சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது, மாநாட்டுக்காக சென்னையில் இருந்து ஜூன் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முருகன் மாநாட்டுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஜூன் 21-ம் தேதி இரவு புறப்பட்டு, 22-ம் தேதி காலை மதுரை சென்றடையும். பின்னர், 22-ம் தேதி மாலை மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சென்னை வந்தடையும். தமிழகம் முழுவதிலும் இருந்து மாநாட்டுக்காக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அது உறுதி செய்யப்பட்டவில்லை. அதேபோல், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்…
Author: admin
துபாய்: ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து நேற்று வெளியிட்டன. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் இங்கிலாந்தின் 7 மைதானங்களில் நடைபெற உள்ளன. இந்த 12 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1-ல் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, இங்கிலாந்து மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக்…
சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில், தகவல் ஆணையராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்த 2022 நவம்பர் மாதம் முடிவடைந்தது. தொடர்ந்து, புதிய தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகில் அக்தரும், தகவல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ் ஆகியோர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றனர். தொடர்ந்து, மீதமுள்ள 2 தகவல் ஆணையர்கள் பதவியிடத்துக்கு தகுதியானவர்கள் தேர்வு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தகுதியானவர்கள் பட்டியல் தயாரித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு…
லீட்ஸ்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாட உள்ள முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது: விராட் கோலியின் போராட்ட மனப்பான்மை, அவரது போட்டித்திறன் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது விருப்பம் ஆகியவற்றை இந்திய அணி இழக்கப் போகிறது. விராட் கோலி 18-ம் எண் சீறுடையை தனது சொந்தமாக்கிக் கொண்டார். எந்த இந்திய வீரர்களின் சட்டையின் பின்புறத்திலும் 18-ம் எண்ணைப் பார்க்காமல் இருப்பது சற்று வித்தியாசமாக இருக்கும், ஆனால்…
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆ.ராசா வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.5 கோடியே 53 லட்சத்துக்கு சொத்துகளை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கு தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு இந்தத் தொடர் கடும் சவாலாக இருக்கக்கூடும். இந்நிலையில் இந்த போட்டிக்கான விளையாடும் லெவன் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தொலைக்காட்சி வர்ணணையாளருமான ரவி சாஸ்திரி ஐசிசி இணையதளத்தில் கூறியிருப்பதாவது: தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் களமிறங்க வேண்டும். ஏனெனில் கே.எல்.ராகுலுக்கு இது மிகப்பெரிய சுற்றுப்பயணம் என்று நான் நினைக்கிறேன். அவர், அதிக அனுபவம் கொண்டவர். கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்திருந்தார். அந்த தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருந்தது. இதனால் இம்முறையும் அவர், தொடக்க வீரராக களமிறங்குவார் என நம்புகிறேன். 3-வது இடத்துக்கு இளம் வீரரான சாய் சுதர்சனுடன் செல்வேன். நான் அவரைப் பார்த்த எல்லாவற்றிலும்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கனடா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.…
சென்னை: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அல்லது மக்கள் எதிர்ப்புமிக்க இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், அவை மாவட்ட ஆட்சியரின் தலையீட்டின் பேரில் அகற்றப்படுகின்றன. இதுதொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட அறிவிக்கை: ஏற்கெனவே டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைவிடங்களுக்கு அருகில் புதிதாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் வந்தால் ஏற்கெனவே உள்ள விதிகள் இங்கு பொருந்தாது. ஆனால், டாஸ்மாக் கடைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர்கள், விதிகளின்படி அதை பரிசீலித்து, தகுதிகள் மற்றும் உத்தரவுகள் அடிப்படையில் 30 நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. நஜ்முல் ஹாசைன் ஷான்டோ 136, முஸ்பிகுர் ரகிம் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. ஷான்டோ 279 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 148 ரன்கள் எடுத்த நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷான்டோ, முஸ்பிகுர் ரகிம் ஜோடி 264 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய முஸ்பிகுர் ரகிம் 350…
சென்னை: பாஜகவின் ஆட்சி அதிகார மிரட்டல்களை சமாளிக்க முடியாமல் திணறும் பழனிசாமி அதை மடைமாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது. தனது ஆட்சியில் நடந்த குற்றச் சம்பவங்களை மறந்துவிட்டு திமுக ஆட்சியில் நடக்கும் குற்றங்களை பூதாகரமாகப் பேசுகிறார். பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி பெண்கள் பாதுகாப்பில் சமரசமின்றித் திமுக அரசு செயலாற்றி வருவதால்தான், இன்று இந்தியாவிலேயே அதிகமாகப் பெண்கள் வேலைக்குச் செல்வதும் பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளியான அதிமுக நிர்வாகிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்த பழனிசாமிக்கு, முதல்வரை விமர்சிக்க தகுதி இல்லை. அதிமுக ஆட்சியில் மக்களைச் சீரழித்த போதைப் பொருட்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது திமுக ஆட்சி. தனது…
