சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 25 முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால் டிக்கெட் இன்று (ஜூன் 19) மதியம் வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல, செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Author: admin
லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். நாளை லீட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ரோஹித்தும், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி இது. இந்நிலையில், இந்தத் தொடரில் முதல் போட்டி குறித்து ரிஷப் பந்த் கூறும்போது, “அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்ற விவாதம் இன்னும் நீடிக்கிறது. ஆனால், 4 மற்றும் 5-வது இடத்தில் விளையாடுவது யார் என்பது உறுதியாகி உள்ளது. ஷுப்மன் கில் 4-வது இடத்திலும், நான் 5-வது இடத்திலும் விளையாட உள்ளோம். மற்றவை குறித்து கலந்தாலோசித்து வருகிறோம். எனக்கும்,…
‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம். ‘காயல்’ எதை பேசுற படம்? காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும் இருக்குங்கறதை சொல்ற படம் இது. தற்கொலையை எதிர்த்து இயக்கம் நடத்திட்டு இருக்கிற ஒரு பொண்ணு, அவங்களோட காதலை அம்மா புறக்கணிக்கிறாங்க. அதுக்கு காரணமா சாதி இருக்கு. பிறகு அவங்க அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அந்தப் பொண்ணு அதை ஏத்துக்க முடியாம என்ன முடிவு எடுக்கிறா, அந்த முடிவு என்ன மாதிரியான விளைவுகளை கொண்டு வருதுன்னு படம் போகும்.அனுமோள் முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்களாமே? ஆமா. சில வருஷங்களுக்கு முன்னால அவங்களை கேரளாவுல சந்திச்சப்ப, இந்தக் கதையை சொன்னேன். அப்போ, “இந்தக் கதையை நீங்க…
மதுரை / தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள்கட்டப்பட்டுள்ளன. கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற தீர்த்தம் மட்டுமே தற்போது உள்ளது. தீர்த்தங்களின் பெயர்களை குறிப்பிட்டு கல் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தூண்கள் கோயில் திருப்பணிகளின்போது மறைக்கப்பட்டுள்ளன. இந்த கல் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வருவதில்லை. ஹெலிகாப்டரில் மலர் தூவும் நிகழ்வுக்கு கோயில் நிதி செலவிடப்படுவது தவறு. கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆகம…
சன்ஃப்ளவர், சோயாபீன், கனோலா, ஒருவேளை நெய் கூட சமைக்கும் எண்ணெயின் அதே சில பாட்டில்களை நாம் அனைவரும் அடைகிறோம் – சிந்தனை நாம் ஸ்மார்ட் தேர்வுகளை செய்கிறோம். ஆனால் இங்கே ஒரு திருப்பம்: அந்த “ஆரோக்கியமான” அல்லது “அன்றாட” எண்ணெய்கள் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை மெதுவாக சேதப்படுத்தும் – குறிப்பாக அவை அதிக வெப்பம், மீண்டும் சூடாக்கப்பட்டால் அல்லது அடிக்கடி பயன்படுத்தப்பட்டால். விதை எண்ணெய்கள்: வீக்கம் ராக்கெட்டுகள் வெற்றுப் பார்வையில் மறைந்திருக்கும்பிஸியான சமையலறைகள் முதல் உங்கள் அன்றாட சாப்பாட்டு மேஜை வரை, சோயாபீன், சோளம், சூரியகாந்தி மற்றும் பருத்தி விதை போன்ற விதை எண்ணெய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. அவர்கள் ஆரம்பத்தில் ஆரோக்கியமான ஒளிவட்டத்தைப் பெற்றனர், ஏனெனில் அவை தாவர அடிப்படையிலானவை மற்றும் நிறைவுற்ற கொழுப்பில் குறைவாக உள்ளன. ஆனால் ஆராய்ச்சி இப்போது அவர்களுக்கு ஒரு இருண்ட பக்கத்தை அளிக்கிறது. இந்த எண்ணெய்கள் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களில் கனமாக…
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டிராக்டர் ஒருவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய்மாமன் உதவியுடன் தாய் வீட்டுக்கு அந்த சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் கணவர் வீட்டில் தன்னை கொடு மைப்படுத்துகிறார்கள் என்று கூறி, தனது நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் தனக்கு பாது காப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் உஜ்ஜால் புய்யான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: 16 வயதான சிறுமியை கட்டாயப்படுத்தி 33 வயதான நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவரது நண்பர் மீது சிறுமி கடத்தல் வழக்குப் பதிவு…
சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கிய இந்தப் படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் காளி வெங்கட் பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்குச் சமர்ப்பிக்க, இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. கலையில் மட்டும் தான் அழுவதைக் கூட ரசிக்க முடியும். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்தப் படத்தைப் பதிலாக அளித்திருக்கிறார். இதனால் இயக்குநரைப் பாராட்டுகிறேன். இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது” என்றார்.
சென்னை: பாமகவின் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இருவரிடமும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார். இந்நிலையில், பாமகவின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை கடந்த 15-ம் தேதி முதல் அன்புமணி நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட கூட்டம்…
உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகளுடன் எழுந்திருக்கிறீர்களா அல்லது நாள் தொடங்குவதற்கு முன்பே உங்கள் இதயம் துடிக்கிறது? நீங்கள் தனியாக இல்லை. காலை கவலை என்பது நீங்கள் நினைப்பதை விட மிகவும் உண்மையான மற்றும் பரவலான ஒன்று. இது ஒரு இறுக்கமான அட்டவணை, ஒரு காலக்கெடு அல்லது மற்றொரு நாளைக் கையாள வேண்டிய பொதுவான அச்சத்தின் கவலையாக இருந்தாலும், காலை கவலை எல்லாவற்றையும் வண்ணமயமாக்கலாம்.காலை கவலை என்றால் என்ன?காலை கவலை என்பது பதற்றம் அல்லது கவலையின் அதிகரித்த உணர்வு, அது எழுந்தவுடன் உடனடியாக எழுகிறது. பதட்டம், வாஷிங்டன் பல்கலைக்கழக உதவி உளவியல் மற்றும் மூளை அறிவியல் உதவி பேராசிரியர் டாக்டர் ரெபேக்கா காக்ஸ், காலையில், அதே போல் நாளின் நடுப்பகுதியில் அல்லது பின்னர் ஒருவரின் உள் கடிகாரத்தைப் பொறுத்து உச்சம் பெறக்கூடும். இந்த மாறுபாடுகள் சர்க்காடியன் தாளங்களில் உள்ள வேறுபாடுகளுடன் தொடர்புடையவை, தூக்கம், ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் உடலின் இயற்கையான 24 மணி…
புதுடெல்லி: ஈரானிலிருந்து அர்மீனியா வழியாக தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் ஈரானில் உள்ள உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். இவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர வேண்டும் என இவர்களின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை அர்மீனியா எல்லை வழியாக அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அவ்வாறு தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
