Author: admin

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-வது இடத்திலும் ஈரான் 16-வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் ராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மட்டுமே ஈரான் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்வரிசையில் இருக்கிறது. எம்கே5, எம்5 ஷெர்மன், எம்22 லூகாஸ்ட் ஆகிய அதிநவீன டாங்கிகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது. ஈரானின் பழைய போர் விமானங்கள்: ஈரான் விமானப் படையில் மிக் 29, எப்4 பான்டம், எப்14டோம்காட் ஆகிய போர் விமானங்கள் உள்ளன. இவை 1979-ம் ஆண்டு ரஷ்ய மாடல் போர் விமானங்கள் ஆகும். எனினும் ஈரான் விமானப் படையில் ஷாகத் 136, மொகாஜர் 6 என்ற அதி நவீன ட்ரோன்கள்…

Read More

மதுரை: ஆஸ்திரேலியா அருகேயுள்ள தனி நாடான கைலாசாவில் நித்யானந்தா தங்கியிருக்கிறார். கைலாசாவை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், நித்யானந்தாவின் பெண் சீடர் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “மதுரை ஆதீன மடத்துக்குள் ஒரு பக்தராக நுழைய தடை விதிக்கக்கூடாது. நான் மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மனுதாரர் நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா…

Read More

பாட்னா: பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு உள்ளது. அப்போது 18 லட்சம் விண்ணப்பதாரர்கள் பிஹார் முழுவதும் 529 மையங்களில் காவலர் தேர்வை எழுதினர். வினாத்தாள் வெளியான குற்றச்சாட்டையடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக பிஹார் காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. காவலர் தேர்வுக்கான வினாத்தாள்கள விற்பனை செய்ததில் அதிகளவிலான பணம் கை மாறியுள்ளது. இது தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர்…

Read More

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 30-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்ள 35 வயதான பெட்ரா விட்டோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் அவர், தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

Read More

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க கூடும் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், எனினும், இறுதி உத்தரவை அவர் இன்னும் பிறப்பிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க இருப்பதாகவும், அதன்பிறகு ட்ரம்ப் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரான் விவகாரத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்குமே தெரியாது என்று கூறியுள்ளார். இதனிடையே ஈரான் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக அமெரிக்கா தனது கடற்படை பலத்தை மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உள்ள தனது போர்க்கப்பல்களை மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருவது பரபரப்பை…

Read More

சேலம்: திமுக ஆட்​சியை அகற்​று​வதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலத்​தில் நேற்று நடை​பெற்ற பாமக சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: சேலம் மாவட்​டம் பாமக கோட்​டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்​எல்​ஏ-க்​களைப் பெற்​றது. கடந்த சில வாரங்​களாக என் மீது வைக்​கப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் 100 சதவீதம் பொய்​யானவை. இதுகுறித்து சில நாட்​களில் விளக்​கம் அளிக்​கிறேன். கட்​சிக்​காக​வும், சமு​தா​யத்​துக்​காக​வும் சுமை​களைத் தாங்​கிக் கொண்​டிருக்​கிறேன். வன்​னியர்​களுக்​கான உள்​ஒதுக்​கீடு வழங்​கப்​படும் என்று கூறி 4 ஆண்​டு​களாக ஏமாற்​றி​விட்​டனர். இது​வரை தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த​வில்​லை. நமக்கு துரோகம் செய்த திமுக​வுக்​கு, தேர்​தலில் பாடம் புகட்​டு​வோம். கடந்த தேர்​தலில் சேலம் மாவட்​டத்​தில் திமுக ஒரு தொகு​தி​யில் மட்​டுமே வெற்றி பெற்​றது. வரும் தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் கூட திமுக வெல்​லக் கூடாது. தரு​மபுரி​யிலும் ஒரு இடத்​தில்​கூட திமுக வெற்றி பெற​வில்​லை. வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாத,…

Read More

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கைஸ்டின் தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் (கொரியா மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) புற்றுநோய் செல்களை கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு இல்லாத நுட்பங்களைப் பயன்படுத்தி இயல்பான, ஆரோக்கியமான உயிரணுக்களாக மறுபிரசுரம் செய்வதற்கான வழியைக் கொண்டு வந்துள்ளனர். மேம்பட்ட அறிவியலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, உலகளாவிய மருத்துவ சகோதரத்துவத்தை திகைக்க வைத்தது மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் கடுமையான கீமோதெரபிகளை உள்ளடக்கிய நோயாளிகளுக்கு நம்பிக்கையை புதுப்பித்துள்ளன.திருப்புதல் புற்றுநோய் செல்கள் நல்லது? விஞ்ஞானிகள் இப்போது சாத்தியம் என்று கூறுகிறார்கள்கிளாசிக் புற்றுநோய் சிகிச்சைகள் பொதுவாக வேதனையான பக்க விளைவுகளையும், அருகிலுள்ள சாதாரண திசுக்களை அழிப்பதையும் கொண்டு செல்கின்றன. கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு புற்றுநோய் செல்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஆனால் அவை மிருகத்தனமானவை மற்றும் உடலின் வலிமையைத் தூண்டலாம். இந்த புதிய நுட்பத்தைப் பற்றி மிகவும் புரட்சிகரமானது என்னவென்றால், இது புற்றுநோய் செல்களைக் கொல்லாது;…

Read More

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று டெல்லி திரும்பியது. டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்கு இண்டிகோ விமானம் (6E 2006) இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று காலை வழக்கம்போல் லே நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சுமார் 180 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் லே நகரை அடைந்ததும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு தரையிறங்க முடியாமல் விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விமானம் மீண்டும் இயக்கப்படுவதற்கு முன் அதில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பயணிகள் லே நகருக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று மற்றொரு சம்பவமாக ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட்…

Read More

காலே: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கில் பதிலடி கொடுத்தது. காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 151 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஸ்பிகுர் ரகிம் 163, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 148, லிட்டன் தாஸ் 90 ரன்கள் விளாசினர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 153.4 ஓவர்களில் 495 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நஹித் ரானா ரன் ஏதும் எடுக்காத நிலையில் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தார். ஹசன் மஹ்மூத் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்களை வீழ்த்தினார். திலன் ரத்னாயகே, தரிந்து ரத்னாயகே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இலங்கை…

Read More

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்கும் பணியை அந்த நாடு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய அமெரிக்க தூதரகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமானம் மூலம் வெளியேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ எத்தனை தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. அதேபோன்று, தரைவழியாக ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்தும் தெரியவில்லை. இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி எக்ஸ் தளத்தில் அமெரிக்க மக்களை வெளியேற்ற விமானம் மற்றும் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பதற்கு சற்று முன்னதாகவே அமெரிக்க மீட்பு விமானம் இஸ்ரேலில் தரையிறங்கி விட்டது” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More