புதுடெல்லி: நாட்டின் சுயமரியாதையையும் மன உறுதியையும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மேம்படுத்தி இருப்பதாக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹல்காமில் நிராயுதபாணியான சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தீர்க்கமான நடவடிக்கைக்காக மத்திய அரசுத் தலைமையையும் நமது ஆயுதப் படைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்து சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் முழு நாட்டுக்கும் நீதி வழங்குவதற்கான இந்த நடவடிக்கை முழு நாட்டிற்கும் சுயமரியாதையையும் மன உறுதியையும் மேம்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், அவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகள் மீது எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பதை நாங்கள்…
Author: admin
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘குபேரா’ மற்றும் ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘குபேரா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் இறுதியாக சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த இரண்டையும் முடித்துவிட்டு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ். இப்படத்தை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இதன் கதை மற்றும் திரைக்கதை அனைத்துமே இறுதி செய்யப்பட்டுவிட்டன. தற்போது சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரங்கில் சுமார் 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதில் தனுஷுக்கு நாயகியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இதற்கு ‘அறுவடை’ எனத் தலைப்பிட்டுள்ளார்கள். இரண்டு படங்களையும் தனுஷ்…
திருச்சி: “நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்” என்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் இன்று (மே 9) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நேற்று பிளஸ் 2 முடிவுகள் வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்வு பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது. இடைநிற்றலே இருக்க கூடாது என்று பள்ளிக்கூடம் போகாமல் இருக்கின்ற…
சசெக்ஸின் டச்சஸ், மேகன் மார்க்லே, மற்றொரு சர்ச்சையில் சிக்கியதாகத் தெரிகிறது. ‘லவ் வித் லவ், மேகன்’ என்ற புதிய நிகழ்ச்சியைப் பார்த்த மேகனின் ரசிகர்களில் ஒருவர் அவளால் ஈர்க்கப்பட்டார், அவர் டச்சஸின் வீட்டில் தயாரிக்கப்பட்ட குளியல் உப்பு செய்முறையை முயற்சித்தார். ஆனால் அவளுக்கு அடுத்ததாக என்ன நடந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மேரிலாந்தைச் சேர்ந்த ராபின் பேட்ரிக் என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் ரசிகர், மேகனின் குளியல் உப்பைப் பயன்படுத்திய பின்னர் தனக்கு “பேரழிவு தீக்காயங்கள்” கிடைத்ததாகக் கூறுகிறார், இப்போது டச்சஸுக்கு எதிராக 10 மில்லியன் டாலர் வழக்குத் தாக்கல் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.ராபின் பேட்ரிக் ராடரோன்லைன்.காமிடம் கூறினார், “ஆரம்பத்தில், நான் அச om கரியமின்றி ஒரு லேசான கூச்ச உணர்வை அனுபவித்தேன். இருப்பினும், நீர் மட்டம் என் கால்களை மூடிமறைக்க உயர்ந்து என் பிட்டத்தை அடைந்ததால், அந்த பகுதிகளில் எரியும் மற்றும் குறிப்பிடத்தக்க அச om கரியத்தை உணர ஆரம்பித்தேன்.…
புதுடெல்லி: எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை என தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் கடந்த 7-ம் தேதி முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகிகளின் சிறப்பு ஆன்லைன் கூட்டத்தில், பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு தேவையான நடவடிக்கையையும் இது ஆதரிக்கிறது. இந்த நெருக்கடியான காலங்களில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கம் இந்த…
மக்களிடம் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களின் விளைவாக அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அவற்றை சீரமைத்துக் கொள்ள, எந்த உணவை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எந்தந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு, உடலுக்கு ஏற்ற உணவினை அறிந்துக் கொள்ள உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியை மக்கள் நாடுகின்றனர். கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கும் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்யவும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் அவசியமாகிறது என்பதால் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் துறை படிப்புகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரித்து உள்ளது. எப்படி சாப்பிட வேண்டும், எதை சாப்பிட வேண்டும், எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதுடன் எத்தகைய உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது ஆலோசனைகளை வழங்குபவர் ஊட்டச்சத்து மற்றும் திட்ட உணவியல் நிபுணர்கள். அவர்களை…
போப்பின் அலங்காரத்தையும் அதன் குறியீட்டையும் டிகோட் செய்வோம்.
பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனாட சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை கண்ட பிஎஸ்எப் வீரர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தனர். அவரது உடல், பஞ்சாப் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னை: “மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல,” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். பொதுநல மனுவை இன்று (மே 9) விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, ஜூன் 5-ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர், மே 6ம் தேதி அன்று 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என அறிவித்தார். தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள…
