Author: admin

கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையை, கேரள அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே கேரள நீர்வளத்துறையினர் கீழ் மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். அணையில் முழு கொள்ளளவுக்கும் நீர் தேக்கப்படாத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 44.61 அடி வரையாவது நீரை தேக்க வேண்டும். இல்லாவிட்டால் கோடையில் மாநகருக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணைப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை நெருங்கும் சமயத்தில், அணையிலிருந்து கேரள நீர்வளத்துறையினரால் இன்று தண்ணீர் திறந்து விடப் பட்டது. நீர்…

Read More

தேனி: சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தேனியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் அரசுத் துறைகள் சார்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலர் ஆர்.வி.ஷஜீவனா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 16 துறைகள் சார்பில் 851 பயனாளிகளுக்கு ரூ.13.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதயநிதி வழங்கினார். பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் 3 புதிய வழித்தடங்களில்…

Read More

உண்மையான நண்பர்கள் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பகுதி மற்றும் மாறுவேடத்தில் உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம். அவர்கள் மகிழ்ச்சியின் தருணங்களில் மட்டுமல்ல, சவால்களின் போதும், ஆதரவு, நேர்மை மற்றும் நிபந்தனையற்ற கவனிப்பை வழங்குகிறார்கள். இருப்பினும், எங்கள் நண்பராக நடிக்கும் அனைவரும் உண்மையிலேயே அவ்வாறு இல்லை. சிலர் எங்களுக்கு இனிமையாக பேசலாம், ஆனால் நாசவேலை அல்லது பேட்மவுத் எங்களை எங்கள் முதுகுக்குப் பின்னால். எனவே, யாராவது ஒரு உண்மையான அல்லது போலி நண்பராக இருந்தால் ஒருவர் எப்படி அறிவார்? பிரபல ஆன்மீகத் தலைவர் க aura ரங்கா தாஸ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியபடி, உண்மையான நண்பர்களின் மூன்று தெளிவான அறிகுறிகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

Read More

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக…

Read More

மதுரை: பொதுப்பணித் துறை பாலம் கட்டுவதால் ஏற்பட்ட தடையால் மதுரை சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குளம்போலத் தேங்கியது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் சமுதாயக் கூடத்தில் தஞ்சம் அடைந்தனர். மதுரை சிந்தாமணி கிழக்கு தெரு, நடுத்தெரு, புதுத்தெரு, கண்ணன் காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் கிருதுமால் நதி கால்வாயை கடந்து செல்ல ரூ.20 லட்சத்தில் பொதுப் பணித்துறை சார்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கால்வாயில் செல்லும் கழிவுநீரை வெளியேற்ற மாற்றுப் பாதை அமைத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கிருதுமால் நதி கால்வாய் மற்றும் கழிவுநீர் செல்லும் மற்றொரு கால்வாயும் அடைபட்டதால் கழிவுநீரானது அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தினுள் தேங்கியது. இப்பள்ளியில் 80 மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனிடையே, இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி…

Read More

சென்னை: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், 2022 ஆம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுரேந்தர் 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள், சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிபதி சுரேந்தர் பணியாற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி சுரேந்தரை வரவேற்றுப் பேசினர். ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தர், அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக…

Read More

ஆரோக்கியமான கல்லீரல் இரத்தத்திலிருந்து நச்சுகளை மிக வேகமாக செயலாக்குகிறது மற்றும் நீக்குகிறது என்றும் உடலை சுத்தமாகவும் சீரானதாகவும் வைத்திருக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது புரதங்கள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துகிறது, இது உங்களுக்கு அதிக ஆற்றலையும் சிறந்த எடை கட்டுப்பாட்டையும் தருகிறது. மேலும் குளுக்கோஸை தேவைக்கேற்ப சேமித்து விடுவிப்பதன் மூலம் நிலையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க கல்லீரல் உதவுகிறது. எனவே, கல்லீரலை கவனித்துக்கொள்வது மிக முக்கியம், மேலும் அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் ஈடுபடுவதன் மூலம். இன்ஸ்டாகிராமில் அண்மையில் நடந்த ஒரு இடுகையில், செரிமானம், கல்லீரல், கணையம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் நிபுணரான டாக்டர் ஜோசப் சால்ஹாப் 7 பானங்களைப் பற்றி பேசினார், இது இயற்கையாகவே அனைத்து வகையான உடைகள் மற்றும் கண்ணீரிலிருந்து கல்லீரலை பாதுகாக்க முடியும். விவரங்களைப் படிக்க கீழே உருட்டவும்.

Read More

தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்றால் என்ன? – அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின்…

Read More

Last Updated : 16 Jun, 2025 07:39 PM Published : 16 Jun 2025 07:39 PM Last Updated : 16 Jun 2025 07:39 PM ‘தேவரா 2’ தொடங்கப்படாது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. அதே வேளையில் இப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை, 2-ம் பாகம் இருக்கிறது. தற்போது இப்படம் தொடங்கப்படாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் பிரசாந்த் நீல் படத்தை முடித்தவுடன், நெல்சன் இயக்கும் படம் மற்றும் த்ரிவிக்ரம் இயக்கும் படம் என்று முடிவு செய்திருக்கிறார். இதனால் ‘தேவரா 2’ படம் கைவிடப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனிடையே ‘தேவரா’ படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவாவுக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு ஜூனியர் என்.டி.ஆர்…

Read More

சென்னை: பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, கடந்த 11.06.2025 அன்று இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் துப்பாக்கியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூராய்வின் மூலம் அம்பலமாகியுள்ளது. அஇஅதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை, பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கியின் பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இதே ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பாபு துப்பாக்கி வைத்திருந்த போதே, இந்த அரசை நான் எச்சரித்தேன். ஆனால், துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க இந்த அரசு என்ன…

Read More