Author: admin

சென்னை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முழுக்க, முழுக்க ஆன்மிக மாநாடு என்றும், அங்கு அரசியல் இருக்காது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதையடு்த்து ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும், அவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து விட்டதாகவும் கூறி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதற்காக நயினார் நாகேந்திரன் நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக ஆஜரானார். அப்போது நயினார் நாகேந்திரன் தரப்பில் மூத்த…

Read More

சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட…

Read More

மதுரை: இரண்டு உடைந்து போன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “சிவகாசி அருகே விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதியாகும். வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும். இந்த தூரக்கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், அந்த இடத்தில் எதிர்காலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில்…

Read More

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் நடந்த விபத்தில் சிக்கியவரை மீட்க சென்ற காவலர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த சங்கர் குமார் (வயது 31) என்பவர் நேற்று (18.06.2025) இரவு சுமார் 8.30 மணியளவில் முறப்பநாடு அருகில் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் கை வைத்தபோது நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். காவலர் சங்கர் குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும்…

Read More

சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக 2024-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின்படி கோயில் நிலத்தில், அன்னதான கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது. வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. கோயிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டியுள்ளன. சிதிலமடைந்துள்ள பல கோயில்களை சீரமைக்க வேண்டியுள்ளது. இவற்றின் மீது கவனம் செலுத்தாமல் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாகவும்…

Read More

சென்னையில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம் என்று அவர் தெரிவித்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐமா) சார்பில் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியான ‘ஆக்மி 2025’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு கண்காட்சி அமைக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவர் பேசியதாவது: நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11.90 சதவீதம். அதில் குறிப்பிடும்படியாக, இந்திய அளவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் 2.47 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 14 தொழிற்பேட்டைகள் உருவாகியுள்ளன. மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் முதல் இடத்தையும்,…

Read More

வாஷிங்டன்: ‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் மே 7-ம் தேதி துல்​லிய தாக்​குதல் நடத்​தி​யது. இதையடுத்​து, இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதை இந்​தியா முறியடித்​தது. இருதரப்​புக்​கும் இடையே நடை​பெற்ற சண்டை மே 10-ம் தேதி முடிவுக்கு வந்​தது. இதுகுறித்து இந்​திய வெளி​யுறவு துறை…

Read More

தொலைத்தொடர்புத் துறை தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 120 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார். மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சென்னை ஐஐடி சார்பில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தொடங்கிவைத்து பேசியதாவது: தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டமானது கடந்த 2022-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்பு துறையால் கொண்டுவரப்பட்ட ஒரு முன்னோடி திட்டம் ஆகும். இது, தொலைத்தொடர்புத் துறையில் உள்நாட்டு ஆராய்ச்சி பணிகளை ஊக்குவிப்பதுடன் கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்), ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் ஆதரவு அளித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 120 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல்…

Read More

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை கடந்த 18-ம் தேதி…

Read More

தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ நடித்த படங்களுக்கு அவருக்கு சம்பளம் தரப்படாததே அவருடைய இந்த நிலைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து ஸ்ரீயின் நண்பரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ-க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கடந்த சில நாட்களாக ஸ்ரீ குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.…

Read More