Author: admin

புதுடெல்லி: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், குடலிறக்க சிகிச்சைக்கு ஆலோசனை பெறுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். 33 வயதான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் 700 ரன்ளுக்கு மேல் வேட்டையாடி இருந்தார். இந்த தொடர் முடிவடைந்ததும் மும்பை பிரீமியர் லீக் டி 20 தொடரிலும் சூர்யகுமார் யாதவ் பங்கேற்றார். தொடர்ச்சியாக அவர், 3 மாதங்களாக பயணங்கள் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமான வட்டராங்கள் கூறும்போது, “சூர்யகுமார் யாதவுக்கு வலது பக்க கீழ் வயிற்றின் கீழ் பகுதியில் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா (குடலிறக்கம்) உள்ளது. இதற்காக ஆலோசனை பெறுவதற்காக அவர், இங்கிலாந்து சென்றுள்ளார். தேவைப்பட்டால், அங்கு அவர், அறுவை சிகிச்சை செய்து கொள்வார்” என தெரிவித்தன. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக இந்திய அணி எந்தவித டி20 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் தனது காயத்தை சரிசெய்து கொள்ளவும், பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை…

Read More

டெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் உச்ச தலைவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு அவரை கொலை செய்யப் போவதில்லை. அதேநேரம், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குவதை ஏற்க முடியாது. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா…

Read More

சென்னை: சென்னையில் 4 வழிச்சாலையாக உள்ள மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அதை 6 வழிச்சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு வரிசையாக அமைந்துள்ள 9 சிலைகளை இடமாற்றம் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் முதல் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ள காமராஜர் சாலை எனப்படும் மெரினா கடற்கரை சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருவதால் இங்கு கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 4 வழிச்சாலையாக உள்ள இச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி போக்குவரத்தை குறைக்க சென்னை மாநகராட்சி…

Read More

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைவான பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3 ஆயிரத்துக்கு பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்படும். இது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்படும். வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு ஆண்டு அல்லது 200 முறை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாஸ் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் ராஜ்மார்க் யாத்ரா செயலி, என்எச்ஏஐ இணையதளம் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் விரைவில் லிங்க் செயல்பாட்டுக்கு வரும். 60 கி.மீ. வரம்புக்குள் அமைந்துள்ள சுங்கச் சாவடிகள் தொடர்பான நீண்டகால கோரிக்கைகளுக்கு இது தீர்வாக அமையும். அத்துடன் குறைவான மற்றும் ஒரே பரிவர்த்தனை மூலம் சுங்க…

Read More

சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ராஜ் குமார் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். வசீம் அகமது 32, சஞ்ஜய் 27, சுஜய் 25 ரன்கள் சேர்த்தனர். 169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 39, பாலசுப்பிரமணியன் சச்சின் 38, மாதவ பிரசாத் 22 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஜ் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். திருச்சி அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.…

Read More

அல்பாட்டா: பிரதமர் மோடி… நீங்கள்தான் மிகச்சிறந்தவர் என்று ஜி7 உச்சி மாநாட்டின்போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் சூட்டினார். கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியை, மெலோனி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே உள்ள நல்லுறவு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். இதைத் தொடர்ந்து ஜார்ஜியா மெலோனி சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளப் பதிவில் மெலோனி கூறியுள்ளதாவது: மோடி… நீங்கள்தான் மிகச் சிறந்தவர். நான் உங்களைப் போலவே இருக்கவும் செயல்படவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். மேலும் இருவரும் சந்தித்து கைகுலுக்கும் வீடியோவையும் அவர்…

Read More

சென்னை: சென்னையில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான அறிவிப்பின் போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “திருநங்கைகளுக்கான அரண் எனும் பெயரில் 2 தங்கும் இல்லங்கள் சென்னை மற்றும் மதுரையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.” என அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரண் இல்லங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அத்தொண்டு நிறுவனங்கள் திருநங்கையர் நலனுக்காக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். திருநங்கையர் தலைமையிலான அல்லது திருநங்கைகள் பெரும்பான்மையாக உள்ள நிர்வாகக்குழுவை கொண்டிருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் திருநங்கையருக்காக செயல்படுத்திய திட்டங்களின் விவரங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்த விவரங்களை அந்நிறுவனம் அளிக்க வேண்டும். இந்திய சட்டங்களில் ஏதாவது…

Read More

கிரேக்க தெய்வங்களால் ஈர்க்கப்பட்ட பெண் குழந்தை பெயர்கள்புராணங்கள், அருள் மற்றும் சக்தியைக் கலக்கும் பெயரை நீங்கள் தேடுகிறீர்களானால், கிரேக்க தெய்வங்கள் காலமற்ற உத்வேகத்தை வழங்குகின்றன. இந்த பெயர்கள் ஒலியில் அழகாக மட்டுமல்ல, குறியீட்டு அர்த்தத்துடன் கூடியவை -நீங்கள் வலுவாகவும், புத்திசாலித்தனமாகவும், கதிரியக்கமாகவும் வளர விரும்பும் ஒரு மகளுக்கு ஏற்றது.

Read More

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை. ஈரானுக்கு…

Read More

சென்னை: சென்னை – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 100 சதவீதம் தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை – ரேணிகுண்டா மார்க்கம் கவாச் தொழில்நுட்பத்துக்கு (மேம்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு) மாறுவதற்கு எதிர்காலத்தில் தயாராக உள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களை வலிமைப்படுத்துவது, நவீன சிக்னல் முறை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர வழித்தடம் என்று அழைக்கப்படும் ரயில் தடங்களில் அமைக்கப்படுகிறது. பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், மொத்தம் 1,612 கி.மீ. தொலைவு வழித்தடம் முழுவதும் தானியங்கி சிக்னலை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தெற்கு ரயில்வேயில், சென்னை – ரேணிகுண்டா (134 கி.மீ) மற்றும் சென்னை…

Read More