Author: admin

மழைக்காலம் குளிர்ந்த தென்றல்களையும் வசதியான தருணங்களையும் கொண்டுவருகிறது, ஆனால் இது ஒரு பிடிவாதமான பிரச்சினையையும் விட்டுச்செல்கிறது: மீட்டி நாற்றங்கள். ஈரமான சுவர்கள், வரையறுக்கப்பட்ட சூரிய ஒளி மற்றும் அதிகரித்து வரும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கொண்டு, வீடுகள் பெரும்பாலும் கனமாகவும் பழையதாகவும் உணர்கின்றன. துணிகள், தளபாடங்கள் மற்றும் மூடிய அலமாரியில் கூட ஈரப்பதத்தை உறிஞ்சி, ஏர் ஃப்ரெஷனர்கள் தற்காலிகமாக மட்டுமே மறைக்க முடியும் என்று விரும்பத்தகாத வாசனையை உருவாக்குகிறது. இந்த சிக்கலை உண்மையிலேயே எதிர்த்துப் போராட, துர்நாற்றம் மற்றும் ஈரப்பதம் இரண்டையும் சமாளிக்கும் இயற்கையான தீர்வு உங்களுக்கு தேவை. கற்பூரம், அதன் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சொத்துக்களுடன், இந்திய வீடுகளில் பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது. ஸ்டைலான, பல்துறை மற்றும் பயனுள்ள, இந்த பருவமழையை உங்கள் வாழ்க்கை இடங்களை புதியதாக வைத்திருக்க இது சரியான தீர்வாகும்.உங்கள் வீட்டை மழைக்காலத்தில் புதியதாக வைத்திருக்க கற்பூரம் ஏன் இயற்கையான வழிகற்பூரம், அதன் மெழுகு அமைப்பு…

Read More

திருவனந்தபுரம்: வரும் நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினா அணி உடன் இதில் விளையாட உள்ள மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அது குறித்து இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கூறியுள்ளது. “கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி இந்தியாவில் விளையாடுவது குறித்த மின்னஞ்சலை நாங்கள் பெற்றோம். இருந்தும் இது குறித்து முதலில் அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவித்தால் நன்றாக இருக்கும் என கருதி நாங்கள் அமைதி காத்தோம். அதன்படி அந்த அணி நிர்வாகம் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா உடன் விளையாட ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா,…

Read More

கண்ணகி நகர்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு மின்சார வாரியம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (30) இவர்களுக்கு இவருக்கு 10 வயதில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 8 வயதில் மணி என்ற ஆண் குழந்தையும் உள்ளது. வரலட்சுமி கண்ணகி நகர் பகுதியில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை ( ஆக.23) வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் வீட்டில் இருந்து பணிக்காக திருவான்மியூர் சென்ற…

Read More

பட கடன்: ஹிபா அல்லாஹ் அயதி வெறும் 22 வயதில், துனிசியாவின் துனிஸைச் சேர்ந்த ஹிபா அல்லாஹ் அயடி, தனது வாழ்க்கையை முழுவதுமாக திருப்ப முடிவு செய்தார். 177 செ.மீ உயரத்தில் நின்று, ஒருமுறை 133.3 கிலோ எடையுள்ளவர். அளவிலான எண் தோற்றத்தைப் பற்றியது அல்ல; இது அவளுடைய அன்றாட வாழ்க்கை, அவளுடைய உடல்நலம் மற்றும் அவளுடைய நம்பிக்கையை பாதித்தது. 11 மாதங்களுக்கும் மேலாக, ஹிபா 52.45 கிலோவை இழந்து 52 கிலோவை எட்டினார், இவை அனைத்தும் ஜிம்மிற்குள் நுழையாமல். அவரது கதை எடை இழப்பு மட்டுமல்ல, ஒழுக்கம், பின்னடைவு மற்றும் தன்னை மீண்டும் கண்டுபிடிப்பது பற்றியது.இங்கே ஹிபாவின் பயணம், தனது சொந்த வார்த்தைகளில் சொல்லப்பட்டது.நான் அளவில் நுழைந்த நாள் மற்றும் 133.3 கிலோ என்னைத் திரும்பிப் பார்த்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இது ஒரு எண் மட்டுமல்ல; இது ஒரு உண்மை சோதனை. எளிமையான இயக்கங்களுடன் கூட நான்…

Read More

புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாட்டின் பார்வையில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் பார்வையில் அது தோல்வி அடைந்த ஒன்று. அரசு இதை வெற்றி பெற்றதாகவே கருதுகிறது. விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் புரட்சிகரமானவை. இந்த மசோதாக்களை நாடு வரவேற்கிறது. ஏனெனில், பிரதமர் பதவி உட்பட எந்த பதவியும் இந்தச் சட்டத்துக்கு…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேமிங் செக்மென்ட் போனாக இது சந்தையில் அறிமுகமாகி உள்ளது. லாவா பிளே அல்ட்ரா 5ஜி போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மீடியாடெக் டிமான்சிட்டி 7300 சிப்செட் 64 மெகாபிக்சல்…

Read More

புதுச்சேரி: புதுச்சேரிக்கு காங்கிரஸால் மட்டும்தான் மாநில அந்தஸ்து பெற முடியும் என்றும், பாஜக – என்.ஆர்.காங்கிரஸால் முடியாது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்தினால் கிடைக்கும் என பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10 முறைக்கு மேல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரங்கசாமி தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து பெறுவதே லட்சியம் என கூறியுள்ளார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறப்பு மாநில அந்தஸ்து தருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என தெளிவாக கூறிவிட்டனர். மத்தியில் பாஜக ஆட்சி,…

Read More

இந்தூர்: 130-வது அரசியலமைப்பு திருத்த மசோதா முற்போக்கானது என்றும், இதை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஊழலை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்ற தாயின் பெயரில் மரம் நடும் விழாவில் பங்கேற்று மரக்கன்றினை நட்ட அர்ஜுன் ராம் மேக்வால், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனது பார்வையில் இது ஒரு சிறந்த, முற்போக்கான சட்டம். எதிர்க்கட்சிகள் இதை ஆதரிக்க வேண்டும். ஆனால், அவர்கள்…

Read More

பாளையங்கோட்டை: “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். பாளையங்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறியது: “திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுகவை வேரோடு அழிப்போம் என்று சொல்லியுள்ளார். விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால்தான் பயிர் நன்றாக விளையும். கடந்த 15 ஆண்டுகளாவே வேரோடு பிடுங்கும் வேலையைதான் பாஜக பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக மாநாட்டில் நயினார் நாகேந்திரன் மிகப் பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களது ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள். எங்கள் ஆட்சி மீது பாஜக வைப்பது குற்றச்சாட்டு அல்ல, அவர்களது…

Read More

புதுடெல்லி / சென்னை: “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியபோது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவேன். அந்த வேட்கையின் காரணமாகவே தற்போது குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு புதிது கிடையாது. பொருளாதார நிலையில் பற்றாக்குறை குறித்து பல தரப்பினரும் விவாதிக்கும் வேளையில், இப்போது இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய பிரச்சினை எழுந்திருக்கிறது. அதாவது, நமது நாட்டின் ஜனநாயகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. இதுபோலவே அரசியலமைப்பு சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தேசிய…

Read More