வாஷிங்டன்: ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (53) உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. பின்பு இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக் கொண்டார். கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார். சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவன பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-லிருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000…
Author: admin
சென்னை: முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியால் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி ‘முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் திறந்தது திமுக அரசு. 75 சதவீதம் தள்ளுபடியுடன் ஜெனிரிக் மருந்துகள் கிடைக்கும் என விளம்பரப்படுத்திக் கொண்ட முதல்வர் மருந்தகங்களில் தோல் நோய் சம்பந்தப்பட்ட மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஜெனிரிக் மருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்றன. ஆனால் முதல்வர் மருந்தகங்களில் வெறும் 300 வகை…
புதுடெல்லி: ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த வலைதளங்களை பொதுமக்கள் அணுக முடியாத வகையில் அவற்றை முடக்குமாறு இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, எப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சட்ட விதிகளை மீறியதற்காகவும் இவை தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட தளங்கள் பட்டியலில் ஆல்ட், உல்லு, பிக் ஷாட்ஸ் ஆப், டெசிஃபிக்ஸ், பூமெக்ஸ், நவரசா லைட், குலாப் ஆப், கங்ன் ஆப், புல் ஆப், ஜால்வா ஆப், வாவ் என்டர்டைன்மென்ட், லுக் என்டர்டைன்மென்ட், ஹிட்பிரைம், ஃபெனியோ, ஷோஎக்ஸ், சோல் டாக்கீஸ், அட்டா டிவி, ஹாட்எக்ஸ் விஐபி, மூட்எக்ஸ்,…
சென்னை: ‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு, அங்கேயே வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு கோயில் நிலம் சொந்தமாக்கப்படும் என்றும், தங்களுடைய அரசு அமைந்தால் அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் என்றும் சொல்லியிருப்பது உண்மையிலேயே மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 40,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சொந்தமாக பல லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் ஒரு நெல் முனை அளவு கூட தமிழகத்தை ஆண்ட திராவிட அரசாங்கங்கள் கொடுத்தது அல்ல. அந்தக் காலத்தில் அரசர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கோயில்களுக்கு ஆறு கால பூஜை நடக்கவும், கோயில்களின் அன்றாட செலவுகளுக்காகவும் அந்தக் கோயில்…
புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய 4 பேரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் தமிழில் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுக-வின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவையில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில், திமுக சார்பில் நிறுத்தப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் மாநிலங்களவையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி.யாக…
மாலே: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலத்தீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சுதந்திர தின சதுக்கத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர்…
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை அமைக்கப்படும் என திமுக தலைவராக ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2020 நவம்பர் 6-ல் திருப்பூர் வந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காங்கயம் காளைக்கு காங்கயம் நகரின் மையப்பகுதியில் சிலை அமைக்கப்படும்” என அறிவித்தார். அது அறிவிப்போடு நின்று போன நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஸ்டாலினும் அதே உத்தரவாதத்தை அளித்துச் சென்றார். ஆனால், ஆண்டுகள் 4 ஆன நிலையிலும் இன்னும் காளைக்கு சிலை வந்தபாடில்லை. காளைக்கு சிலை வைத்து பெயரெடுப்பது யார் என்பதில் திமுக-வுக்குள்ளேயே இரண்டு கோஷ்டிகள் தெற்கு வடக்காக இழுப்பது தான் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள். காங்கயம் காளைக்கு சிலை அமைக்க அனுமதிக்காததைக் கண்டித்து முன்னாள் காங்கயம் ஒன்றியக் குழு தலைவர் மகேஷ்குமார்…
2025 வெளிவருகையில், இது பொழுதுபோக்கு உலகிற்கு ஆழ்ந்த துக்ககரமான ஆண்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஷானன் டோஹெர்டி மற்றும் டேம் மேகி ஸ்மித் போன்ற சின்னமான நபர்களை இழந்த பிறகு, புதிய புறப்பாடுகளின் வலி இன்னும் கனமாக உணர்கிறது. இந்த ஆண்டு, நாங்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க திறமைகளுக்கு விடைபெற்றுள்ளோம், ஒவ்வொன்றும் புகழைக் கடக்கும் ஒரு பாரம்பரியத்தை விட்டு வெளியேறுகின்றன.ஹல்க் ஹோகன்டெர்ரி பொல்லியாவில் பிறந்த மல்யுத்த டைட்டன் ஹல்க் ஹோகன், ஜூலை 24 அன்று தனது புளோரிடா வீட்டில் இருதயக் கைதைத் தொடர்ந்து தனது 71 வயதில் இறந்தார். 1980 களில் ஹல்கமேனியா நிகழ்வைத் தூண்டுவதற்கும் தொழில்முறை மல்யுத்தத்தை மறுவரையறை செய்வதற்கும் பெயர் பெற்ற அவர், எட்டு ரெஸில்மேனியாவின் தலைப்பு மற்றும் ஆறு WWE சாம்பியன்ஷிப்பை வென்றார். பாப் கலாச்சார ஐகானாக மாறிய ஹோகன், அவரது மனைவி ஸ்கை டெய்லி மற்றும் இரண்டு குழந்தைகள். புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க்…
புதுடெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஜூலை 28 முதல் மக்களவை வழக்கம்போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக நேற்றும் இரு அவைகளும் முடங்கின. இதை தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய் உட்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ‘எதிர்க்கட்சிகள் கோரிய படி ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 28-ம் தேதி விவாதம் தொடங்க உள்ளது. எனவே, அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டதாக…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 6-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடந்தது. 72,743 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தரவரிசை பட்டியலை சென்னையில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பிரிவில் 39,853 பேர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4,062 பேர், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில்…