சென்னை: போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 514 ஊர்க்காவல் படையினர் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை காவல்துறையில் இருந்து ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்கள் பிரிக்கப்பட்ட போது, 750 ஊர்க்காவல் படையினர் 2 காவல் ஆணையரகத்துக்கும் கொடுக்கப்பட்டது. அதனால் 3080-ஆக இருந்த ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில், ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து, 500 புதிய பணியிடங்கள் உருவாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஊர்க்காவல் படையினருக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2…
Author: admin
என்ன குழந்தைகள் காட்டிக் கொடுக்கப்படுகிறார்கள்?குழந்தைகள் எப்போதுமே பெரியவர்கள் செய்யும் விதத்தில் புண்படுத்தாது, ஆனால் அவர்கள் ஆழமாக உணர்கிறார்கள். இந்த அன்றாட செயல்கள் பாதிப்பில்லாததாகவோ அல்லது வழக்கமாகவோ தோன்றலாம், ஆனால் ஒரு குழந்தைக்கு, அவை அமைதியாக துரோகத்தை சமிக்ஞை செய்யலாம். தற்செயலாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் சில நடவடிக்கைகள் இங்கே.
வங்க மொழி எழுத்தாளர் நிருபமா தேவியின் ‘அன்னபூர்ணிகா மந்திர்’ என்ற நாவல் பல்வேறு மொழிகளில் அப்போது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நாவலை மலையாளத்தில் நாடகமாக உருவாக்கினார்கள். அதைத் தமிழில், ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் டி.கே.சி சகோதரர்கள் நாடகமாக மாற்றி நடத்தி வந்தனர். இந்த நாடகத்துக்கு அண்ணா, ‘குடியரசு’ இதழில் அற்புதமான விமர்சனம் ஒன்றை எழுதினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை ‘குமஸ்தாவின் பெண்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக்கினர். நாடகத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஜெமினி பிலிம்ஸ் எஸ்.எஸ்.வாசன், அதில் நாயகியாக நடித்த நடிகையையே, சினிமாவிலும் நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ‘நடிகை’ அல்ல, நடிகர்தான்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம். அதில் பெண் வேடமிட்டு நடித்தவர் பின்னர் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் புகழடைந்த ஏ.பி.நாகராஜன். படத்தை பி.என்.ராவ் மற்றும் கே.வி. ஸ்ரீனிவாசன் இயக்கினர். ரஸ்தோம் எம்.இரானிஒளிப்பதிவு செய்தார். (கிருஷ்ணன்) பஞ்சு இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.மணி என்கிற பணக்காரரிடம்…
சென்னை: வட சென்னையில் எரி உலை அமைக்கும் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, ஹைதராபாத்தில் எரிஉலை திட்டத்தை நேரில் ஆய்வு செய்த குழு வலியுறுத்தியுள்ளது. வட சென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து, ஹைதராபாத்தில் ஜவஹர் நகர் பகுதியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்ட பகுதிகளைச் சுற்றி கடந்த மே 7-ம் தேதி ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை இயங்கும் ஜவகர் நகரைச் சுற்றி கார்மிகா நகர், ஒய்எஸ்ஆர் நகர், காபிலா பேட்டை, சாந்தி நகர் உள்ளிட்ட குறைந்த வருவாய் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போருக்கு, மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை ஏற்படுத்தும் மாசு காரணமாக சுவாசப்…
யு.எஸ்.ஏ.ஐ.டி பணிநிறுத்தம் திட்டங்கள் குறித்து பில் கேட்ஸ் எலோன் மஸ்க் வெடிக்கிறார் உலகின் பணக்கார மனிதர் எலோன் மஸ்க் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்ததிலிருந்து, அவர் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். மிக சமீபத்தில், தொழில்நுட்ப கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும் மஸ்க் உலகின் சில ஏழ்மையான குழந்தைகளை கொலை செய்வதில் ஈடுபட்டதாக விமர்சித்தனர்.ஆனால் ஏன்?உலகில் வெளிநாட்டு உதவிகளை விநியோகிப்பதற்கு பொறுப்பான அமெரிக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சிக்கு எலோன் மஸ்கின் சமீபத்திய வெட்டுக்களின் சூழலில் பேசிய கேட்ஸ், அவ்வாறு செய்வதன் மூலம் மஸ்க் தட்டம்மை, எச்.ஐ.வி மற்றும் போலியோ போன்ற பல கொடிய நோய்களின் மீள் எழுச்சியை அபாயப்படுத்துகிறார் என்று கூறினார். “உலகின் ஏழ்மையான குழந்தைகளை கொன்ற உலகின் பணக்காரனின் படம் ஒரு அழகான ஒன்றல்ல … இப்போது எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை அவர் உள்ளே சென்று சந்திப்பதை நான் விரும்புகிறேன், ஏனெனில் அவர் அந்த பணத்தை குறைத்தார்”…
