இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய்கள் (சி.வி.டி) உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும், ஆண்டுதோறும் 17.9 மில்லியன் இறப்புகள் அல்லது உலகளாவிய இறப்புகளில் சுமார் 32% ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்த இறப்புகளில் நான்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கின்றன, மூன்றில் ஒரு பங்கு 70 வயதிற்குட்பட்டவர்களில் முன்கூட்டியே நிகழ்கிறது.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) படி, அமெரிக்காவில் அமெரிக்காவில் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு 40 விநாடிகளிலும், அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது, 805,000 பேர் ஆண்டுதோறும் மாரடைப்பை அனுபவித்து வருகிறார்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்கள் உண்மையிலேயே தோற்றமளித்தாலும், இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அங்கீகரிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் உடனடி மருத்துவ பதில் உயிர்களைக் காப்பாற்றும். சில மாரடைப்பு திடீரெனவும் தீவிரமாகவும் வரும்போது, தனிநபர்கள்…
Author: admin
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பலர் கொல்லப்பட்டனர். அங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கலவரக்காரர்கள் வன்முறைக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து தரப்பினரும் கொள்ளையடிக்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இதன்படி, மைதேயி சமுதாய அமைப்பைச் (ஆரம்பை டெங்கோல்) சேர்ந்தவர்கள் 307 ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால் குகி சமுதாய அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. இதனிடையே, ஆரம்பை டெங்கோல் அமைப்பின் தலைவர் அசிம் கனன் உள்ளிட்ட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 8-ம்…
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும், பல்வேறு ஊர்களுக்கு அவர்களது உடலை அனுப்புவதற்காகவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் வதோதரா நகரில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்வதற்காகவும், சொந்த ஊருக்கு அனுப்பவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணி வதோதரா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை வரை 25 பேரின் உடல்கள், சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.…
பொள்ளாச்சி அருகிலுள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவரான வேலு (சண்முக பாண்டியன்), அப்பா (கஸ்தூரி ராஜா), சகோதரியுடன் வசித்து வருகிறார். கூடவே 25 வருடமாக வளர்ந்து வருகிறது மணியன் என்ற யானையும். அதை தங்கள் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள் வேலு குடும்பத்தினர். ஒரு கட்டத்தில் யானையை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட, அதைக் கண்டுபிடிக்க செல்கிறார்கள், வேலுவும் அவர் நண்பர்களும். அந்த யானை கடத்தப்பட்டது ஏன்? அதைக் கண்டுபிடிக்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, யானையை மீட்டார்களா, இல்லையா? என்பது கதை. நாயகனுக்கும் யானைக்குமான பிணைப்பை கொண்டு நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் அப்படியான ஓர் படம்தான். இரண்டு வித கோணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர், அன்பு. முதல் பாகம், குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக வளரும் யானைக்கும் குடும்பத்துக்கும் இடையே உள்ள பிணைப்பைப் பேசுகிறது. குடும்பத்தில் எல்லோரும் யானைக்காக உருகுகிறார்கள். ஆனால், அது சுவாரஸியமாகப் படமாக்கப்படாதது குறை.…
YSES-1 அமைப்பில் தடிமனான ஸ்லாப் மேகங்களை வானியலாளர்கள் கவனித்து, கிரகத்தின் வானத்தை இருட்டடிக்கிறார்கள். இந்த மேகங்கள் முதன்மையாக கனிம தூசி, அநேகமாக இரும்பைக் கொண்டிருக்கின்றன. மேகங்கள் உடைக்கும்போது, இரும்பு மழை பெய்யக்கூடும். அமைப்பு மற்றும் வளிமண்டலத்தைப் புரிந்து கொள்ள வல்லுநர்கள் இந்த விசித்திரமான நிகழ்வைப் படித்து வருகின்றனர். டிஸ்கவரி தொலைதூர உலகங்களில் சிக்கலான வானிலை வடிவங்களில் வெளிச்சம் போடுகிறது, இது உருவாக்கம் மற்றும் நடத்தை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது எக்ஸோப்ளானெட்டரி வளிமண்டலங்கள். மேலும் ஆய்வு கிரகத்தின் சாத்தியமான வாழ்விடம் மற்றும் அதன் காலநிலை மற்றும் மேற்பரப்பு நிலைமைகளை வடிவமைப்பதில் கனிம மேகங்களின் பங்கு பற்றி மேலும் வெளிப்படுத்தக்கூடும். இளம் கிரகம் YSES-1 மேகங்களால் மூடப்பட்டிருக்கும்தி கார்டியனின் கூற்றுப்படி, ஸ்டார் ஒய்.எஸ்.இ.எஸ் -1 என்பது அண்ட தரநிலைகளால் ஒரு புதியவர், வெறும் 1 மில்லியன் ஆண்டுகள் பழமையானது, 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியனுடன் ஒப்பிடும்போது. இந்த நட்சத்திரம் இரண்டு எரிவாயு ராட்சதர்களால்…
ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த திசையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். சமீபத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியபோதும் இந்தியாவின் கவலைகளை நேரடியாகத் தெரிவித்தார். மேலும் சர்வதேச சமூகத்தின் கவலைகளையும் எடுத்துரைத்த ஜெய்சங்கர், பதற்றம் மேலும் அதிகரிப்பதை தவிர்த்து ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்து என்சிஓ…
தனது தாய் எப்போது வருவார் என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த விமானப் பணிப்பெண்ணின் மகள் காத்திருக்கும் செய்தி பலரது கண்ணில் கண்ணீரை வரவழைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர், பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் விமானத்தில் பணியாற்றிய பணிப்பெண்ணான அபர்ணா மகாதிக்கும் உயிரிழந்து விட்டார். அபர்ணா மகாதிக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஆதித்தி சுனில் தாத்கரேவின் நெருங்கிய உறவினர் ஆவார். ஆனால் தாயார் இறந்துவிட்டார் என்பது கூடத் தெரியாமல் அவரது மகள் காத்திருக்கிறார். தொடர்ந்து…
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்.4-ம் தேதி வெளியிட்டது. சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் காவல் துறையில் இரண்டாம், முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். காவல் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவது வழக்கம். பொதுப்பிரிவு மற்றும் பணியில் உள்ள போலீஸாருக்கு தனித்தனி தேர்வு மற்றும் மதிப்பெண் வழங்கப்படும். அதில், தேர்வானவர்களுக்கு எஸ்ஐ பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை (சீனியாரிட்டி) வழங்கப்படும். ஆனால், 20 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள் அனைவரும் தேர்வின்போது பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதலில் வைக்கப்பட்டு அதன் பின்னரே பொதுப்பட்டியலில் உள்ளவர்கள்…
எம்.டெக். படிப்பதற்காக லண்டனுக்கு புறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் மகள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரைச் சேர்ந்த சுரேஷ் கதிக் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார். இவருடைய மகள் பாயல், பி.டெக். படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். இதன்மூலம் கிடைத்த வருமானத்தை குடும்பத்தினருக்கு வழங்கி வந்துள்ளார். இதையடுத்து லண்டனில் மேல் படிப்பு படிக்க விரும்பினார். இதன்படி, கடந்த 12-ம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பாயல் புறப்பட்டார். முன்னதாக அவருடைய தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் பாயலை வழியனுப்பி வைத்தனர். ஆனால் அந்த விமானம் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களில் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த பாயல் உள்ளிட்ட 241 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து சுரேஷ் கதிக் கூறும்போது, “என் மகள் பாயல் லண்டனில் எம்.டெக். படிக்க விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கல்விக் கடன் பெற்று…
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி அம்பாள்: வள்ளி-தெய்வானை தல வரலாறு : தவம் புரிந்து கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் முன் தோன்றிய சிவபெருமான், பாலதிரிபுரசுந்தரியை எண்ணி தவம் புரிந்தால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை கூறுவாள் என்று அருளினார். விஸ்வாமித்திரர் தேவியை நோக்கி தவம் புரிந்தார். அவர் முன்பு தோன்றிய தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நெற்றியில், விஸ்வாமித்திரர் திலகமிட்டார். குங்குமத்தை சரிபார்க்க குளத்து நீரில் தன் பிம்பத்தை தேவி பார்த்தபோது, குங்குமம் நீரில் விழுந்தன அடுத்த நொடி அந்த குளத்தில் இருந்து தெய்வீக ஒளி தோன்றியது. மேலும் 3 முகங்கள் தோன்றின. அனைத்தையும் இணைத்து, 4 முகங்களுடன் கூடிய திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, சதுர்முக முருகனை அணைத்துக் கொண்டாள் தேவி. மேலும் இந்த முருகனே வேண்டும் வரம் அருள்வான் என்று விஸ்வாமித்திரரிடம் கூறினாள் தேவி. ஆடு மேய்க்கும் சிறுவன், முருகன் கோயிலுக்கு வழி காட்டினான், அங்கு விஸ்வாமித்திரருக்கு, பாலதிரிபுர சுந்தரியும்சதுர்முக முருகனும்…
