வேலூர்: மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். வேலூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி பேசியதாவது: பல்வேறு துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும். அடித்தட்டு, பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், சமூக நீதியை நடைமுறைபடுத்தவும் திமுக தவறிவிட்டது. கிராமங்களில் பாமக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை 25-ல் ராமதாஸ் பிறந்த நாளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பதில்லை. தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. சித்திரை முழு நிலவு மாநாட்டைப் பார்த்து திமுக…
Author: admin
சென்னை: இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை கண்டிப்புடன் அறிவுறுத்திய நிலையிலும் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த தயாரிப்பாளர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த ஐபோன்களின் எண்ணிக்கை 2.04 கோடியை கடந்துள்ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத நிலவரம் மட்டுமே. கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஐந்து மாதத்தில் ஐபோன் ஏற்றுமதி என்பது 57% அதிகம் என சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸ் (ஓம்டியா) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி-மே வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஐபோன் ஏற்றுமதியில் 77% அமெரிக்காவுக்கு மட்டுமே சென்றுள்ளது. கடந்த 2024 முதல் ஐந்து மாதங்களில் 54% ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதைவிட கூடுதலாக 23% ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. குறிப்பாக, கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில்…
சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக பிஇ படிப்பை படிக்கலாம். படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) பகுதி நேர பிஇ படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று ( 16-ம் தேதி) தொடங்கியது. பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள் என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 28-ம் தேதி நடத்தப்படும். கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 31-ம் தேதி வழங்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
லீட்ஸ்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஸ்கை ஸ்போர்ட்ஸ் சானலுக்காக முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்குடன் கலந்துரையாடினார். அப்போது ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: டெஸ்ட் கேப்டனாக நான் தேர்வு செய்யப்படாததில் எந்த ஆடம்பரமான கதைகளும் இல்லை. நான் நீக்கப்பட்டதாக எந்த சர்ச்சையோ அல்லது தலைப்புச் செய்தியோ இல்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐபிஎல் தொடரின் போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எனது பணிச்சுமை குறித்து பிசிசிஐயிடம் பேசினேன். அறுவை சிகிச்சை நிபுணர், பணிச்சுமைகளை நிர்வகிப்பதில் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி…
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு, இம்ரான் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனிருக்கு சமீபத்தில் ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் தோல்வியை மறைப்பதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் 5 நாள் அரசு முறைப் பயணமாக அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க ராணுவத்தின் 250-வது விழா கொண்டாட்டத்துக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை வெள்ளை மாளிகை மறுத்தது. ராணுவ உறவுகள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாக். ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் அமெரிக்க ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் வாஷிங்டனில் பாக். ராணுவ தளபதி அசிம் முனிர் தங்கியிருந்த ஓட்டலை, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.…
Last Updated : 18 Jun, 2025 06:42 AM Published : 18 Jun 2025 06:42 AM Last Updated : 18 Jun 2025 06:42 AM விமல் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இரட்டை இயக்குநர்களான எல்சன் எல்தோஸ், மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். கிராமப்புற பின்னணியில், காமெடி என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் காரைக்குடியில் தொடங்கியது. மலையாளத்தில் சில படங்களை தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் விநாயகா அஜித் இதை தயாரிக்கிறார். நாயகியாக முல்லை அரசி நடிக்கிறார். மற்றும் சேத்தன், சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இதன் கதையை எழுதியுள்ளனர். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஒரே…
தென்காசி: சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் என்ற இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த வாரம் இந்த முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட முதியோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டை சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45), மதுரை தனலட்சுமி (70) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து, முதியோர் இல்லத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இல்ல நிர்வாகி ராஜேந்திரனை சாம்பவர்வடகரை போலீஸார் கைது செய்தனர். முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். பாதிப்பு அதிகமுள்ள 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நெல்லை…
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். சுனில் கிருஷ்ணான 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் சேர்த்தனர். திண்டுக்கல் அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 181 ரன்கள் இலக்குடன் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 43 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 73 ரன்களும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67…
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘காந்தாரா’. இந்தப் படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்துக்கு முந்தைய கதையாக ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஷிவமோகா மாவட்டத்தின் மாணி நீர்த்தேக்கத்தில் நடந்தது. ரிஷப் ஷெட்டியுடன் 30 பேர் கொண்ட குழு படப்பிடிப்புக்காகச் சென்றபோது, படகு கவிழ்ந்தது என்றும் ஆழமற்ற பகுதியில் கவிழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியதாகவும் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாகவும் செய்திகள் வெளியானது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர். இதுபற்றி இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் ஜா கூறும்போது, ‘‘ஒரு காட்சியின் பின்னணியில் ஒரு படகு இருக்க வேண்டும் என்பதற்காகப் படமாக்கினோம். பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, படகு கவிழ்ந்தது. அதில்…
அரியலூர்: காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் சென்னையில் இன்னும் சில தினங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூர் அண்ணாசிலை அருகே விரிவாக்கப்பட்ட மினி பேருந்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும் 31 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், சென்னை மாநகரில் இன்னும் 10 நாட்களில் பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது. காலநிலை மாறிவரும் காரணத்தால் பொதுமக்களுக்கான பேருந்து சேவையில் தடை ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சென்னையிலும் விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், வட்டார ப்போக்குவரத்து…
