Author: admin

மழைக்காலம் அதன் குளிர், மழை காற்று மற்றும் கடுமையான சூழலுடன் வரவேற்கத்தக்க மாற்றத்தை வழங்குகிறது. தாவரங்கள் மழைநீரால் வளர்க்கப்படுகின்றன, மேலும் ஈரமான மண்ணின் நறுமணம் புத்துயிர் அளிக்கும் சூழலை உருவாக்குகிறது. பருவமழையின் போது உங்கள் கொல்லைப்புறம் அல்லது தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் எல்லா காய்கறிகளும் உங்களுக்கு அதே மகிழ்ச்சியைத் தருகின்றனவா? சில காய்கறிகள் பருவமழை பருவத்தில் அழகாக வளர்கின்றன, மற்றவர்கள் அதிக நீர் அல்லது ஈரப்பதத்துடன் போராடலாம். சரியான காய்கறியை வளரத் தேர்ந்தெடுப்பது ஏராளமான அறுவடை மற்றும் வெறுப்பூட்டும் தோட்டக்கலை அனுபவத்திற்கு இடையிலான அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்தும்.கோலோகாசியா என்றும் அழைக்கப்படும் ஆர்பி, பருவமழையின் போது வளர எளிதான காய்கறிகளில் ஒன்றாகும். ஒரு மழை நாளில் காரமான ஆர்பியின் சூடான தட்டு அனுபவிப்பதில் சிறப்பு ஒன்று இருக்கிறது, குறிப்பாக ஆர்பி உங்கள் சொந்த தோட்டத்திலிருந்து நேராக வரும்போது. இது குறைந்த பராமரிப்பு, எளிதில் வளரக்கூடிய வேர் காய்கறி,…

Read More

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ‘ஃபதா 1’ என்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலிலும் உயிரிழப்பு எண்ணிக்கு 25-ஐ தாண்டிவிட்டது, 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள போர் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது. இதில் ‘ஃபதா 1‘ என்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது வீசியது. ஈரான் இந்த வகை ஏவுகணையை இஸ்ரேல் மீது வீசுவது இது முதல் முறை அல்ல. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி இஸ்ரேலை ‘ஃபதா 1’ ஏவுகணை மூலம் இஸ்ரேல் தாக்கியது. இந்த சூப்பர்சோனிக் ஏவுகணை…

Read More

சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்த மருத்துவர் கு.சிவராமனின் ஆரோக்கியா சித்த மருத்துவமனை சார்பில் வரும் 21-ம் தேதி (சனிக்கிழமை) உடல் நலத்துக்கான யோகா மற்றும் சித்த மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வளாகத்தில் ‘யோகாவும் – உடல் நலமும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மருத்துவ கருத்தரங்கில், தொற்றா வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கும் யோகாசனங்களை செய்வது, உணவுப் பழக்கங்களில் செய்ய வேண்டிய மாறுதல்கள், வாழ்வியல் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது. சேலம் வசிஷ்டா யோகா நிலையத்தைச் சேர்ந்த, உலகப் புகழ்பெற்ற உடல் நலத்துக்கான யோகா பயிற்சி நிபுணர் மருத்துவர் வெற்றிவேந்தன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சர்க்கரை நோயாளிகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டிய யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணயாமம்) உள்ளிட்டவற்றை செயல் விளக்கத்துடன் கற்றுத் தருகிறார்.…

Read More

திருவனந்தபுரம்: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த கேள்விக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: கடந்த 2022 முதல் மோதல்களும் இடையூறுகளும் உலகளாவிய காட்சியின் ஒரு பகுதியாக இருந்துவருகின்றன. அவை மிகவும் தீவிரமாகவும் கணிக்க முடியாததாகவும் மாறிவிட்டன. இது உலகம் முழுவதும் அரசியல், பொருளாதாரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான ஒட்டுமொத்த சூழலையும் மிகவும் கடினமாக்குகிறது. இன்றைய உலகளாவிய சூழல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு, கிட்டத்தட்ட முழு உலகப் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கு மிகவும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறிவிட்டது என்று கூறலாம். ஆனால் இந்த சூழ்நிலைகளில், இந்தியா உண்மையில் ஒப்பீட்டளவில் பிரகாசமான இடமாக தனித்து நிற்கிறது. உலகப் பொருளாதாரம் நிச்சயமற்றதாக இருந்து வரும் சூழலில் இந்தியப் பொருளாதாரரம் பிரகாசமாக உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் நிதி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தியுள்ளது. நாங்கள் நிதிப் பற்றாக்குறையை குறைத்து அரசுக் கடன் அளவை…