Last Updated : 10 May, 2025 06:37 AM Published : 10 May 2025 06:37 AM Last Updated : 10 May 2025 06:37 AM பிரபல நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத், இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அவர் இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். அனுராக் ருத்ரா இயக்கும் ‘பிளஸ்டு பி தி எவில்’ என்ற ஹாலிவுட் ஹாரர் படத்தில் அவர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதில் ‘டீன் வுல்ஃப்’ உட்பட சில படங்களில் நடித்த ‘டெய்லர் போஸே’, பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ரோஸ் ஸ்டாலோன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லயன் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் இந்திய நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு நியூயார்க்கில் தொடங்க இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை…
சென்னை: வரும் 11,12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் 11, 12 தேதிகளில் முகூர்த்தநாள் மற்றும் பவுர்ணமி ஆகியன வருவதால் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடுப்பு பெற்றிருந்தவர்கள் கூட மண்டல மேலாளர் அளவில் விடுப்பு எடுக்க மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும், பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் பணிக்கு வந்து ஒத்துழைப்பு வழங்கும்படி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ‘மரகதமலை’ என்ற படம் உருவாகியுள்ளது. ஃபேன்டஸி டிராமா கதையை கொண்ட இந்தப் படத்தை எல்.ஜி.மூவிஸ் சார்பில் எஸ்.லதா தயாரித்து, எழுதி, இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப், நாயகியாக தீப்ஷிஹா நடிக்கின்றனர். மாஸ்டர் சஷாந்த், அரிமா, மஹித்ரா, கலைக்கோ, தம்பி ராமையா, சம்பத் ராம் என பலர் நடித்துள்ளனர். எல்.வி. முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். “இதன் கதையை 18-ம் நூற்றாண்டில் நடந்ததை போல உருவாக்கி இருக்கிறோம். புலி, யானை, டிராகன், கொரில்லா,பாம்பு, குதிரை ஆகியவற்றைக் கொண்ட ஃபேன்டஸி டிராமாவாக படம் இருக்கும். இப்போது விஎப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த மாதம் வெளிவர இருக்கிறது. இதன் படப்பிடிப்பை, தடா காட்டுப்பகுதியில் பிரம்மாண்டமாக செட் அமைத்து நடத்தினோம்” என்றார் இயக்குநர் எஸ்.லதா. இதன் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: முன்னாள் சுற்றுச்சுழல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பாண்டியனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்பேரில், சென்னை, வேலூரில், தமிழ்நாடு அரசு துறைகளுடன் தொடர்புடைய கன்சல்டன்சி நிறுவனங்கள், ஆலோசகர்களுக்கு (கன்சல்டன்ட்) சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்தவகையில், முக்கிய ஆலோசகர்களான (கன்சல்டன்ட்) பிரபாகர் சிகாமணி, ஏ.கே.நாதன், நவீன்குமார், சந்தோஷ்குமார், வினோத்குமார் ஆகியோர் சட்டவிரோதமாக அனுமதியை பெற்றுக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோதனையில் இவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4.73 கோடி ரொக்கம், டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குற்றச்செயல்களின் மூலம் பெறப்பட்ட சொத்துகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜம்மு-காஷ்மீர், பஹல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது. உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களை பாதுகாக்கும் முகமாக அவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார். அதன்படி, உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 (வாட்ஸ் அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த 52 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக தமிழகத்துக்கு…
