புதுடெல்லி: ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கசிவு மில்லியன் கணக்கான இணைய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் இணையதள பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்வது, அவர்களது அடையாளங்களை களவாடுவது, பிஷ்ஷிங் மோசடி போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக தகவல். இது பல ஆண்டுகாலமாக டார்க் வெப்பில் கிடைக்கும் பழைய தரவுகள் இல்லை என்றும், ‘இன்போஸ்டீலர்கள்’ எனப்படும் மால்வேர் மூலம் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு போன்றவை பயனர்களின் சாதனங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, ஹேக்கர்கள் வசம் சென்றுள்ளது. அதை கொண்டு சம்பந்தப்பட்ட பயனர் கணக்கில் லாக்-இன் செய்வது அல்லது அதை டார்க் வெப்பில் விற்பனை செய்வது…
Author: admin
துபாய்: தனது 17 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இதை பகிர்ந்துள்ளார். சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற நிலையில் பிரான்ஸில் இருந்து வெளியேறலாம் என கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. “எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான். எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன். அவர்கள் யாரையும் சாராமல் சுயமாக, சுதந்திரமாக வளர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு…
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை தரப்பில் ஆவணங்கள்…
2024 ஆம் ஆண்டில் நடிகர் ராம் கபூரின் குறிப்பிடத்தக்க எடை இழப்பு பயணம் 18 மாதங்களில் இயற்கையாகவே 55 கிலோவுக்கு மேல் கொட்டியது. அறுவை சிகிச்சையைத் தவிர்த்து, 51 வயதான ஒரு எளிய மற்றும் பயனுள்ள மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டார்: ஒரு நாளைக்கு இரண்டு உணவு, சிற்றுண்டி இல்லை, மாலை 6:30 மணிக்குப் பிறகு உணவு இல்லை. நடிகர் ராம் கபூர் 2024 இல் 55 கிலோவுக்கு மேல் சிந்தினார். அவரது எடை இழப்பு பயணம் அதிசயத்திற்கு ஒன்றும் இல்லை. எடை இழப்பை அடைய அவர் அறுவை சிகிச்சை செய்ததாக மக்கள் சந்தேகித்தாலும், நடிகர் தனது பயணம் படிப்படியாகவும் முற்றிலும் இயற்கையாகவும் இருப்பதை வெளிப்படுத்தினார். 51 வயதான அவர் 18 மாதங்களில் 55 கிலோவை இழந்தார், அதுவும் 3 எளிய உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலம். ஒரு நாளைக்கு இரண்டு உணவு(படம் மரியாதை: பேஸ்புக்)ராம் கபூரின் எடை இழப்பு உத்தி புத்துணர்ச்சியுடன் எளிமையானது.…
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இன்று (ஜூன் 20) ஹெடிங்லீயில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதைத்தான் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார். மேலும் 4 முழுநேர பவுலர்கள் அணியில் இருப்பார்கள். ஆகவே 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றுதல்தான் வெற்றிக்கு வழி வகை செய்யும். எவ்வளவுதான் ரன்கள் அடித்தாலும் போட்டியை வெற்றி பெற எதிரணியின் 20 விக்கெட்டுகள் அவசியம் என்கிறார் ஷுப்மன் கில். “இதுதான் எங்கள் முக்கிய விவாதப்புள்ளியாக இருந்தது. எப்படி 20 விக்கெட்டுகளைச் சாய்ப்பது என்பதுதான் விவாதமே. பியூர் பேட்டர்கள், ஒரு ஆல்ரவுண்டர், 4 முறையான பவுலர்கள் என்றே அணியின் சேர்க்கை இருக்கும். கேப்டன்சி சுமை எல்லாம் இல்லை. ஏனெனில், உள்ளபடியே கூற வேண்டுமெனில் பேட்டிங்கில் களமிறங்கும் போது நான் கேப்டன் என்ற சுமை அழுத்தம் இல்லாமல் வெறும் பேட்டராகவே சிந்திப்பேன். எதிரணி பவுலர்களை எப்படி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இரண்டு விமானப்படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய இந்தியா, மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளின் இரவில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி கடும் சேதத்தை விளைவித்தது. இதன் காரணமாக, வேறு வழியின்றி…
தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 19-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அன்றிரவு 10 மணியளவில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக பதிவானது. அதேபோல, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கடந்த 18-ம் தேதி விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர் இன்று (20-ம் தேதி) காலை ஒகேனக்கல்லை அடைந்தது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் பிரதான அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதேபோல, ஐவர்பாணி என்று அழைக்கப்படும் ஐந்தருவி பகுதியிலும் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை…
அன்றாட வீட்டுப் பொருட்களில் நச்சுகள் காரணமாக அல்சைமர் நோயின் அதிகரித்து வரும் வழக்குகள் குறித்து நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட் லவ் எச்சரிக்கிறார். ஏர் ஃப்ரெஷனர்கள் தீங்கு விளைவிக்கும் VOC களை வெளியிடுகின்றன, அதே நேரத்தில் வாசனை மெழுகுவர்த்திகள் டோலுயினுக்கு உமிழும், இது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அல்லாத குச்சி வாணலிகள், குறிப்பாக டெல்ஃபான்-பூசப்பட்டவை, ஃவுளூரைடு சேர்மங்களை உணவில் கசக்கி, மூளை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும். A2021 ஆம் ஆண்டில் உலகளவில் 57 மில்லியன் மக்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 மில்லியன் புதிய வழக்குகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமான அல்சைமர் நோய் அதிகரித்து வருகிறது, மேலும் நரம்பியல் விஞ்ஞானி ராபர்ட் லவ் என்பது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய அன்றாட வீட்டுப் பொருட்களின் அலாரத்தை ஒலிக்கிறது.அல்சைமர் நோயைத் தடுக்க மக்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம்…
புதுடெல்லி: வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க முடிவு செய்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை 3 வெளிநாட்டு சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அகலம் அதிகமாக உள்ள விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக 15% குறைப்பதாக ஏர் இந்தியா நேற்று அறிவித்தது. மேலும், கடந்த சில நாட்களாக பல்வேறு விமான சேவைகளை பாதுகாப்பு கருதி நிறுத்தி உள்ளது. இந்நிலையில், ஏர் இந்தியா இன்று(ஜூன் 20) வெளியிட்ட அறிக்கையில், வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புகள் ஜூன் 21 முதல் அமலுக்கு வரும், குறைந்தது ஜூலை 15 வரை நீடிக்கும். மேலும், ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை 3 வெளிநாட்டு சேவைகளை…
சென்னை: உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அகதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம். நமது திராவிடமாடலில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம். போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