Read More

மஞ்சள் நீர் ஒரு பிரபலமான ஆரோக்கிய பானமாகும், இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் பல தசாப்தங்களாக இந்திய வீடுகளில் வீட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வாக இருந்து வருகிறது. குர்குமின் இருப்பதால் இந்த பானம் பயனுள்ளதாக இருக்கும், இது அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு அறியப்பட்ட ஒரு இயற்கை கலவை ஆகும். எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில் மஞ்சள் நீரைச் சேர்ப்பது பல்வேறு நன்மைகளைப் பெற உதவும், ஏனெனில் இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, செரிமானத்தை ஆதரிக்கிறது மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே, மஞ்சள் நீர் உங்கள் உடலை வளர்ப்பதற்கான எளிய மற்றும் இயற்கையான வழியாகும். உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதன் உட்கொள்ளலைச் சேர்ப்பதன் மூலம் மஞ்சள் நீரின் ஆறு சக்திவாய்ந்த நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.மஞ்சள் நீர் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு உயர்த்துகிறதுஇது ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கிறதுமஞ்சள் நீர் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும், ஏனெனில்…

Read More

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கலவைதான் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில் என இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர். அவர் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அன்று தொடங்குகிறது. முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி என அடுத்தடுத்து இரண்டு முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் ஷுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் ஷுப்மன் கில் குறித்து பட்லர் பேசியுள்ளார். இருவரும் அண்மையில் முடிந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தனர். அந்த அணியை ஷுப்மன் கில் கேப்டனாக…

Read More

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதல்வரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த அவர் ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் சார்பில் 2027 ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கர்நாடக அரசின் சார்பில் மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்படுவது ஏன்? என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அற்புதமான விளக்கம் அளித்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசு மறுப்பது அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. மாநில அளவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்ட நிலையில், மீண்டும் புதிய சாதிவாரி…

Read More

6 பொதுவான பழக்கவழக்கங்கள் உங்கள் கல்லீரலை சேதப்படுத்துகின்றன கல்லீரல் காயம் வரும்போது, ​​ஆல்கஹால் பொதுவாக மனதில் வசந்த முதல் குற்றவாளி. எவ்வாறாயினும், பல்வேறு வழக்கமான போக்குகள் -சிலமாக புறக்கணிக்கப்பட்டவை -இந்த முக்கிய உடல் உறுப்பை நுட்பமாக சேதப்படுத்தும் திறன் கொண்டவை என்பதை சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். கல்லீரல் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பது, நச்சுகளை நச்சுத்தன்மையாக்குதல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஆனால் அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, வழக்கமான வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துதல், அதிக நேரம் உட்கார்ந்திருப்பது போன்ற பிற நடத்தைகள் அனைத்தும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். பெரும்பாலும், சேதம் படிப்படியாக, அறிகுறி இல்லாதது, இது மிகவும் தாமதமாகிவிடும் வரை. இவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.ஆல்கஹால் எந்த தொடர்பும் இல்லாத 6 கல்லீரல் சேதப்படுத்தும் பழக்கம்1. அதிகப்படியான சர்க்கரை கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும்அதிக அளவு கூடுதல் சர்க்கரையை உட்கொள்வது -குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு…

Read More

போர் என்பதே அரசியல் என்றால், அதை தூண்டிவிடுவதும், போருக்கு ஆதரவாக அணிகள் சேர்வதும், மறைமுகமாக ஆதரிப்பதும், ஆயுதம் வழங்குவதும், கருத்து மட்டுமே சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்பதும், மத்தியஸ்தம் செய்வதும் நுண்ணரசியல் வகையறா எனலாம். எந்த இரு நாடுகள் மோதிக் கொண்டாலும் கோதாவுக்கு வெளியே நிற்கும் மற்ற நாடுகள் மேலே பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு வகையறாவைச் சேர்ந்ததாகவே இருக்க முடிகிறது. நவீன புவி அரசியலில் மாறிவரும் பொருளாதார சார்புகள் அப்படியான நிலைப்பாட்டினை எடுக்கும் நிர்பந்தத்துக்கு உலக நாடுகளைத் தள்ளுகிறது. இந்தப் புள்ளியில்தான், இஸ்ரேல் உடனான போரில் ‘நண்பன்’ ஈரான் சார்ந்த அணுகுமுறையில் ரஷ்யா ‘நிதான’ அரசியலைப் பின்பற்றி வருகிறது. நண்பனுக்கு ஒன்று என்றால்..! – கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அன்றைய தினமே, ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு அடுத்தடுத்து பேசினார் ரஷ்ய அதிபர்…

Read More

சென்னை: “மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பாஜக சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பாஜக காலம் காலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். சிந்துச் சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய மத்திய பாஜக அரசு முயல்கிறது” என்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொ டர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2014-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. 2014-ல் கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர். அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று…

Read More