சென்னை: பணத்தை பறித்ததோடு, அரசுப் பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை, காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் கேட்டின் முன்பு கடந்த 2018 அக்டோபர் 14-ம் தேதி சாலையில் 25 வயது இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் வழிமறித்து தாக்கி அவரின் பாக்கெட்டிலிருந்த பணத்தை பறித்துவிட்டு அடித்து தள்ளினர். அப்போது அந்த வழியாக வந்த மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பந்தப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக எழும்பூர் காவல் ஆய்வாளராக இருந்த கருணாகரன் தலைமையிலான போலீஸார், ஆதாய கொலை உள்ளிட்ட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக இந்த வழக்கு தொடர்பாக கமல் என்ற மதுரை முத்து (28)…
Author: admin
நீங்கள் ஒரு மீன்வளத்தை வீட்டிலேயே வைத்திருக்க திட்டமிட்டுள்ளீர்களா, ஆனால் எந்த மீன்களை வைத்திருக்க வேண்டும் என்று குழப்பமடைகிறீர்களா? மீன் பராமரிப்புக்கு நீங்கள் புதியவரா? கவனிக்க எளிதான 10 தொடக்க-நட்பு மீன்வளம் மீன்களின் இந்த பட்டியலைப் பாருங்கள்:
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பயணம் செய்த பெரும்பாலான காப்பீட்டுதாரரும், அவர் நியமித்த நாமினியும் ஒருசேர உயிரிழந்துள்ளனர். இதனால், இழப்பீட்டு தொகையை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 241 பேர், கட்டிடத்துக்குள் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் குடும்பத்துடன் லண்டன் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), காப்பீட்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு காப்பீடு செய்தவர்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் காப்பீடு வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. காப்பீடு எடுத்துக் கொண்ட பாலிசிதாரர் மற்றும் அவரது நாமினி என இருவருமே இந்த விமான விபத்தில் உயிரிழந்ததால்…
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடிதம் வாயிலாக மாணவி விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள குருங்களூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.ஞானதர்ஷினி, ‘இந்து தமிழ்’ நாளிதழில் மாயாபஜார் பகுதி வாயிலாக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் நேற்று பிரசுரமானது. அதில், மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்திருந்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதைப் பார்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இரு கோரிக்கைகளையும் நிறைவேற்ற, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எம்.அருணாவுக்கு உத்தரவிட்டார். மேலும், இதை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர்…
சென்னை: பிரபல உணவகத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னையில் உணவகம் தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘சீ ஷெல்’ என்ற உணவகம் கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில், சென்னையில், அண்ணநகர், வேளச்சேரி, பெருங்குடி, ஆயிரம்விளக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தை கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் குல்ஹி மூசா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், சீ ஷெல் உணவகம், வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள மாநிலம், கொச்சி வருமானவரித் துறை அதிகாரிகள், சீ ஷெல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். இதில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம்…
பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து 445 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 579 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ…
‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50 கோடி செலவில் இந்த செட் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு கென்யாவில் நடத்தப்பட இருக்கிறது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் படப்பிடிப்பில் மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
சென்னை: சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கர்டர் விழுந்து வாலிபர் உயிரிழந்த விபத்தில் ஒப்பந்ததாரரான எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்களுக்கு இடையே கர்டர் அமைக்கும் பணி நடைபெற்றபோது 40 அடி நீளமுள்ள கர்டர் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி ரமேஷ் (40) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, நந்தம்பாக்கம் போலீஸார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் என இருதரப்பிலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில்,திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்று இருந்தது. 2 நாட்களில் அனைவரிடமும் விசாரணை நடத்தி,…
நடைபயிற்சி, எளிமையான மற்றும் பயனுள்ள உடற்பயிற்சி, ஏராளமான உடல் மற்றும் மன நன்மைகளை வழங்குகிறது. தினமும் 30 நிமிட விறுவிறுப்பான நடைப்பயணத்தை நோக்கமாகக் கொண்டிருப்பது சுகாதார வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது, இதய நோயின் அபாயங்களைக் குறைக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் அன்றாட வழக்கத்தில் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பதற்கான எளிய மற்றும் மிகச் சிறந்த வழிகளில் நடைபயிற்சி ஒன்றாகும். இது ஒலிப்பது போல் எளிதானது – அதை மாஸ்டர் செய்ய ஆடம்பரமான உபகரணங்கள் அல்லது குறிப்பிட்ட நுட்பங்கள் இல்லை. உங்களுக்கு தேவையானது ஒரு ஜோடி வசதியான காலணிகள் மற்றும் சிறிது நேரம். ஏறக்குறைய அனைத்து தரப்பு மக்களும் தங்கள் அன்றாட வழக்கத்தில் நடப்பதை இணைக்க முடியும். இது ஒரு நேரடியான மெட்ரிக், உடற்பயிற்சி சாதனங்களுடன் எளிதில் கண்காணிக்கப்படுகிறது, இது பலருக்கு அணுகக்கூடியதாக இருக்கும். ஆனால் நன்மைகளை அறுவடை செய்ய நீங்கள் நடக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்? நீங்கள் 30 நிமிட நடைப்பயணத்தை…
புதுடெல்லி: மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி இதுகுறித்து கூறும்ம்போது,, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் பணியிடங்கள் இப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் ‘சக்கரவியூகம்’ இது” என்று…
