Author: admin

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பல்லி விழுந்த பயறு வழங்கியதாக பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 6 நாள் பயிற்சி முகாம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 112 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி இடைவேளையின்போது தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று முன்தினம் (புதன்) தேநீரும் பெரும்பயறும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததது. அப்போது பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், பெரும்பயறு இருந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மருத்துவ கண்காணிப்பு: இதற்கிடையே, 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பெரும்பயறை சாப்பிட்டு முடித்துவிட்டனர்.…

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 20) பவுனுக்கு ரூ.440 என குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,680-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.74,120-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஒரு வார காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 20) கிராமுக்கு ரூ.55…

Read More

வீட்டிற்கு ஒரு லாப்ரடோர் ரெட்ரீவர் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கிறீர்களா? இந்த பிரபலமான செல்ல நாய் இனத்தைப் பற்றி அறிய சில உண்மைகளை இங்கே பட்டியலிடுகிறோம், நீங்கள் ஒரு வீட்டைப் பெறுவதற்கு முன்பு:

Read More

பெங்களூரு: ​நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேர​மாக வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. கூடு​தல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்த்​தா​லும் ஒரு மணி நேரம் மட்​டுமே பார்க்க வேண்​டும். மூன்று மாதங்​களில் அதி​கபட்​ச​மாக 50 மணி நேரம் மட்​டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என விதி​முறை வகுக்​க‌ப்​பட்​டுள்​ள‌து. கர்​நாடக அரசின் இந்த முடிவுக்கு தொழிலா​ளர் சங்​கங்​களும் ஐடி ஊழியர் அமைப்​பு​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இதனை கர்​நாடக ஐடி…

Read More

அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் போர்டோ கிளப் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது இன்டர் மியாமி அணி. இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, ஃப்ரீ கிக் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அபார கோல் பதிவு செய்தார். அமெரிக்காவில் உள்ள அட்லான்டா நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘போர்ட்டோ’ மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘இன்டர் மியாமி’ அணிகள் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இரு அணிகளும் ‘குரூப் -ஏ’வில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் தொடரின் முதல் போட்டியை டிரா செய்தன. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது. ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றது போர்ட்டோ. முதல் பத்தி முழுவதும் 1-0 என்ற…

Read More

மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் புதின், ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகாவ் நேற்று மாஸ்கோவில் கூறுகையில், “ஈரான் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள தங்கள் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் புதினும் அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர். இந்த விஷயத்தில் இரு தலைவர்களும் ஒரே விதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றனர்” என்றார். இஸ்ரேல்-ஈரான் போரை உடனடியாக நிறுத்தவும், ஈரானின் அணுசக்தி பிரச்சினையை தீர்க்க அரசியல் மற்றும் ராஜதந்திர…

Read More

சென்னை: சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வளர்ப்பு நாய் கடித்து குதறியது. சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் தர்மன் (45). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மலேரியா தடுப்பு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் பாரதி தனது வீட்டருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில், லட்சுமி என்பவர் அவரது வளர்ப்பு நாயை அந்த வழியாக அழைத்து சென்றார். அப்போது, திடீரென அந்த நாய் சிறுமியின் மீது பாய்ந்து, தொடை மற்றும் இடுப்பில் கடித்து குதறியது. இதில், பலத்த காயமடைந்த சிறுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, பாரதியின் தந்தை தர்மன், நாயின் உரிமையாளர் லட்சுமியிடம் முறையிட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், லட்சுமி அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திரமடைந்த தர்மன், ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.…

Read More

இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈரானின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனமான நோபிடெக்ஸில் இருந்து 90 மில்லியன் டாலர்களை திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.780 கோடியாகும். இதுகுறித்து பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்: நோபிடெக்ஸ் கிரிப்டோகரன்சி திருட்டுக்கு பொறுப்பேற்றுள்ள ஹேக்கர்கள் குழு, “நோபிடெக்ஸில் எஞ்சியிருக்கும் சொத்துகள் இப்போது முழுமையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன” என்று அதன் டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் வேகமாக நடைபெற்று வரும் அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய தடைகளை தகர்க்கவும், போராளிகளுக்கு பணத்தை மாற்றவும் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் வாயிலாக நோபிடெக்ஸ் உதவியதாக அந்த குழு குற்றம்சாட்டியுள்ளது என்று பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நோபிடெக்ஸ் நிறுவனம் ஹேக்கர்களின் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் செயலி மற்றும் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நோபிடெக்ஸ் நிறுவனத்தில், பிட்காயின், எத்திரியம், டாஜிகாயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் ஈரான் கிரிப்டோகரன்சி சந்தையில் இந்த திருட்டு…

Read More

மற்றவர்களைப் பாதிப்பது என்பது கையாளுதல் அல்லது தந்திரங்களை விளையாடுவது பற்றியது அல்ல-அதற்கு பதிலாக, இது மனித நடத்தையைப் புரிந்துகொள்வது மற்றும் உளவியல் அடிப்படையிலான ஹேக்குகளைப் பயன்படுத்துவது பற்றியது, நீங்கள் விரும்புவதைப் பெற மக்களை இணைக்கவும் ஊக்குவிக்கவும். நீங்கள் ஒரு குழுவை வழிநடத்துகிறீர்களோ, உறவுகளை உருவாக்குகிறீர்களோ, அல்லது உங்கள் கருத்துக்களைப் பெற முயற்சிக்கிறீர்களோ, மற்றவர்களை மிகவும் புஷ் இல்லாமல் எவ்வாறு பாதிக்க வேண்டும் என்பதை அறிவது உங்களை மகத்தான வெற்றிக்கு இட்டுச் செல்லும். இது பலருக்குத் தெரியாத ஒரு கலை, நீங்கள் அதைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்வதற்கான சில புத்திசாலித்தனமான உளவியல் அடிப்படையிலான வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குன்வர் பாஸித் அலி கூறுகையில் “வரவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இதை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறுவது முக்கியமாகிறது. ஏனெனில், இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பன்முகத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது. விரிவான இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு முஸ்லிம் சாதிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தும். இது, அவர்களுக்கு பயனுள்ள…

Read More