Author: admin

‘தங்கல்’ படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்தவர் இந்தி நடிகை பாத்திமா சனா ஷேக். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ள அவர், சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், திரைத்துறையில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து கூறியிருந்தார். தென்னிந்திய படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, “சில ஹைதராபாத் தயாரிப்பாளர்கள், படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, ‘அதை செய்வீர்களா, இதை செய்வீர்களா?’ என்று கேட்டார்கள். ஆனால், எதையும் நேரடியாகக் கேட்காமல் தங்கள் நோக்கங்களை வெளிப் படுத்தினார்கள். அதனால் அங்கு நடிப்பதைத் தவிர்த்துவிட்டேன்” என்று கூறியிருந்தார். இது சர்ச்சையானது. இந்நிலையில் இதற்கு பாத்திமா சனா ஷேக் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் கூறியது தேவையில்லாமல் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற விஷயங்களைக் கடந்துதான் செல்கிறார். ஒரு பெண் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவர் கேலி செய்யலாம். இது எல்லா இடங்களிலும் எல்லாத் துறையிலும் உள்ளது. என்…

Read More

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் சேர்ந்து பேசி முடிவெடுத்தால் மட்டுமே கட்சி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ‘நீயா, நானா’ என்று பார்த்து விடுவோம் என, மகன் அன்புமணிக்கு பகிரங்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் அன்புமணியின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வகையில், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை நீக்கியுள்ளார். இந்நிலையில், தன்னால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுடன், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் 2-வது நாளாக நேற்றும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உட்பட 16 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்…

Read More

ஈஷான் சட்டோபாத்யாய்கணினி அறிவியலின் இணை பேராசிரியர் கார்னெல் பல்கலைக்கழகம்2025 ஐ வென்றுள்ளது கோடெல் பரிசுமிக உயர்ந்த க ors ரவங்களில் ஒன்று தத்துவார்த்த கணினி அறிவியல். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிய ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்காக இந்த மதிப்புமிக்க விருதை அவர் பெற்றார். சீரற்ற இரு ஆதாரங்களும் பலவீனமாக இருக்கும்போது கூட செயல்படும் இரண்டு மூல பிரித்தெடுத்தலை உருவாக்குவது அவரது முன்னேற்றத்தை உள்ளடக்கியது. இந்த கண்டுபிடிப்பு அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, கம்ப்யூட்டிங் மற்றும் இந்திய கல்வியாளர்களின் பரந்த உலகிலும் ஒரு மைல்கல்லாகும். அவரது பி.எச்.டி. வழிகாட்டி புகழ்பெற்ற கணினி விஞ்ஞானி டேவிட் ஜுக்கர்மேன் ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகம்.ஈஷான் சட்டோபாத்யாய்: சிறப்பின் சுயவிவரம்ஈஷான் இந்தியாவில் வளர்ந்து தனது இளங்கலை படிப்பை முடித்தார் ஐ.ஐ.டி கான்பூர்நாட்டின் சிறந்த பொறியியல் நிறுவனங்களில் ஒன்று. அவர் தனது பி.எச்.டி. டேவிட் ஜுக்கர்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில். அதன்பிறகு, யு.சி. பெர்க்லி, மைக்ரோசாஃப்ட்…

Read More

சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 14-ம் தேதி முதல் காணாமல்போன மாடல் அழகி ஷீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா நாட்டுப்புற இசைத் துறையுடன் தொடர்புடைய மாடல் அழகி ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி (23). இவரை கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது சகோதரி நேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது நேகா, “14-ம் தேதி இரவு ஷீத்தல் என்னை தொலைபேசியில் அழைத்து, பானிபட்டை சேர்ந்த சுனில் என்ற முன்னாள் நண்பர் படப்பிடிப்பு தளத்தில் வந்து தன்னை தாக்கியதாக கூறினாள்” என்றார். இந்நிலையில் சோனிபட் நகரின் கார்கவுடா பகுதி கால்வாய் ஒன்றில் ஷீத்தல் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினோம். இதில் காணாமல்போன ஷீத்தலின் உடல் அது…

Read More

மேற்கு இந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி வடக்கு அயர்லாந்தில் உள்ள பிரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான எவின் லீவிஸ் 44 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், கீசி கார்ட்டி 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 48 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் மேத்யூ ஹம்ப்ரேஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 257 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

Read More

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த 13-ம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நான்காவது நாளாக நேற்றும் போர் நீடித்தது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத் துறை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் இரு அலுவலகங்களும் தரைமட்டமாகின.…

Read More

மலையாள நடிகரான உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரித்து, நடித்த மலையாளப் படமான ‘மார்கோ’ கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஹனீப் அதேனி இயக்கிய இந்தப் படம் ரூ.120 கோடியை தாண்டி வசூலித்தது. மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இருந்தும் ‘மார்கோ’ படத்தின் 2-வது பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க இருப்பதாக உன்னி முகுந்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘மார்கோ 2’ அப்டேட் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “மார்கோ’ படங்களைத் தொடரும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். அந்தப் படத்தைச் சுற்றி ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் இருக்கின்றன. அதனால் இந்தப் படத்தை விட சிறந்த படமொன்றைத் தர முயற்சிக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Read More

திருச்சி: ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார். ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார். இதுகுறித்து மாணவி ராகிணி கூறியதாவது: எனது தாய் சிறுவயதிலேயே…

Read More

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில்…

Read More

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். இதில் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நிசார், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Read More