Author: admin

புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் – ஐஸ்வர்யா முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘ஹும்’. கிருஷ்ணவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குநர் கிருஷ்ணவேல் ேபசும்போது, “நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. கரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக்கி திரைப்படம் தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்துக்குப் பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்துக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பெண்கள்…

Read More

முன்பு பாஜக-வில் இருந்த நடிகை கவுதமி 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால் அப்போது, அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையத்தை தரவேண்டி இருந்ததால் கடைசி நேரத்தில் கவுதமிக்கு கைவிரித்துவிட்டது பாஜக தலைமை. கவுதமி பாஜக-வை விட்டு விலக இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் இப்போது அதிமுக-வுக்கு வந்துவிட்ட கவுதமி, மீண்டும் ராஜபாளையத்துக்காக காய்நகர்த்த ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக அறிவித்தது. அதற்காக தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து களப்பணியில் கவனம் செலுத்தினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடியும் முன்பாகவே, ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கவுதமியை ராஜபாளையம் தொகுதி வேட்பாளர்…

Read More

பண்டைய மரபுகளின் எளிமையில் அமைதியான கவர்ச்சி உள்ளது. பல வீடுகளில், துளசி ஆலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு களிமண் பானையில் அமர்ந்திருக்கிறது, அதன் ஆன்மீக இருப்புக்காக மட்டுமல்ல, அது அமைதியாகவும் பலத்தையும் தருகிறது என்ற நம்பிக்கைக்காக. சமீபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வரும் ஒரு கூற்று என்னவென்றால், மூன்று துளசி இலைகளை சாப்பிடுவது கார்டிசோல் அளவைக் குறைக்கும் 40 நிமிடங்களில்.இது கிட்டத்தட்ட மந்திரமாகத் தெரிகிறது, ஆனால் அது உண்மையில் உண்மையா? தலைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.கார்டிசோல் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?கார்டிசோல் பெரும்பாலும் “மன அழுத்த ஹார்மோன்” என்று அழைக்கப்படுகிறது. இது உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான சவால்களுக்கு பதிலளிக்க உடல் உதவுகிறது. ஆனால் கார்டிசோல் அதிக நேரம் அதிகமாக இருக்கும்போது, ​​அது எரிச்சல், தூக்கப் பிரச்சினைகள், சோர்வு, மற்றும் நினைவகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட பாதிக்கும். துளசி போன்ற மூலிகைகள் படத்தில்…

Read More

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Read More

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை இந்த சீசனில் சேர்த்து போட்டியை உறுதி செய்துள்ளது டபிள்யூடிஏ அமைப்பு. 250 புள்ளிளை கொண்ட இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். அதேவேளையில் இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகள் களமிறங்கும். கடைசியாக 2022-ம் ஆண்டு சென்னையில் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின்லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இரட்டையர் பிரிவில் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா), லூயிசா ஸ்டெஃபானி (பிரேசில்) ஜோடி கோப்பையை வென்றிருந்தது. தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.

Read More

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 20-ம் தேதி வெளியாகிறது. 5 இசை அமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி நெல்சன் வெங்கடேசன் கூறும்போது, “ இது க்ரைம் ஆக்‌ஷன் டிராமா கதையை கொண்ட படம். அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை.‌ ஏன் என்பதை படத்தைத் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். என்னுடைய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாகவும், ஓர் இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் ‘டிஎன்ஏ’ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இதில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. ஏற்கெனவே சில படங்களில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் 5 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். வலிமையாகவும் உறுதியாகவும் பின்னணி…

Read More

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தற்போது அதிமுக கூட்டணி தன்வசத்தில் வைத்திருக்கிறது. இந்த பத்திலும் இம்முறை திமுக கூட்டணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையில் உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை. பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசனின் கோவை தெற்கு தொகுதியையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியையும் இம்முறை கட்டாயம் கைப்பற்றியே ஆகவேண்டும் என்பதும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டுள்ள முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள். தொண்​டா​முத்​தூர் தொகு​தி​யில் எஸ்​.பி.வேலுமணிக்கு எதி​ரான இழுப்பு வேலை​களை செந்​தில் பாலாஜி ஏற்​கெனவே தொடங்​கி​விட்ட நிலை​யில், கோவை தெற்​கில் இம்​முறை திமுக-வே போட்​டி​யிட வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைக்க ஆரம்​பித்​திருக்கிறார்​கள் உடன்​பிறப்​பு​கள். கடைசி​யாக 2011-ல் கோவை தெற்​கில் திமுக போட்​டி​யிட்​டது. அப்​போது இங்கு களம்​கண்ட முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் பழனி​சாமி, அதி​முக-​வின் சேலஞ்​சர் துரை​சாமி​யிடம் தோற்​றுப் போனார். இதனால், 2016, 2021 தேர்​தல்​களில் இந்​தத் தொகு​தியை காங்​கிரஸ் கட்​சிக்கு…

Read More

கல்லீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இது நச்சுத்தன்மை, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாகிறது. இருப்பினும், அதன் கடினத்தன்மை இருந்தபோதிலும், கல்லீரல் உணவின் சமீபத்திய போக்குகளிலிருந்து மேலும் மேலும் ஆபத்தில் உள்ளது. எதிர்பாராத விதமாக, இது ஆல்கஹால் அல்லது துரித உணவு அவசியமில்லை, பெரும்பாலான மக்கள் கற்பனை செய்வது போல, ஆனால் சமீபத்திய சுகாதார செய்திகள் மற்றும் துபாயை தளமாகக் கொண்ட ஒரு சிறந்த ஆரோக்கிய நிபுணரிடமிருந்து ஒரு ரீல் போன்ற மருத்துவ உள்ளடக்கம், துபாயை தளமாகக் கொண்ட பலக் மிட், உங்களுக்கு கூட தெரியாமல் உங்கள் கல்லீரலை அமைதியாக அழிக்கக்கூடிய மூன்று அன்றாட உணவுகளை அடையாளம் கண்டுள்ளது.இந்த இரகசிய குற்றவாளிகளை இங்கே ஒரு நெருக்கமான பார்வை:பிரக்டோஸ் நிறைந்த மற்றும் சர்க்கரை உணவு (எல்லாவற்றிலும் கொடியது)சர்க்கரை பானங்கள் மற்றும் மிட்டாய்கள் முதல் காலை உணவு தானியங்கள் மற்றும் சுவையான தயிர் வரை, இனிப்பு உணவுகள் உணவு பிரதானமாக மாறிவிட்டன.…

Read More

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன. இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 3 நதி​களின் நீரை இந்​தியா பயன்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் பஞ்​சாப், ஹரி​யானா மாநிலங்​கள் பலன் அடைகின்​றன. மேற்கு பகு​தி​யில் பாயும் சிந்​து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதி​களின் நீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வந்​தது. கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதல் காரண​மாக சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்தை மத்​திய அரசு…

Read More

Last Updated : 17 Jun, 2025 06:22 AM Published : 17 Jun 2025 06:22 AM Last Updated : 17 Jun 2025 06:22 AM சேலம்: டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 151 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் சார்பில் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பந்தை உலரச் செய்வதற்கு வழங்கப்படும் துண்டுகளில் வேதியல் திரவத்தை பயன்படுத்தி பந்து சேதப்படுத்தப்பட்டதாக அந்த அணி தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கேள்விக்குரிய துண்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டவை. இவை இரு அணிகளுக்கும் சமமாக…

Read More