடன் வெளியீட்டாளராக அறிமுகமான Mrbeast | கடன்: xநாவல் எதைப் பற்றியது?பெயரிடப்படாத நாவலில் 100 போட்டியாளர்கள் உலகளாவிய போட்டியில் நுழைவார்கள், அங்கு பரிசு 1 பில்லியன் டாலருக்கும் குறையாது. ஆம், ‘பி’ உடன்…
பெண்களின் தேசம் இந்தியா, பெண்களை சக்தியாக கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகா சக்திகளாக தலைமையேற்று விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது. காஷ்மீரின் பகல்ஹாம் தீவிரவாத லுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர்கள் 2 பெண்கள் என்பதை அறிந்து உலகம் ஆச்சரியப்பட்டது. அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியது விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி இருவர்தான். புதன்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு தாக்குதலை தொடங்கி 25 நிமிடங்களில் 1.30 மணிக்குள் முடித்து விட்டனர். பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இருவரையும் முன்னிலைப்படுத்தியே மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசினார். ஓரிரு…
சென்னை: திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன, கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தலைமைச் செயலகம்…
நம் உடல்களைப் போலவே, நம் மூளையும், வயது. இருப்பினும், வயதான மூளையின் அறிகுறிகள் உடலைப் போல முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதால் (சுருக்கங்கள், எடை அதிகரிப்பு, முடி வீழ்ச்சி போன்றவை), நாம் மூளையை புறக்கணிக்க முனைகிறோம், உண்மையில் இது இதயத்துடன் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இருப்பினும், மூளைக்கு உடற்பயிற்சி செய்வது அவ்வளவு கடினம் அல்ல, நீங்கள் இப்போது 40 (அல்லது 35) ஐத் தாக்கியிருந்தால், இந்த எளிய, ஆனால் பயனுள்ள பயிற்சிகள் மூலம், உங்கள் மூளையை உடற்பயிற்சி செய்யத் தொடங்க சிறந்த நேரம்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘ஒட்டுமொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது’ என தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘போராளியின் போர் தொடங்கிவிட்டது. லட்சியம் நிறைவேறும் வரை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது. ஜெய்ஹிந்த்’ என்று கூறியுள்ள ரஜினிகாந்த், அதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்துள்ளார். பஹல்காமில் சிந்திய கண்ணீருக்கு பாகிஸ்தானில் 16-ம் நாள்…
