Author: admin

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான…

Read More

வீட்டு கோவிலில் அன்றாட வழிபாட்டாக இருந்தாலும், அல்லது விரிவான யாக்யா மற்றும் ஹவான்கள் வீட்டில் இருந்தாலும், கலாவா ஒரு தலைமை பாதிரியார் அல்லது குடும்பத்தின் ஒரு மூத்த நபரால் கட்டப்பட்டிருக்கிறார். வீட்டில் அல்லது ஒரு கோவிலில் பூஜைகள் இருக்கும்போதெல்லாம், சன்ஸ்கர்கள் அல்லது ‘நாம்கரன்’, அபிஷேகம் சடங்குகள், ஜெனு சடங்கு, திருமணம் அல்லது விருப்பங்கள் போன்ற சடங்குகள் உள்ளன, மக்களின் மணிக்கட்டில் ஒரு நூல் பிணைக்கப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன், நவரத்ரி போன்ற பண்டிகைகளில் கூட, பூஜை நடைபெறுவதற்கு முன்பு ஒரு நூல் கையைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. பூசாரி வேத மந்திரங்களை கோஷமிடுகிறார், பின்னர் கையில் உள்ள நூலைக் கட்டுகிறார், பின்னர் மக்கள் பாதிரியாரிடமிருந்து கால்களைத் தொட்டு அல்லது அவர்களுக்கு முன்னால் குனிந்ததன் மூலம் ஆசீர்வாதங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

Read More

புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் மற்றும் கப்பல் துறையுடன் தொடர்புடையவர்களும் ஈரானில் உள்ளனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அங்கு சிக்கியிருந்த இந்தியர்களில் ஆயிரக்கணக்காக மாணவர்களும் இருந்தனர். கடந்த 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கும் இடையில் சுமார் 22,500 இந்தியர்கள், உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக மீட்டு அழைத்து வரப்பட்டனர். இதற்காக,…

Read More

டி.கல்லுப்பட்டி அருகே கரையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஓர் மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ஓர் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம் ஊராட்சிக்குட்பட்ட எம்.கரையாம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஓக் மாணவர் மட்டுமே உள்ளார். இந்த ஒரே ஒரு மாணவருக்காக ஓர் ஆசிரியர் மாற்றுப் பள்ளியிலிருந்து இடமாறுதலில் வந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாணவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு படிக்கச் சென்றதால், எம்.கரையாம்பட்டியில் உள்ள பள்ளி மூடப்பட்டது. தற்போது அந்த மாணவர் மீண்டும் கரையாம்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பள்ளிக்குச் சென்ற ஆசிரியரும் மீண்டும் பணியிட மாறுதலில் கரையாம்பட்டிக்கு வந்துள்ளார். இந்த ஒரு மாணவருக்கு மதிய உணவு சிட்டுலொட்டிபட்டி பள்ளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. இதேபோல், பேரையூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். தெய்வநாயகபுரம்,…

Read More

சென்னை: அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். நாளை பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும் போது 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம்…

Read More

ஒரு மனம் உடைக்கும் சம்பவத்தில், தெலுங்கானாவில் இடைத்தரகர் துணைத் தேர்வுகளை அழிக்கத் தவறியதால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 16-19 வயதுடைய மாணவர்கள், தோல்விக்குப் பிறகு கடுமையான படியை நாடினர். பேரழிவுகரமானதாக, பரீட்சை அழுத்தம் மற்றும் தோல்வியிலிருந்து நிராகரிப்பு ஆகியவை பல மாணவர்களை அத்தகைய தீவிர நடவடிக்கை எடுக்கத் தூண்டக்கூடும். ஆனால், இதுபோன்ற சூழ்நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய முடியும்? என்ன நடந்தாலும் உங்கள் குழந்தையை நீங்கள் ஆதரிக்க சில வழிகள் இங்கே …ஆதரவான சூழலை உருவாக்கவும் குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் உணர வேண்டும், குறிப்பாக தேர்வுகளின் போது. இதற்காக உங்கள் வீடு கற்றலை ஆதரிக்கும் ஒரு உகந்த இடமாக இருப்பது முக்கியம், மேலும் குழந்தையின் உணர்ச்சிபூர்வமான அளவிலும் உதவுகிறது. உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் விமர்சிப்பது அல்லது ஒப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பதட்டத்தை அதிகரிக்கும் மற்றும் சுயமரியாதையை குறைக்கும். இதற்காக:தீர்ப்பு இல்லாமல் உங்கள் குழந்தையின் கவலைகளைக் கேளுங்கள்.உங்கள்…

Read More

தெஹ்ரான்: சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய ராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதனையடுத்து, ​​வாட்ஸ்அப் உட்பட சில செயலிகள் மற்றும் தொலைபேசிகளால் இருப்பிடத் தரவுகள் கசிந்ததன் அடிப்படையில் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, வாட்ஸ்அப்பை தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றுமாறு தனது குடிமக்களுக்கு ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று ஈரானிய அரசு தொலைக்காட்சி மக்களை தங்கள் தொலைபேசிகளிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்த செயலி இஸ்ரேலிய ராணுவத்திற்கு பயனர் தகவல்களை கசியவிடக்கூடும் என்று அந்த அறிவிப்பு கூறியது. இது ஈரானில்…

Read More

மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து குறித்து இயக்குநர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நெல் ஜெயராமன் மறைந்த போது அவரது மகன் படிப்பு செலவை ஏற்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது தொடர்ச்சியாக அவருடைய மகனை சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருவது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் இரா.சரவணன். சிவகார்த்திகேயன் தொடர்பாக இரா.சரவணன், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார். இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி…

Read More

சென்னை: “கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடியில் அகழாய்வுப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதே எடப்பாடியார் ஆட்சியில்தான். உண்மையை மறைத்து வாய்கிழிய கத்தும் திமுகவுக்கு கண்டனம். திமுக எப்படிப்பட்ட கேவலமான, அப்பட்டமான சாதி வெறி பிடித்த கட்சி என்பதை, தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொண்டு நிற்கிறது. சாதிவெறி மனப்பான்மை, உருவக் கேலி இதெல்லாம் தான் திமுக கடைபிடிக்கும் `திராவிட’ கொள்கைகளா?. ஆனால், அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டதன் காரணமே சாதி பேதத்தை அகற்றுவதற்காகத்தான். எடப்பாடி எளிய மனிதர், ஒரு விவசாயி, தன் உழைப்பால் உயர்ந்து முதல்வராகி, இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக, ஆளும் ஸ்டாலின் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.…

Read More

மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மா விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருவவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து, மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல், வீரமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள…

Read More