தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல்…
Author: admin
புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் அவசியமானது. இதுபோல் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் மறைவால் இடைத்தேர்தலுக்கான கட்டாயம் ஏற்பட்டது. இத்தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர வாக்குப் பதிவு பெரும்பாலும்…
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோருபவர்கள் தேவையான ஆவணங்களை முழுமையாக இணைக்க வேண்டும். ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு இருப்பது பின்னர் கண்டறியப்பட்டால் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர்கள் தாமதமின்றி…
சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்விக் கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகள் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு…
சென்னை: வரும் ஜூன் 24 மற்றும் 25-ம் தேதிகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக எம்ஜிஆர் மாளிகையில், வரும் ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, ஜூன் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும், பகல் 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய…
விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘லவ் மேரேஜ்’. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரவு உடன் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – 30+ நாயகனான விக்ரம் பிரபுவுக்கு பல வருடங்களாக பெண் கொண்டிருக்கிறது அவரது குடும்பம். வரும் ஒவ்வொரு வரனும் ஏதேனும் காரணம் சொல்லி கைவிட்டுச் செல்கிறது. நாயகனும் அவர் குடும்பமும் இதனால் எதிர்கொள்ளும் இன்னல்களை நகைச்சுவையாக ட்ரெய்லரில் காட்டியுள்ளது படக்குழு. ஃபீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினர் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில்…
மதுரை: புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகள் கோயில்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வழிபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்க் கடவுளான முருகனை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். எனது குலதெய்வம் முருகன்தான். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்கூட முருகனை வழிபட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றதும் நான் சென்ற முதல் இடம் முருகன் கோயில்தான். அந்தக் கோயிலை கட்டியவர் இஸ்லாமியர். வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும், நாம் அனைவரும் பண்பாட்டுரீதியில் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள், சித்தர்களின் சமாதிகள் உள்ளன. புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
சேலம்: “சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: “சேலம் மாவட்டம் பாமக-வின் கோட்டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்எல்ஏ-க்களைப் பெற்றது. கடந்த சில வாரங்களாக சில சூழல்கள் நிலவிக் கொண்டு இருக்கிறது. என்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவை அனைத்தும் 100 சதவீதம் பொய்யானவை. அவை குறித்து சில நாட்களில் தெரியப்படுத்துகிறேன். கட்சிக்காகவும், சமுதாயத்துக்காகவும் சுமைகளை, அமைதியாக சுமந்து கொண்டு இருக்கிறேன். அண்மையில் நாம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்த்துள்ளது. மற்ற கட்சிகள் ஆச்சரியத்தோடு பார்த்தன. ஆனால், திமுக பயத்தோடு…
இந்த தடை செப்டம்பர் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (பட கடன்: AP) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இது டிக்டோக் மாநிலத்தில் மேலும் 90 நாட்களுக்கு செயல்பட அனுமதித்தது. அவர் வியாழக்கிழமை காலை சமூக ஊடக தளமான உண்மை சமூகத்தில் நிர்வாக உத்தரவை வெளிப்படுத்தினார். அவர் தனது இடுகையில், “டிக்டோக் மூடுவதற்கான காலக்கெடுவை 90 நாட்கள் (செப்டம்பர் 17, 2025) நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!”இந்த நடவடிக்கை அவரது நிர்வாகத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த அதிக நேரம் வழங்கும், இது சமூக ஊடக தளத்தை அமெரிக்க உரிமையின் கீழ் வர அனுமதிக்கும்.செவ்வாயன்று ஒரு அறிக்கையில், வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில், “அவர் பல முறை கூறியது போல, ஜனாதிபதி டிரம்ப் டிக்டோக் இருட்டாக இருப்பதை விரும்பவில்லை. இந்த நீட்டிப்பு 90 நாட்கள்…
நடந்து முடிந்த ஐபிஎல் 2025 போட்டிகள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் மொத்தம் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணி – பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிய இந்த இறுதிப் போட்டிதான் அதிக பார்வைகளை பெற்ற போட்டி என்று ஜியோஸ்டார் தளம் தெரிவித்துள்ளது. இந்த போட்டியை தொலைகாட்சி வாயிலாக 16.9 கோடி மக்கள் பார்த்துள்ளனர், டிஜிட்டல் வழியாக 89.2 கோடி பார்வைகள் இந்த போட்டிக்கு கிடைத்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 16.74 பில்லியன் நிமிட பார்வைகளை இப்போட்டி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ஜியோஹாட்ஸ்டார் தளம் 29% அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மிக அதிகமான…
